(வேதாத்திரி மகரிஷி)
"கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது இளமையில் வறுமை கொடியது"
என்றால் தமிழ் கிழவி.
வறுமை என்றால் என்ன?
கடவுள் என்பது எது?
ஏன் காணமுடியவில்லை?
ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?
கேள்விகள் அவர் மனதில் தோன்றியது அதன் விளைவே மனவளக்கலை மன்றம் தோன்றியது.
தனது 35வது வயதில் அவருக்கு கிடைத்த இறை உணர்வை தனது சீடர்களுக்கு கற்றுத் தந்தார்.மேலும் சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்று தேர்ச்சிப் பெற்றார்.
ஆன்மீகம்
தனது சகோதரி மகள் லோகாம்பாள் அவர்களை மணந்து இல்லற வாழ்க்கையை தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மிகத் தேடலில் அதிக முயற்சி, இடைவிடாத சாதகம் செய்து தனது 35வது வயதில் ஞானம் பெற்றார்.
அவரது தாரக மந்திரம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
அருட்காப்பு
அருட்பேராற்றல், இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக.
வாழ்க வளமுடன்
சங்கல்பம்
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்.
அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களால் பயன்படுத்தப்பட்டு அனுபவத்தில் பல நன்மைகளை கண்டு மனவளக்கலை மன்ற அன்பர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஒன்று இந்த பூஜா விதி முறை.
ஆகையால் அன்பர்கள் நம்பிக்கையுடன் இந்த பூஜையை செய்தால் உங்கள் வாழ்வில் நிச்சயமாக அருள் தந்தையின் அருள் கிடைக்கும். இந்தப் பூஜை செய்ய செய்ய உங்கள் வாழ்க்கையில், உங்கள் குடும்பத்தில், நிம்மதி சந்தோசம், செல்வம், கிடைக்கும்.
பூஜா விதி முறை
வெள்ளிக்கிழமை அதிகாலை பூஜை அறையில் ஐந்து முக விளக்கு தாமரை திரி மற்றும் பசு நெய்யினால் விளக்கேற்றுவோம் ( திருவிளக்கு கட்டுரையைப் பார்க்கவும்-பொட்டு வைக்க).
விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு சுக்கிர ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் 108 முறை சொல்ல வேண்டும்.
குத்துவிளக்கு அஷ்டலட்சுமி ஆக பாவித்து ஆவாஹனம் செய்து ஒரு தட்டில் 108 மல்லிகைப்பூ அல்லது நாணயத்தை பரப்பி கையில் மல்லிகை பூ அல்லது நாணயத்தை எடுத்து மூடிக்கொண்டு கண்களையும் மூடிக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி குத்துவிளக்கின் பாதத்தில் வைக்கவும். இதுபோல் 108 முறை செய்ய வேண்டும்.தூபதீபம் காட்டி பூஜை முடித்த பின் அங்கு பூஜையில் வைக்கப்பட்ட நைவேத்தியத்தை தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் அனைவரும் சாப்பிடலாம் பிறருக்கும் கொடுக்கலாம்.
நைவேத்தியம்
பால் பாயாசம் அல்லது அதிரசம் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு 2 எலுமிச்சம்பழம் பூ இவைகளை படைத்தல் வேண்டும்.
தன ஆகர்ஷன மந்திரம்
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் க்லியும் சவ்வும்
சந்திர லட்சுமியை நமஹ
ஹ்ரம் ஹ்ரீம் சொர்ண லக்ஷ்மியே நமஹ
வங் சங் டங் ரிங் வீர லட்சுமியே நமஹ
ஓம் ஹம் சர்வ பாக்கிய லட்சுமியை நமஹ
நவ்வும் மவ்வும் நடுவேழத்தாகிய
சூரிய லட்சுமியே நமஹ
தெய்வ வஸ்ய, பூத வஸ்ய, லோக வஸ்ய, ராஜ வஸ்ய, ஜன வஸ்ய, புருஷ வஸ்ய, ஸ்திரீ வஸ்ய, புத்ர சம்பத் வஸ்ய, நாக லோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜீவ பிராணிகளும் உன் வசமானார் போல் எங்கள் குடும்பம் வசமாக வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா.
முக்கிய குறிப்பு
எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கி பிறகு விநாயகரை வணங்கி பூஜையை தொடங்க வேண்டும் அப்போதுதன் உங்களுக்கு
வெற்றி கிடைக்கும்.
வாழ்க வளமுடன்.
4 கருத்துகள்
What to do with 108 coins after the Dhana Aakarshana Puja.? If it is flowers can be put in the garden or in running water.Please do clarify in this regard.
பதிலளிநீக்குமல்லிகைப்பூ பயன்படுத்தினால் பூஜை முடிந்து மறுநாள் ஓடும் நீரில் அல்லது தோட்டத்தில் போட்டுவிடவேண்டும் நாணயம் பயன்படுத்தினால் ஒரு டப்பாவில் (பூஜை அறை அல்லது பணம் வைக்கும் அறையில்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் மீண்டும் அடுத்த வாரம் பயன்படுத்தவேண்டும். நான் தொடர்ந்து 52 வாரம் பூஜை செய்தேன் இப்போதும் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் நல்ல மாற்றம் ஏற்பட்டது நீங்களும் முயற்சி செய்யுங்கள் மகாலட்சுமி அருள் உங்களுக்கு கிடைக்கும்.
நீக்குநல்ல பதிவு.மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.நன்றி.
பதிலளிநீக்குGood Article, when I listened Maharishi's voices, it looks like Kram Kreem, but you have written as ஹ்ரம் ஹ்ரீம். Which one is correct. Please clarify.
பதிலளிநீக்கு