பூக்களினால் நாம் அடையும் நன்மைகள் (சிவ புராணத்தில் இருந்து)


பூக்கள் மனிதனுக்கு நல்ல மனத் தெளிவும் அழகும் நறுமணமும் ஒளியும் ஒளி நிறங்களும் தைரியமும் உள்ளத்திற்கு உற்சாகமும் அன்பு இரக்கம் போன்ற உணர்வுகளைத் தரும். 

 மன உறுதி தியான சக்தி ஆன்மீக உணர்வும் தீய எண்ணங்களை மாற்றும் சக்தியும் சகிப்புத்தன்மை பொறுமை இவற்றை எல்லாம் நமக்கு அளித்து உதவும்.



மல்லிகையும் முல்லையும்


                        
                         இதன் நறுமணத்தை முகர்வது அவசியம் புனிதத்தன்மை தந்து                  சமநிலை  அளிக்கும் சக்தி இந்த மலர்களுக்கு உண்டு.


நாட்டு ரோஜா பூ




                             தியானத்திற்கு உகந்தது ஆண்டவன் பால் இனிய எண்ணங்கள் ஏற்படுத்தும் சரணாகதி தத்துவத்தை தரும்.


ரோஸ் கலந்த சிவப்பு ரோஜா




                            ஆண்டவனின் பேரின்பத்தை வெளிப்படுத்தும்


அல்லிப்பூ



                          மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை இப்பூவினால் ஏற்படும் வளர்ச்சி                   தரும்.


துளசி பூவும் இலையும்




                             பக்தி தரும் வியாதிகள் குணமாகும் பெருமாளுக்கு உகந்தது



செண்பகப்பூ




                           மனதில் உள்ள சஞ்சலத்தை நீக்க மனதில் தெளிவினை ஏற்படுத்தும்             சக்தி இப்பூவுக்கு உண்டு.


அரளிப் பூ



                      மன அமைதியும் இனிய எண்ணம் உள்ளத்தில் தோன்றும், தியானத்துக்கு சிறந்தது


வெள்ளைத் தாமரை




                            தெய்வீக உணர்வை ஏற்படுத்தும். சக்தி தரும்.


கருஞ்சிவப்பு அரளிப்பூ




                         தவறான போக்கினை தடுத்து நல் வழியை நோக்கி செலுத்தும்.



நாகலிங்கப்பூ



இந்தப் பூவை தினமும் கடவுளுக்கு அர்ப்பணித்தார பொருள் பற்றாக் குறையை நீக்கும் செல்வம் பெருகும் இப்படிப்பட்ட ஆற்றல் இந்நூலுக்கு உண்டு.


மகிழம்பூ




                  இந்தப் பூ கொண்டு ஆண்டவனை அர்ச்சித்தால் நிதானம்,பொறுமை பெற்றுத்தரும்.



பவளமல்லி




                                சிறந்த விருப்பங்களை அடைய இந்த பூ வழிவகுக்கும்.



எருக்கம் பூ



                    பயத்தை அகற்றவும் எம பயம் நீங்கும் இந்தப் பூ உதவும். மேலும் மனம் தைரியம் வளரும்.



விரிச்சிப் பூ




வெண்மை நிறமுள்ள இந்தப் பனி குளிர் நிறைந்து. அமைதியை உடலிலுள்ள அணுக்களில் பாய்கின்ற சக்தி படைத்தது. அந்த அமைதி நோய்களை குணப்படுத்துகின்ற வல்லமை வாய்ந்தது.



மரிக்கொழுந்து




                    வேண்டாதவற்றை விட்டுவிட்டு வேண்டியவற்றை பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்