திருமண பிராப்தம் மற்றும் சௌபாக்கியம் தரும் சுக்கிர பகவான்.




குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்பழமொழி


இதன் அர்த்தத்தை ஜோதிடம் அறிந்தவர்களுக்கு புரியும். சிறுவயதில் வரும் சுக்கிர தசை நன்மைகளை செய்யாது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டது. நடைமுறையிலும்  ஒத்துக் கொள்ளப்பட்டது.


திருமணம், மனைவி, காமத்தால் ஏற்படும் இன்பம், அழகு, காதல், கவிதை, உல்லாசம், சுக்கிலம், பிறப்புறுப்பு  மற்றும் ஒரு ஆணின் ஜாதகத்தில் அவனுடைய காம வாழ்க்கை பற்றி தெரிவிக்கும் விதமாக சுக்கிரன் வருகிறார். ஆக மேலே சொன்ன அனைத்தும் சுக்கிரனின் முக்கியமான காரகத்துவம்.


அதுபோல் ஆண்மை, ரத்தம், காமம், சண்டை செய்யும் சுபாவம், கோபம், அடக்கியாளும் சுபாவம், ரத்த சம்பந்தமான வியாதி, ரத்தத்துக்கு அதிபதியான செவ்வாய் ரத்தத்தின் மூலம் காம உணர்ச்சிகளை தூண்டி விடுகிறார். பெண் ஜாதகத்தில் காமத்துக்கும், திருமணத்திற்கும் காரணமாக இருப்பவன் செவ்வாய்.






இவ்வுலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் காமம் பொதுவானவை அதற்கு அதிபதி அசுரகுரு என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான். கணவனும் மனைவியும் இணைவதற்கு (உடலுறவு) சுக்கிர பகவான் தயவு தேவை. ஆனால் குழந்தை பாக்கியத்திற்கு தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான் அருள்  வேண்டும். காமம் - பொதுவானவை. ஆனால் குழந்தை பாக்கியம்....?


சுக்கிர பகவான் வரலாறு


சுக்கிரபகவான் பிரம்மதேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். இவர் வெண்மையான நிறம் உடையவர். அதனால் இவருக்கு சுக்கிரன் என்றும் வெள்ளி என்றும் பெயர் பெற்றன.



மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் (மகாவிஷ்ணு) வாமனராக வந்து மூன்றடி மண் கேட்ட போது சுக்கிராச்சாரியார் வந்திருப்பது திருமால் என்று தெரிந்ததும் அவ்வாறு மூன்றடி மண் கொடுக்க வேண்டாம் என தடுக்க மகாபலி அதைக் கேளாமல் நீர் வார்த்துக் கொடுக்க முனைந்த போது நீர் வார்க்கும் கெண்டியின் மூக்கினுள் சுக்கிரர் வண்டாக உருவெடுத்து நீர் வராமல் அடைத்துக்கொள்ள, அதுகண்ட மகாபலி தனது பவித்ரத்தை கெண்டியின் மூக்குள் சொருக அது சுக்கிர பகவானின் கண்ணில் குத்த அதனால் சுக்கிர பகவான் ஒரு கண் இழந்தவரானார்.







இவருக்கு சுப கீர்த்தி, கசூரி, சிருங்கினி மூன்று மனைவிமார்கள் என்றும், விஷக்கடிகன் என்பவன் புத்திரன் என்றும் தேவயானி என்பவள் புத்திரி என்றும் சொல்லப்படுகிறது. இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பும் அதிர்ஷ்டத்தையும் தருபவர் சுகபோகத்தை அளிப்பவர். சுக்கிர நீதி என்ற நீதி சாஸ்திரம் எழுதியவர் மழைக்கு அதிகாரியாக இருப்பவர்.



அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் அவர்கள் பக்கம் உயிர்சேதம் அதிகமாகி பலம் குறைந்தது, எனவே அசுர குருவாகிய சுக்கிரபகவான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரம் பெற எண்ணி சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினார்.



ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக தவம் புரிந்தார் இதனைக் கண்டு பயந்த தேவேந்திரன் சுக்கிர பகவானின் தவத்தை கெடுக்க தம் மகள் ஜெயந்தியை அவரிடம் அனுப்பினான்; ஆனால் சுக்கிரபகவான் அவளைச் சிடனாக நியமித்து விட்டு தமது தவத்தைத் தொடர்ந்தார். 







சிவபெருமான் உள்ளம் மகிழ்ந்து சுக்கிரனுக்கு காட்சி தந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மந்திரத்தை வரமாக கொடுத்தார். வரம் பெற்று மகிழ்ச்சி அடைந்த சுக்கிரன் தான் திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரகளுக்கு செய்தி அனுப்பினார். அப்போது தேவேந்திரன் மகள் ஜெயந்தி தாம் சுக்கிரனுக்கு ஆயிரம் ஆண்டுகள் பணி புரிந்ததற்காக தமக்கு பத்தாண்டு காலம் தாம்பத்திய வாழ்க்கை தரும்படி வேண்டினார். 



அதனை ஏற்றுக்கொண்ட சுக்கிரனும் பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில் தேவயானி என்ற பெண் குழந்தை பெற்று; ஜெயந்தியை அவள் விருப்பப்படி தேவலோகம் அனுப்பிவிட்டு பெண் குழந்தையுடன் அசுரர்களிடம் வந்து சேர்ந்தார். இறந்தவர்களை உயிர்பித்து அசுர குலத்தை பெருகி காத்து வந்தார்.









சுக்கிரனுக்கு உரியவை


ராசி                                                                    ரிஷபம் துலாம்

திக்கு                                                                 கிழக்கு

அதிதேவதை                                                 மகாலட்சுமி/இந்திராணி

பிரத்யதி தேவதை                                       இந்திர மருத்துவன்

தலம்                                                                 ஸ்ரீரங்கம் கஞ்சனூர்

நிறம்                                                                வெண்மை

வகனம்                                                           முதலை கருடன்



சுக்கிரனுக்கு பிரீதியானவை


தானியம்                                                        மொச்சை

மலர்                                                                வெண்தாமரை

வஸ்த்திரம்                                                  வெள்ளை நிற ஆடை

ரத்தினம்                                                       வைரம்

நிவேதனம்                                                  மொச்சப்பொடி அண்ணம்/வெள்ளை சாதம்

சமித்து                                                          அத்தி

உலோகம்                                                     வெள்ளி

வடிவம்                                                          ஐங்கோண வடிவம் சதுர வடிவம்



சுக்கிரன் யந்திரம்







சுக்கிர பகவான் ஜாதகத்தில் நீச்சம் பெற்று இருந்தால் அவர்கள்  சுக்கிரன் யந்திரத்தை செப்பு அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து அதை தாயத்தில் அடத்து கையில் அல்லது அரைஞான் கயிற்றில் கட்டிக் கொள்ள சுபிட்சமும் உண்டாகும்.



 சுக்கிர பகவானால் ஏற்படும் பாதிப்பு


சுக்கிரன் நீசம் அஸ்தங்கம் கிரக யுத்தத்தம் அல்லது  தீய ஸ்தானங்களில் இருந்தால் சுக்கிரனால் தோஷம் ஏற்படும்.


திருமண வாழ்க்கை பாதிக்கப்படும்

வாகன விபத்துக்கள் ஏற்படும்

வீடு அமைவதில் தடைகள் ஏற்படும்

பால்வினை நோய்கள் சர்க்கரை வியாதி கண் நோய் ஏற்படும்

பெண்களால் தொல்லைகளும் பிரச்சினைகளும் ஏற்படும்



சுக்கிர திசையில் சூரிய புத்தி இருந்தால் அது மோசமான பலன்களைத் தரும் தலைவலி கண் தொடர்பான நோய்கள் வரும். சந்திர புத்தி இருந்தால் பண கஷ்டம் இருக்காது ஆனால் உடம்பு பாடாய்படுத்தும் வாத பித்த ரோகங்கள் வரும் குடும்பத்தில் கலகம். 



கேது புக்தியில் உடல்நலம் கெடும் நினைத்துப் பார்க்காது திசையிலிருந்து உபத்திரம். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள் சுக்கிர சாந்தி வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்தில் செய்யலாம் அல்லது வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை 6 ல் இருந்து 7 மணிக்குள் மகாலட்சுமியே வணங்குவது நலம் தரும்.








அன்னை ராஜராஜேஸ்வரி பூஜித்து வருவந்தாலும், வைரக் கல்லை அணிந்து கொண்டாலும், வெள்ளை நிற வஸ்திரம், மொச்சை தானியத்தையும் தானமாக கொடுப்பதாலும், சுக்கிரவார விரதம் இருப்பதாலும் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும்.



தியான ஸ்லோகங்கள்


"சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்களுக்கே"



"முர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம் 
காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன் தீர்க
வானவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும் சுக்கிராச்சாரி பாதங்கள் போற்றி போற்றி"



சுக்கிர ஸ்துதி


"ஹிமகுந்த ம்ருணாலாபம்
         தைத்யாநாம் பரம் குரும்
ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம்
        பார்க்கவம் ப்ரணமாம்யஹம்"



சௌந்தர்ய லஹரி


"சதுர்ப்பி: ஸ்ரீ கண்ட்டை: ஸிவயுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி:,ஸம்போர் நவபிரபி மூலப்ரக்ருதிபி
த்ரயஸ்சத்வாரிம்ஸத் வஸுதல கலாஸ்ர த்ரிவலய
த்ரிரேகாபி ஸார்தம் தவ ஸரணகோணா பரிணதா:"




வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்