திருவிளக்கு எண்ணெய், தீபம், திரி அதன் பலன்கள்


மங்கலப் பொருட்கள் பல உண்டு. அதில் மகாலட்சுமி அம்சமாகவும், அதில் வாசம் செய்வதாகவும் ஐதீகம். அவள் மனதுக்கு விருப்பமான சில மங்கல பொருட்கள் உண்டு, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது குத்துவிளக்கு அல்லது திருவிளக்கு.


பழங்காலம் தொட்டு வீட்டில் விளக்கு ஏற்றும் பழக்கம் நம் நாடில் இருந்து வந்துள்ளது.ஆக வீடுகளில் தினந்தோறும் மாலையில் விளக்கு ஏற்றுவதை சுமங்கலிப்பெண்கள் வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான சில குறிப்புகள் கீழே.....



எந்த விளக்கை உபயோகித்தால் என்ன பலன் கிட்டும்:-



மண் அகல் விளக்கு:-

இது உபயோகப்படுத்தினால் வீரியம் விருத்தி ஆகும். சகல நண்மைகள் கிடைக்கும்.

இரும்பு அகல் விளக்கு:-

இதை உபயோகப்படுத்தினால் கெட்ட சகவாசங்கள் அகலும். சனிபகவான் கருணைப் பார்வை கிடைக்கும்.

வெண்கல விளக்கு:-

இது உபயோகப்படுத்தினால் கர்மவினை மற்றும் பாவங்கள் போகும்.

பித்தளை விளக்கு:-

இதில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நிம்மதி உண்டாகும்.

வெள்ளி விளக்கு:-

இதில் தீபம் ஏற்றினால் ஸ்ரீமகாலட்சுமி கடைக்கண் பார்வை கிட்டும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.




இவை அனைத்தும் விட குத்துவிளக்கேற்றி வழிபடுவதே சிறப்பு. விளக்கேற்றும் பொழுது குத்து விளக்கின் உச்சியில் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் ஒரு பொட்டு அதன் கீழே மூன்று பொட்டு, தண்டுப்பகுதி என்று சொல்லக்கூடிய நடுப்பகுதியில் மேல் ஒரு பொட்டு கிழ் ஒரு பொட்டு ஆக இரண்டு பொட்டு தண்டு பகுதியில் வர வேண்டும். அதன் பிறகு பீடத்தில் இரண்டு பொட்டு, என மொத்தம் எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும். இந்த எட்டு பொட்டும் எட்டு லட்சுமியை குறிக்கும். எந்த ஒரு பூஜை செய்யும் பொழுது குத்துவிளக்கில் இந்த மாதிரி பொட்டு வைத்து உச்சியில் மலர் வைத்து பூஜை செய்ய வேண்டும்.


முக்கிய குறிப்பு:-

எக்காரணம் கொண்டு எவர்சில்வர் விளக்கு உபயோகிக்கக் கூடாது இதனால் வறுமையில் வாட நேரிடும் ஆக அதை தவிர்க்கவும்.



தீபத்துக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும்:-


நெய்:-

தீபத்திற்கு நெய் பயன்படுத்தினால் ஞானம் சித்திக்கும். சகலவித செல்வத்தையும் வீட்டின் நலன் மற்றும் சௌபாக்கியத்தையும் தருகின்றது.

நல்ல எண்ணெய்:-

எம பயம் நீங்கும் எல்லாப் பீடைகளும் விலகிவிடும். Positive energy அதிகமாகும். வீட்டில் அமைதி நிலவும்.

விளக்கெண்ணெய்:-

தேவ வசியம், புகழ், ஜீவனம், தாம்பத்திய சுகம், இவைகளை விருத்தி செய்கின்றது. சகல சம்பத்தும் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்:-

விநாயகப் பெருமானுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் தடைகள் விலகும். சங்கல்பம் எதுவாக இருந்தாலும் அவை நிறைவேறும்.



எண்ணெய் கலந்துவிட்டு தீபம் ஏற்றுவதால் என்ன பயன் கிடைக்கும்:-


வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் உண்டாகும் இந்த கலப்பு எண்ணெய் குலதெய்வத்திற்கு உகந்தது.


நெய் விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்து யாரொருவர் ஒரு மண்டலம் விளக்கேற்றி பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு தேவியின் அருள் கண்டிப்பாக கிடைக்கும்.


நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், புங்க எண்ணெய், நல்ல எண்ணெய் இந்த ஏழு எண்ணெய் கலந்து 108 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால் யச்சினி வசியமாவாள்.  




இறைவனுக்கு எந்த எண்ணெய் உகந்தது:-


மகாலட்சுமி.                                      நெய்
நாராயணன்.                                    நல்ல எண்ணெய்
விநாயகர்.                                        தேங்காய் எண்ணெய்
குலதெய்வம்.                                  வேப்ப எண்ணெய்
தேவி.                                                 ஐந்து வகை எண்ணெய்
ருதாராதி, தேவதை.                    இழப்பை எண்ணெய்.



முகம் ஏற்றுவது பலன்கள்:-


ஒரு முகம் ஏற்றினால்:-                           மத்திம பலன் கிடைக்கும்

இரண்டு முகம் ஏற்றினால்:-                 குடும்ப ஒற்றுமை ஏற்படும்

மூன்று முகம் ஏற்றினால்:-                     புத்திரபாக்கியம் கிட்டும்

நான்கு முகம் ஏற்றினால்:-                     பசு பூமி லாபம் ஏற்படும்

இன்று முகம் ஏற்றினால்:-                     செல்வம் பெருக்கும் சௌபாக்கியம் ஏற்படும்.


திரியின் வகைகள்:-


பஞ்சு திரி:-
                                                                                                                                                            பஞ்சு திரி கொண்டு விளக்கு ஏற்றினால் மிகவும் நன்மை.

தாமரைத் தண்டு திரி:-

இந்தத் திரி கொண்டு விளக்கேற்றினால் முன்வினை பாவத்தைப் போக்கும் செல்வம் நிலைத்து நிற்கும்.

வாழைத்தண்டு திரி:-

வாழைத்தண்டு நாரை நூல் பாகமாக பக்குவப்படுத்தி திரியிட வேண்டும்.
 குழந்தைச் செல்வம் உண்டாகும், தெய்வ குற்றம், குடும்ப சாபம் முதலியவை நிவர்த்தியாகும்.

வெள்ளை எருக்கன் திரி:-

இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட வேண்டும் இதனால் செல்வம் பெருகும் பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லை தீரும்.

புது வெள்ளை வஸ்திர திரி:-

இதில் பன்னீர் விட்டு காய வைத்து திரியாக பயன் படுத்தி வந்தால் நல்ல பலனை காணலாம்.

சிவப்பு கலர் சேலை தூண்டு திரி:-

இதில் திரி இடுவதால் திருமணதடை, மலட்டுத்தன்மை, பைசாச செய்வினை, தோஷங்கள் விலகிவிடும்.

மஞ்சள் சேலைத் துண்டு திரி:-

இதில் திரியிடுவதால் அம்மன் அருள் கிட்டும் வியாதிகள் குணமாகும் காற்றுச் சேட்டைகள் நீங்கும்.



வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்