யந்திர ஜாலம் - 1



" மந்திர"; " யந்திர"; "தந்திர"; ஓளஷத"; "அஸ்திர" இந்த  ஐந்திலும் நமது ஞானிகள், சித்தர்கள், ரிஷிகள் முன்னோடியாக இருந்துள்ளனர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய முன்னோர்கள் தேர்ச்சி பெற்று இருந்துள்ளார்கள்.

இந்த கலை குரு சிஷ்யப் பரம்பரையாக வந்துள்ளது, காரணம் இது தீயவர்கள் கையில் கிடைக்க கூடாது என்பதற்காக. ஆக இந்த கலை தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அழிந்து வரும் கலைகளில் இதுவும் ஒன்று. மேலும் யந்திரம், மந்திரம் இன்னொரு பதிவில் நான் சொல்கிறேன்.

குபேர யந்திரம், சுதர்சன யந்திரம் போன்ற யந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், ஏன் சிலர் வீட்டு பூஜை அறையில் கூட இந்த யந்திரம் வைத்து பூஜை செய்து கொண்டிருப்பீர்கள். இந்த யந்திரம் உரு ஏற்றியதா என்று கூட தெரியாது, ஆனால் அதை வழிபட்டு கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு யந்திரமும் செயல்பட வேண்டும் என்றால் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும், அப்போதுதான் அதன் சக்தி, வீரியம் நாம் அனுபவிக்க முடியும்.

ஜாதகம் என்பது நவகிரகங்களின் ஆதிக்க ஒருவர் வாழ்க்கையின் உயர்வதும் தாழ்வதும் இந்த நவக்கிரகங்களின் கையில் உள்ளது, நடக்கும் தசா புத்தி ஒருவருக்கு நன்மை மற்றவருக்கு தீய பலன் கொடுக்கும்; ஆக நவகிரகங்களும் நடப்பு தசையும் ஒருவர் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது; இதிலிருந்து நாம் கெடுதல்களை (கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும்) விலக்கி நன்மை அடையவே இந்த ரகசியத்தை உங்கள் முன்பு சொல்கிறேன். இதை எனக்கு என் குருநாதர் (சித்தர், சுவாமிஜி, குரு என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்) சொன்னது இந்த யந்திர முறை மிகவும் சக்தி வாய்ந்தது.


நவகிரகங்களின் மூல மந்திரம்


சூரியன்



                                                            சூரியன்  -.            ‌‌‌‌‌‌க்ரீம் 


சந்திரன்


                                                                 சந்திரன்.               ரீம்

செவ்வாய்:

                                                             
                                                                செவ்வாய்.            ஹரீம்


புதன்:


                                                                
                                                               புதன்.                      ச்ரீம்


வியாழன்:-


                                                             வியாழன்.              ஒளம்


சுக்கிரன்:-


                                                             சுக்கிரன்.                க்லீம்


சனி பகவான்:-



                                                                   சனி.                         ஐம்


ராகு:-


                                                                  ராகு.                        ஹ்ரெளம்


கேது:-

                                                                     கேது.                      செளம்


உங்கள் ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்கள் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியில் அந்த கிரகத்திற்கு உண்டான மூலமந்திரத்தை எழுதவும் உதாரணம் கீழே.


உதாரண ஜாதகம்



மூல மந்திரம் எழுதிய ஜாதகம்


           
எதில் எழுதுவது


செப்புத்தகடு 4-4; அல்லது 8-8; அல்லது. 11-11 அளவில் வாங்கிக் கொள்ளவும் தங்கள் ஜாதகத்தை எழுத வேண்டும் தங்களால் எழுத முடியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் தகடு வாங்கும் இடத்தில் கேட்டால் தகடு எழுதுபவர் பற்றி சொல்லுவார்கள். அவர்களிடம் கொடுத்து எழுதிக் கொள்ளவும்.


சுத்தி செய்யும் முறை


யந்திரத்தை பசும் பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், விபூதி கொண்டு சுத்தம் செய்யவும் பிறகு யந்திரம் நான்கு முனையிலும் புனுகு பூசவும்.
இந்த யந்திரத்தின் பின்புறம் ஒரு மயில் இறகு மற்றும் யாருடைய ஜாதகத்தை எழுதி வைத்தீர்களோ அவர்களுடைய சிறு புகைப்படம் வைத்து பிரேம் செய்து கொள்ளவும்.


பூஜை செய்யும் முறை


யந்திரத்தை நிறைந்த அமாவாசை அன்று பூஜை அறையில் வைத்து மலர் தூவி தூபதீபம் காட்டவும்.அதன் பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் குறைந்தபட்சம் இருபத்தேழு முறை சொல்ல வேண்டும், 48 முறை அல்லது 108 முறை உத்தமம். இந்த பூஜை செய்யும் பொழுது உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்டிப்பாக தெரியும்.


மந்திரம்


"ஓம் வ்வா சிவா"


எம்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்