யந்திர ஜாலம் - 8 (பஞ்சபூத சக்கரம்)



பரமாய அஞ்செழத்துள் நடுவாகப்
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி
பரமாய சிற்பம் வாம்பரத் தோதிற்
பரமாய வாசி பயமாய் நின்றே.

                                                                                                    திருமந்திரம்


விளக்கம்


 பரமாய அஞ்செழத்துள் நடுவாக - என்றால் உலகில் எல்லாவற்றுக்கும் மேலான ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம" வின் நடு எழுத்தாகிய "ய". இந்த ஐந்தெழுத்தை "யநவசிம";  "மவயநசி"; "சியநமவா"; "வாசிமயந"என்று மாற்றி மாற்றி எழுதி தியானிக்கும் முறையை எண்ணி உயர்வு அடையவேண்டும்.



நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.


                                                                                                    திருமந்திரம்



விளக்கம்


ஆம்பலச் சக்கரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பூதங்களைக் குறிப்பதாகவும் இருக்கின்றது. இந்த ஐந்து பூதங்களும் ஐந்து நிறங்களும் அங்கு விளங்குகின்றன. திரு அம்பலச் சக்கரத்தில் அடைபட்ட எழுத்துக்கள் சரியாக நிறுத்தப்படுமானால், நிறுத்தப்பட்ட எழுத்துக்களில் பரம்பருள் பொருந்தி நிற்பான்.






"நமசிவய"எம்பெருமானின் மூல மந்திரம் ஆகும். இதில்


 "சிவயநம" என்னும் மந்திரம் ஆகாயத்தை குறிப்பதாகும். இதற்குண்டான பீஜமந்திரம் "ஹம்".


"மசிவயந" என்னும் மந்திரம் வாயு குறிப்பதாகும். இதற்குண்டான பீஜா மந்திரம் "யம்".


"நமசிவய" என்னும் மந்திரம் அக்னியை குறிப்பதாகும். இதற்குண்டான பீஸா மந்திரம் "ரம்".


"யநமசிவ" என்னும் மந்திரம் பிருதிவி குறிப்பதாகும். இதற்குண்டான பீஜா மந்திரம் "லம்"


"வயநமசி"என்னும் மந்திரம் அப்புவை குறிப்பதாகும். இதற்குண்டான பீஜா மந்திரம் "வம்".


ஐந்து பூதங்கள் அதாவது பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் ஆகாயம் காற்று நெருப்பு நீர் மற்றும் மண் இவைகளுக்கு உரிய பீஜ மந்திரங்கள் தான் மேலே சொல்லப்பட்டிருக்கிறது.



பஞ்ச பூதங்களுக்கும் தனித்தனியாக எந்திரங்கள் இருக்கிறது அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


பிருதிவி (மண்)


வடிவம்.                    சதுரம் (நான்கு மூலைகள் கொண்டது)

நிறம்.                        பொன்

பட்சி.                         வல்லூறு

சுவை.                      நினைப்பு

வசிய மந்திரம்.    ஓம் நங் கிலி ரீங் (உரு-1லட்சம்)



யந்திரம்





பூஜாவிதி


வெள்ளி அல்லது பஞ்சலோகத் தகடு மேலே உள்ள எந்திரத்தை வரைந்து கொள்ள வேண்டும் பூஜைக்குரிய பொருளோடு இதில் குறிப்பிட்ட மந்திரத்தை உருவேற்றி வர வேண்டும்.


பூமி வசமாகும் சகல சித்தியும் உண்டாகும்.



அப்பு (நீர்)



வடிவம்.                              மூன்றாம் பிறை 

நிறம்.                                  வெள்ளை

பட்சி.                                  ஆந்தை

சுவை.                               துவர்ப்பு

வசிய மந்திரம்.            ஓம் மங் சிரீங் ரிங் சிம் ( உரு - 1 லட்சம்)




யந்திரம்






பூஜாவிதி



எந்திரத்தை பஞ்சலோக தகுடு அல்லது வெள்ளித் இடத்திலோ வரைந்து கொள்ள வேண்டும் முறைப்படி பூஜை செய்து உரு ஏற்றினால் சித்தியாகும் சகலமும் வசியம் ஆகும்.


நீர் வசியமாகும்.


தேயு (நெருப்பு)


வடிவம்.                                                    முக்கோணம்

நிறம்.                                                        சிவப்பு

பட்சி.                                                         காகம்

சுவை.                                                      துவர்ப்பு

வசிய மந்திரம்.                                    ஓம் சிரி சிம் கிலி (உரு 1 லட்சம்)



யந்திரம்







பூஜாவிதி


செப்பு அல்லது தங்க தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து உருவேற்ற வேண்டும்.


சகல சக்தியும் கிடைக்கும்.

நெருப்பு வசியமாகும்.



வாயு (காற்று)


வடிவம்.                                          அறுகோணம்

நிறம்.                                              நீளம்

பட்சி.                                              கோழி

சுவை.                                           புளிப்பு

வசிய மந்திரம்.                         ஓம் சிவநாயநமா நம் ரிங் சிம் (உரு 1 லட்சம்)



யந்திரம்






பூஜாவிதி



இந்த யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து கொள்ளவும். இந்த தகட்டை முறைபடி பூஜை செய்து தூபதீபம் காட்ட வேண்டும்.


காற்று வசியமாகும்.



ஆகாயம் ( வானம்)

வடிவம்.                                                                  வட்டம்

நிறம்.                                                                      படிகம்

பட்சி.                                                                       மயில்

சுவை.                                                                    கசப்பு

வசிய மந்திரம்.                                                 ஓம் யங் சிம் சிவ (உரு - 1 லட்சம்)



யந்திரம்





பூஜா விதி



மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து முறைப்படி பூஜை செய்து காட்டி வரவேண்டும்.


வானம் வசப்படும்.



பஞ்சபூத எந்திரத்தை பூஜை முடிந்ததும் பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால் நன்மை பயக்கும் அல்லது தங்கத்தில் டாலராக செய்து அணிந்து கொண்டாலும் நற்பலன்கள் கிடைக்கும்.



ஒரு தட்டில் பரப்பி அதில் பஞ்ச பூதங்களுக்கு உண்டான எந்திரத்தை வரைந்து அதற்குண்டான வசிய மந்திரத்தை தினமும் 108 முறை  ஒரு மண்டலம் ஜெபித்து உரு ஏற்றி வர வேண்டும் பிறகு அந்த விபூதியை தேவையானவர்களுக்கு கொடுக்க அதற்குண்டான பலன்கள் கிடைக்கும்.



பிருதிவி.                                     குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அப்பு.                                            எதிரி தொல்லை இருக்காது.           

தேயு.                                            கடன்தொல்லை நீங்கும் .

வாயு                                            வெக்கை நோய் தீரும்.

ஆகாயம்                                   கர்மவினை விலகும்.



வாழ்க வளமுடன்





கருத்துரையிடுக

0 கருத்துகள்