About Us


நான் உங்கள் செந்தில் பாபு கடந்த 20 ஆண்டு காலமாக ஜோதிடம் பயின்று வருகிறேன் இன்னும் படித்து கொண்டுதான் இருக்கிறேன், காரணம் ஜோதிடம் என்பது மகா சமுத்திரம். எனது குருநாதர் தெளிவுபடுத்திய விசயங்கள் மற்றும் என் அறிவுக்கு உட்பட்டு என்னால் உணர்ந்துகொண்ட பரிகாரங்கள் இந்த தளத்தில் ஒளிவு மறைவு இன்றி சொல்லி வருகிறேன். கண்டிப்பாக யாராவது ஒரு அன்பருக்கு எனது பதிவு பயன்படும் என்று நம்புகிறேன்.

ஜாதகம் ஒருவன் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலனை காட்டுகிறது, அதனால் ஜாதகப்படி சொல்லப்பட்ட பலன் முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவினால் வரக்கூடிய பலன் ஆகிய இரண்டுமே இப்பிறவியில் இறைவன் அருளால் நாம் லேசாகும் அளவுக்கு மாற்றிவிடலாம். மார்க்கண்டேயனை போல. 

ஆயக்கலை 64 அதில் ஜோதிடம் ஒரு கலையாகும் அதில் உட்பிரிவு பரிகாரம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக வாழ்வில் ஏறக்குறைய எதையும் முயற்சியால் அடையலாம். செய்த செயல்களின் பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்றாலும் பிராரப்தத்தின் சக்தியை இறைவனால் மிகவும் குறைத்து விடலாம்.

ஜபம், ஹோமம், தியானம், பூஜை போன்ற பரிகாரங்கள் பிராரப்தத்தின் கெட்ட பலன்களை அளவை குறைத்து வடலாம்.

இந்தத் தளத்தில் பரிகாரங்கள் மற்றும் ஆன்மிக சிந்தனைகளை நீங்கள் காணலாம் உங்களுக்கு தேவையான விஷயங்கள் இதில் கண்டிப்பாக இருக்கும்.

வாழ்க வளமுடன்
.

கருத்துரையிடுக

0 கருத்துகள்