வெற்றி தரும் ராகு பகவான்



ஜோதிடத்தில் முதன்மையானவராக கருதப்படுபவர் "வராகி மிகிரர்". அவர் தன்னுடைய "பிரஹத் ஜாதகம்" என்ற நூலில் ராகு கேதுக்களை கிரகங்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நம் நாட்டில் நமது மூதாதையர்கள் என்று சொல்லக்கூடிய ஞானிகள் ராகு கேது மற்றும் ஏழு கிரகங்களும் சேர்த்து கிரகங்கள் ஒன்பது என்று சொல்லியிருக்கிறார்கள்.



கோயிலில் மற்ற கிரகங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ராகு கேதுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மற்ற கிரகங்களுக்கும் ராகு கேதுவுக்கும் அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன ஏழு கிரகங்கள் திடப்பொருளாகவும் கண்ணுக்கு தோற்றம் அளிக்க கூடிய உருவம் உடையவர்களாகவும் காட்சியளிக்கின்றன. 



ராகு கேதுக்கள் மட்டும் அரூபமானவை ஆகர்ஷன சக்தியும் சலனமும் மற்ற கிரகங்களுக்கு இருப்பது போல் இவர்களுக்கு இல்லை. பூமி சூரியனை சுற்றி வரும் வட்டப் பாதையும் சந்திரன் பூமியைச் சுற்றி வரும் வட்டப் பாதையும் இரண்டு இடங்களில் ஒன்றையொன்று வெட்டிக் கொள்கின்றனர், அப்படி  வெட்டிக்கொள்ளும் இடம் தான் ராகு கேது என்று பெயர் பெற்றுள்ளது. இவைகள் எப்போதும் 180 டிகிரி கோணத்திலேயே இருக்கும்.







ராகு பகவான் வரலாறு


விப்ரசித்தி என்ற அசுரனுக்கும் சிம்மிகை என்ற அசுர பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் சுவர்பானு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் அடிக்கடி நடக்கும். அந்தப் போரில் அசுரர்கள் இறந்தால் அவர்களை உயிர்ப்பிக்க தேவகுருவான சுக்கிர பகவானுக்கு சஞ்சீவி மந்திரம் சிவ பெருமானிடம் இருந்து வரம் பெற்றதால் அவர்களை உயிர்ப்பிக்கச் செய்து விடுவார் ஆகையால் அசுரர்கள் பலம் குறையாமல் இருக்கும்.



 ஆனால் தேவர்கள்போரில் இறந்தால் அவர்களை உயிர்ப்பிக்க வழிமுறைகள் தெரியவில்லை அவர்களின் குருவான பிரகஸ்பதிக்கு இத்தகைய மந்திர சக்தி இல்லை என தேவகுரு தலைமையில் தேவர்கள் அனைவரும் சேர்ந்து மகாவிஷ்ணுவை அணுகி சாகாவரம் வேண்டினர் அப்போது அவர் திருப்பாற்கடலை கடைந்து அமுதம் வரும் அதை உண்டால் இறப்பு இல்லை என்று கூறினார்



கடலை கடைய வேண்டும் என்றால் பெரிய மத்து மற்றும் கயிறும் தேவை எனவே மந்தார மலையை கொண்டு வந்து மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கொண்டு மலையை சுற்றச் செய்து கயிறாக்கினார்கள். அதை கடையை முற்பட்டபோது தேவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அசுரர்களையும் அமுதம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி வரவழைத்தனர். தேவர்களை விட அதிகம் பலம் பொருந்திய அசுரர்கள் துணையால் மலையைக் கடைவது எளிதாகிவிட்டது. 



அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள கடலைக் கடைந்தனர் மலை கடைவதில்  சுலபமாக இருக்க மகாவிஷ்ணு ஆமை உருவம் எடுத்து கடலுக்கடியில் சென்று தனது முதுகு (ஓடு) மீது மலையை நிறுத்தி மலை கடைய எளிதாக்கினார். அதன்பின் தேவர்களும் அசுரர்களும் எளிதாக ஓய்வின்றி திருப்பாற்கடலை கடைந்தனர்.



ஒவ்வொரு பொருளாக பாற்கடலிலிருந்து வெளிவந்தன அப்போது கடைசியாக வந்தது தன்வந்திரி அமுத கலசத்துடன் வெளிப்பட்டார். அவரிடமிருந்து அமுத கலசத்தை அபகரித்துக் கொண்டு ஓடினார்கள் அசுரர்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ள அவர்களுக்குள் பிரச்சினை தோன்றியது. தேவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் விழித்தனர்.



 உடனே மகாவிஷ்ணு அசுரர்களிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற திட்டமிட்டு அழகிய மோகினியாக உருமாறி சென்று அவர்களை அணுகி, தானே அமுதத்தை பகிர்ந்து அளிப்பதாக கூறினார் சூழ்ச்சியை உணராத அசுரர்கள் மோகினியே நம்பி அமுத கலசத்தை ஒப்படைத்தனர்.








தேவர்கள் அசுரர்களுக்கு அமுதம் கிடைக்க கூடாது என்று எண்ணத்துடன் செயல்பட்டார்கள். இதை அறிந்த சுவர்பானு தேவர் போல் உருவம் கொண்டு தேவர்கள் வரிசையில் கலந்து விட்டான். மோகினி முகம் பார்க்காமல் அமுதத்தை  தர; அமுதம் கைக்குக் கிடைத்தவுடன் சற்றென்று அதனை சுவர்பானு பருகி விட்டான். இதனை உணர்ந்த சூரியன் சந்திரன் மோகினியிடம் அவன் அசுரன் என்று காட்டிக் கொடுத்தார்கள்.



இந்த கபட செயலை அறிந்த திருமால் அமுதம் வழங்கும் சட்டுவத்தால் ராவின் கழுத்தில் ஓங்கி அடிக்க. தலை வேறு உடல் வேறாக துண்டிக்கப்பட்டன. தலை பகுதி - ராகு என்னும் வடிவமாகவும் உடல் கேது என்னும் வடிவமாகம் வளர்ந்தன. ஒரு அசுரனை இப்படி இரட்டை உருவம் எடுத்த படியால் அவ்விருவரும் 12 ராசி மண்டலத்தில் எதிரான ராசிகளில் இருந்தபடி ராசி மண்டலத்தில் அப்பிரதட்சணமாக (anti clock wise) இயங்கி வருகிறார்கள். ராகுக்கு சிம்உறி என்பவள் மனைவி என்றும் அமுதன் என்பவன் புத்திரன் என்றும் சொல்லப்படுகிறது.



ராகு பகவானுக்கு உரியவை


ராசி                                                                  ஆதிபத்தியம் இல்லை

திக்கு                                                               தென்மேற்கு

அதிதேவதை                                                 பசு

பிரத்யதி தேவதை                                      பாம்பு

தலம்                                                                காளத்தி திருநாகேஸ்வரம்

நிறம்                                                               கருமை

வாகனம்                                                       நீல சிம்மம்



ராகு பகவானுக்கு பிரீதியானவை


தானியம்                                                      உளுந்து

மலர்                                                               மந்தாரை

வஸ்திரம்                                                    நீலநிற ஆடை

ரத்தினம்                                                    கோமேதகம்

நிவேதினம்                                               உளுத்தம் பருப்புப் பொடி அன்னம்

சமித்து                                                        அருகம்புல்

உலோகம்                                                   கருங்கல்



ராகு பகவான் யந்திரம்




                                                                                       ராகு யந்திரம்



ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தாலும் அல்லது ராகு திசை நடந்தாலும் இந்த ராகுவின் யந்திரத்தை எழுதி செப்புத் தகட்டில் அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து தாயத்தில் அடைத்து வைத்து கையில் அல்லது அரைஞான் கயிற்றில் கட்டிக் கொள்ள ராகுவின் தோஷம் நீங்கும்.




ராகு பகவான் ஸ்லோகம்


வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
போது நீ நடுவிருக்க புகழ்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் போற்றி போற்றி



அரவெனும் ராகு அய்யனே போற்றி 
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி 
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி 
ராகு கனியே ரம்மியா போற்றி










ராகு ஸ்துதி


அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமராதநம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஜனும் பாரணமாம்யஹம்


சௌந்தரிய லஹரி



விரிஞாசி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி நித்தம்
விநாஸம் கீநாஸோ பூஜதி தநதோ யாதி நித்தம்
விதந்த்ரா மஹேந்தாரீ விநதிரபி ஸம்மீலதி த்ருஸாம்
மஹா ஸம்ஹாரே ஸ்மித் விஹரதி ஸ்திர தாழ்த்தி ரஸௌ

(வெற்றி கிடைக்க இந்த ஸ்லோகத்தை 11 முறை தினமும் சொல்லி வரவும் )




வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்