ஆன குடிலுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்ற பழமையான சொற்றொடர் வழக்கில் இருந்து கொண்டிருக்கிறது.
ஆக ஒரு குடும்பத்துக்கு குழந்தைச்செல்வம் மிக மிக முக்கியமானது. இந்தப் பதிவில் கர்ப்பிணி பெண்கள் சற்புத்திர யோகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறேன்.
கர்ப்பிணி பெண்களுக்கு சற்புத்திர யோகம் கிட்ட சில வழிபாடுகள்:-
முதல் மாதம்:-
ஒரு பெண் கர்ப்பமுற்றால் அதற்கு காரணமாக சுக்ர பகவான் அமைகிறார். அந்தப் பெண் முதல் மாதம் முழுவதும் சுக்கிரபகவானின் அதிதேவதையான மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
கண்ணம், ஆணுக்கு விந்து, பெண்ணுக்கு சுக்கிலம் கர்ப்பப்பை போன்ற உறுப்புகளுக்கு சுக்கிர பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். ஆக சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
ஒரு மாதம்் முழுவதும சொல்லவேண்டிய மந்திரம்:-
"ஓம் மஹா தேவ்யச்ச வித்மஹே
விஷ்ணு பத்னியைச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்"
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
கமலே கமலாலயே ப்ரஸித ப்ரஸித
ஸ்கை செளபாக்யம் தேதி தேதி
ஓம் ஸ்ரீம்மஹா லக்ஷ்மி மை ஸ்வாஹ"
இரண்டாம் மாதம்:-
கரு நல்ல வளர்ச்சி அடைய அங்காரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாய் பகவான் காரணமாக அமைவதால் இரண்டாம் மாதம் முழுவதும் செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையான சுப்பிரமணியர் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மச்சை,வெளியேறும் ரத்தம், சிவப்பு அணுக்கள், ரத்த சம்பந்தம், நகம், பல் போன்ற உறுப்புகளுக்கு செவ்வாய் பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
இரண்டாம் மாதம் முழுவதும் சொல்லவேண்டிய மந்திரம்:-
"நாத விந்து கலாதி நமோ நம
தேவமந்தர சொரூபா நமோ நம
ஞான பண்டிதசாமீ நமோ நம-வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தி பாலா நமோ நம
நாக பந்த் மயூரா நமோ நம-பரசூரர்
சேத தண்டவி னோதா நமோ நம
கீத கிண்கிணி மாதா நமோ நம
நீர் சம்ப்ரம வீரா நமோ நம-கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்ஜரி பாகா நமோ நம-அருள் தாராய்"
மூன்றாம் மாதம்:-
குரு பகவான் மூல காரணமாக அமைவதால் மூன்றாம் மாதம் முழுவதும் குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
மூளை கொழுப்பு வயிறு பெருங்குடல் போன்ற உறுப்புகளுக்கு குரு பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்லவேண்டிய மந்திரம்:-
"குருதேவா ஜெய் குருதேவா
குரைகழல் நம ஓம் குருதேவா
அருள் வடிவாய் ஜெகத் குருதேவா
ஆனந்த மோகன ஸத் குருதேவா"
"ஓம் நமோ பகவதே
தக்ஷணா மூர்த்தயே மஹ்யம்
மேதாம் பிரக்ஞம் பிரயச்ச ஸ்வாஹா"
நான்காம் மாதம்:-
சூரிய பகவான் மூல காரணமாக அமைவதால் நான்காம் மாதம் முழுவதும் சூரியனுக்கு அதிதேவதையான சிவபெருமானை வழிபட வேண்டும்.
வலது உடல் பாகங்கள்,முதுகுத்தண்டு,உச்சந்தலை, சிரசு, எலும்பு, வயிற்றுப்பகுதி, இருதயம், வளது கண், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, நரம்பு போன்ற பாகங்களுக்கு சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் மற்றும் சிவபெருமானே வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்:-
"அன்பெனும் பிடியும் அகப்படு மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே
அன்பெனும் கர்த்தர் அமுதே
அன்பெனும் கடத்தும் அடங்கியதும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவும் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே."
ஐந்தாம் மாதம்:-
சந்திர பகவான் மூல காரணமாக அமைவதால் அந்த மாதம் முழுவதும் சந்திரனுக்கு அதிதேவதையான பார்வதியை வழிபடவண்டும்.
இடதுகண், இடது உடல் பாகங்கள், உள்ளூரும் ரத்தம், தாய்ப்பால், எச்சில், மார்பகம், நுரையீரல், நீர்சத்து போன்ற உறுப்புகளுக்கு சந்திர பகவான் ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் சந்திர பகவான் மற்றும் பார்வதி தேவியை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்:-
"தனம் தரும், கல்வி தரும், ஒருநளும்
தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவம் தரும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே!!"
"நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே
நமஸ்தே ஜகத் வ்யாபிகே விச்வரூபே!
நமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தே
நமஸ்தே ஜகத் தாரிணி த்ராஹி துர்கே!!
நமஸ்தே ஜகச் சிந்த்ய மானஸ்வரூபே
நமஸ்தே மஹாயோகினி ஜ்ஞானரூபே!
நமஸ்தே ஸதானந்த தந்த ஸ்வரூபே
நமஸ்தே ஜகத் தாரிணி த்ராஹி துர்கே!!"
ஆறாம் மாதம்:-
சனி பகவான் ஆறுமாத கருவுக்கு ஆட்சி செய்ததால் சனிபகவான் அதிதேவதையான சாஸ்தாவை வழிபட வேண்டும்.
வெளியே தெரியும் நரம்பு கால்முட்டி முட்டிக்கு கீழ் போன்ற உறுப்புகளுக்கு ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் சனிபகவான் மற்றும் சாஸ்தாவை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்லவேண்டிய மந்திரம்:-
"லோக் வீரம் மஹாபூஜ்யம் ஸர்வரக்சாகரம் விபும்!
பார்வதீ ஹ்ருதயா நத்தம் சாஸ்தா ரம் ப்ரணமாம்யஹம்!!"
"பூதநாந ஸதானந்த ஸர்வபூத தயாபர!
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம!!"
ஏழாம் மாதம்:-
7 மாத கரு வளர்ச்சிக்கு புதபகவான் ஆட்சி செய்வதால் அந்த மாதம் முழுவதும் புதனுக்கு அதிதேவதையான மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
நரம்பு மண்டலம் தோல் மற்றும் பேச்சு போன்ற உறுப்புகளுக்கு புதபகவான் ஆதிக்கம் செலுத்துவதால் அந்த மாதம் முழுவதும் புதபகவான் மற்றும் மகாவிஷ்ணுவே வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்லவேண்டிய மந்திரம்:-
"பச்சையா மலைபோல் மேனி
பவளவாய் கமலம் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயுர்தம் கொழுந்தே! ஏன்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திய லோகம் ஆளும்,
அச்சு வை மேனியும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!!"
"அச்யுதம் கேசம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரிம்!
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த்ரம் பஜே!!
அச்யுதம் கேசவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரன ராதிகா ராதி தம்!
இந்திரா மந்திரம் சேதஸா சுந்தரம்
தேவகீ நந்தனம் நந்தனம் ஸந்ததே !!"
எட்டாம் மாதம்:-
8 மாத கரு வளர்ச்சிக்கு குலதெய்வம் ஆட்சி செய்வதால் அந்த மாதம் முழுவதும் குலதெய்வத்தை அல்லது இஷ்ட தேவதையை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்:-
"சர்வ மங்கள மாங்கல்யே சிவனே
சர்வானந்த் த சாதகே!சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணு நமோஸ்துதே"
(உங்கள் குலதெய்வம் எதுவோ அந்த தெய்வத்தின் மந்திரத்தை மாதம் முழுவதும் சொல்ல வேண்டும்.)
முக்கிய குறிப்பு.
எந்த ஒரு செயலும் அல்லது பூஜையோ செய்யும்போது அல்லது ஆரம்பிக்கும் போது தங்களுடைய குலதெய்வத்தை நினைத்து பூஜை செய்து அதன் பிறகு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி செயல் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் முழு வெற்றி கிடைக்கும்.
ஒன்பதாம் மாதம்:-
கரு ஒன்பது மாதம் வளர்ச்சி அடையும்பது அந்த மாதம் முழுவதும் சிவ பார்வதியை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்:-
"நன்றாய வேதங்கள் நான்கும் புகந்தேத்தும் நாயகியே
அன்றால நீழல் அமர்ந்தோனா துணைவியே!ஆர்வலர்க்கும்
குன்றாத வாழ்வும்,குறையாத செல்வமும் கூட்டுவித்துப்
பொன்றாத வானவர் போகமும் சேர்ப்பிக்கும் பூரணியே"
பத்தாம் மாதம்:-
சுகப்பிரசவம் ஏற்படுவதற்கு சூரிய பகவான் சிசுவுக்கு ஆட்சி செய்வதால் அந்த மாதம் முழுவதும் தாயுமானவரை வழிபட வேண்டும்.
மாதம் முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்:-
"சங்கரா சங்கரா சங்கரா
சங்கரா சதாசிவா சபாபதே மனோஹரா
சந்திர சேகரா ஜடாதரா உமா மகேஷ்வரா"
ஆக பத்து மாதம் அதாவது கருவுற்ற காலம் முதல் சுகப்பிரசவம் ஆகும்வரை அந்த அந்த மாதத்தின் அதிதேவதைகளை வழிபட்டு வந்தாள் சற்புத்திர யோகம் கிட்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
இவ்வுலகத்தில் பிறக்கும் சிசுவுக்கு பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய் முறையாக அதி தேவதைகளை வணங்கி வந்தாள் பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்து நல்லபடியாக பிறக்கும் குழந்தைக்கு அமையும். இவ்வுலகத்தில் பிறக்கும் அந்த குழந்தைக்கு எல்லா யோகம் கிடைக்க வழிபாடே சிறந்த மார்க்கம்.
சுகப்பிரசவம் ஆவதற்கு மந்திரம்.
"ஹே, சங்கரா ஸ்மரஹர ப்ரமாதிநாத
மன்னாத ஸ்டாம்ப் சசிசூட ஹர த்ரிசூலின்
சமாபோ ஸுகப்ரஸவக்ருத் பலமே தயாளோ
ஸ்ரீ மாத்ரு பூத சவ பால்ய மாம் நமஸ்தே"
இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை விளக்கு ஏற்றிவைத்து சொல்லி வர சுகப்பிரசவம் ஆவது நிச்சயம்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்