யந்திர ஜாலம் - 3 (வியாபாரம் செழிக்க)



எந்த ஒரு பூஜையோ, தெய்வத்தையோ வணங்கும் போது முதலில் விநாயகரை வழிபட்டு அவருடைய ஆசி, அனுகிரகம் பெற்றால் அந்த காரியம் தடைகள் இல்லாமல் நடைபெறும். அவரையே முதல் கடவுளாக வைத்து பூஜை செய்பவர்களுக்கு "காணபத்தியம்" என்று பெயர். அவருடைய அனுகிரகம், அருள் இருந்தால் எந்த காரியமும் எளிதில் செய்து விடலாம்.


கணபதி என்றால் கணங்களுக்கு அதிபதி, விக்னேஸ்வரர் என்றால் தொல்லைகள், தடைகள் நீக்குபவர் என்று பொருள். விநாயகர் என்றால் அனைவருக்கும் மேலான முதல்வன் என்று அர்த்தமாகும்.


விநாயகர் அவதரித்த திதி சதுர்த்தி திதி என்கிறது புராணங்கள். மிக எளிமையானவர், பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று சொல்வதும் உண்டு. விநாயகரை நினைத்து  சாணத்தை பிடித்து வைத்தாலும் அதில் அவர் இருப்பார்; உதாரணமாக  பசு மாட்டு சாணம் ஒரு வாரம் இருந்தால் அதில் வண்டுகள் பூச்சிகள் வந்து விடும்.  சாணத்தைப் பிடித்து வைத்தால் (மார்கழி மாதம் வாசலில் கோலம் போட்டு சாணம் பிடித்து உச்சியில் பூ வைப்பார்கள்)
அதில் வண்டுகள் வருவதில்லை நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் செய்து பார்க்கலாம்.


விநாயகரின் எளிமைக்கு பின்வரும் பாடல்...


"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் 
ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்தடியிலே 
வீற்றிருக்கும் பிள்ளையார்,வினைகள் தீர்க்கும் பிள்ளையார்; 
மஞ்சளிலே செய்யினும் மண்ணினாலே செய்யினும் 
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் வைத்து பிள்ளையார்;
அவல், பொரி, கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
இஷ்டம்போல தின்னுவார் கஷ்டங்களை போக்குவார்."





பிரணவமும் - பிள்ளையாரும்


பிரணவம் தான் எல்லாவற்றுக்கும் முதல்வன். அதுபோல் விநாயகரும் எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர், விநாயகரே பிரணவத்தின் ஸ்வரூபம் ஆனைமுகம் வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்து பார்த்தால் பிரணவத்தின் வடிவம் தெரியும்.


விநாயகரும் - ஔவ்வையாரும்.


தமிழ் கிழவி விநாயகர் உபாசகி பதிவு செய்யப்பட்ட ஒரு கதை உண்டு அது...சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் சேரமான் நாயனாரும் கைலாசம் புறப்பட்டார்கள் ஔவையை அழைத்துப் போக விரும்பினார்கள், அப்போது ஔவை விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார்; 


இவர்கள் விரைவாக பூஜை முடித்து தங்கள் உடன் வரவேண்டும் என்று அவசரப் படுத்தி அழைத்தார்கள், ஆனால் தமிழ் கிழவி பூஜையை சீக்கிரம் செய்ய முடியாது தாங்கள் இருவரும் தங்கள் பயணத்தை தொடரும் படி கேட்டுக் கொண்டாள். 


பூஜை முடித்தவுடன் விநாயகர் பிரசன்னம் ஆனார்; ஔவையை தன் தும்பிக்கையால் ஒரே வீச்சில், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரன் நாயனாரும் வருவதற்கு முன்பே ஔவையை கைலாசத்தில் சேர்த்துவிட்டார்; இதுதான் விநாயகர்.


விநாயகர் அகவல் பாடியிருக்கிறாள் ஔவை. அதைப் பாராயணம் செய்தால் பரம ஞானம் உண்டாகும் அது மட்டுமல்ல அஷ்டமாசித்து வசப்படும்.


யந்திரம் - 1



மூல மந்திரம்


"ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் திரிலோக மோஹனம் குரு குரு கணேசா ஹிம்பட் ஸ்வாகா"


உரு 1,00,008


சகல சௌபாக்கியமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.



யந்திரம் - 2




மூல மந்திரம்


ஓம் ஹம் ஹிஹும் ஹீறோம் கங்கணபதே வர வர சர்வ கணமே வசமாக சுவாகா.


உரு - 1,00,008.


சங்கல்பம் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.


மேலே கொடுக்கப்பட்ட எந்திரத்தை செப்பு தகட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று தேர்வு செய்து கொள்ளுங்கள்.



யந்திர சுத்தி


யந்திரத்தை சுத்தி செய்யவேண்டும். சுத்தி என்றால் தூய்மைப்படுத்துதல் என்று பொருள்.  முதலில் தண்ணீர் விட்டு தகட்டை கழுவ வேண்டும், பிறகு பன்னீர், பால், திருமஞ்சனம், சந்தனம், விபூதி போன்ற பொருள் கொண்டு சுத்தி செய்தல் வேண்டும்.

பிறகு தகட்டில் 4 ஓரத்திலும் விபூதி, சந்தனம், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.



பூஜா விதி


எந்த பூஜையாக இருந்தாலும் தேய்பிறை அஷ்டமி அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் அதிர்ஷ்ட நாள் அன்று பூஜையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன், ஆனால் இந்த கணபதி பூஜை மட்டும் சதுர்த்தி திதி அல்லது தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி அன்று ஆரம்பித்தால் பலன் விரைவில் கிடைக்கும், குறைந்தபட்சம் 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும், பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஒவ்வொரு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்தல் நல்லது.


நைவேத்தியம்.


வெள்ளை எருக்கன் மலர், மல்லிகை மற்றும் வாசமுள்ள பூக்கள்.


மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, நாட்டு சர்க்கரை விளாம்பழம், கொய்யா, தேங்காய், வாழைப்பழம், இரண்டு எழுமிச்சம்பழம் மற்றும் வெத்தலை பாக்கு வைக்க வேண்டும்.


பூஜை முடிந்தவுடன் தூப தீப ஆராதனை காட்டி நிறைவு செய்ய வேண்டும்.


48 நாட்கள் பூஜை நிறைவு செய்த பிறகு அந்த தகட்டை பிரேம் செய்து வியாபாரம் செய்யும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.



வாழ்க வளமுடன்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்