திருமணம் விரைவில் நடக்க


கவலை இல்லாத மனிதனாகத் தான் வாழ்க்கை முடியும் வரை இருக்க விரும்புகிறான் மனிதன். நடைமுறையில் இது சாத்தியப்படவில்லை.கவலை இல்லாத மனிதர்கள் யாரும் இவ்வுலகில் இல்லை அவரவர் தகுதிக்கேற்ப கவலைகள் கண்டிப்பாக இருக்கும்.






திருமணமாகாத பெண் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் படும் வேதனை அதிகம், ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் மற்றும் குழந்தை செல்வம் முக்கியம். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். ஆக தாமத திருமணம் (திருமண தடை) பற்றி அதற்கான பரிகாரம் கீழே சொல்லி இருக்கிறேன்.


இங்கே நான் சொல்லி இருக்கும் பரிகாரத்தை (பூஜை) சில பெண் வீட்டாரிடம் செய்யச் சொன்னேன். அதற்கு பலன் கைமேல் கிடைத்தது, இன்றும் நடைமுறையில் நல்ல பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


பரிகாரம் என்பது (பூஜை) வீட்டிலேயே செய்ய வேண்டியது. இதற்கு ஆயிரக்கணக்கில் பணம்  செலவு செய்யவேண்டிய அவசியமில்லை. திருமணம் நடைபெற வேண்டுபவர் அவர்கள் வீட்டிலேயே இந்த பூஜை செய்யவேண்டும்.


தோஷம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இந்த பூஜை செய்தால் கண்டிப்பாக கன்னிப்பெண்களுக்கு ஒரு வழி கிடைக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.



பூஜை தொடங்கும் நாள்:-


கண்டிப்பாக வெள்ளிக்கிழமையில் பூஜையைத் தொடங்க வேண்டும் அதில் தேய்பிறை அஷ்டமியாக இருந்தால் மிகவும் விசேஷம் அன்று  சங்கல்பம் செய்து செய்கின்ற பூஜைக்கு பலன் நிச்சயம் இருக்கிறது. மாலை அல்லது காலையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். மாலையில் செய்வது விசேஷம்.








பூஜா விதி:



பூஜை எட்டு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். ஐந்து முகங்களுடன் கூடிய குத்துவிளக்கை நன்றாக சுத்தம் செய்து, நல்லெண்ணெய் மற்றும் சிகப்பு திரி கொண்டு ஐந்து முகத்தை ஏற்ற வேண்டும். அந்த ஜோதியில் ஸ்ரீ மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். ஆவாஹனம் என்றால் அந்த ஜோதியில் ஸ்ரீ மகாலட்சுமி அமர்ந்திருப்பதாக பாவனை செய்ய வேண்டும். பூ கொண்டு உங்களுக்குத் தெரிந்த மகாலட்சுமி சுலோகம் அல்லது மந்திரம் மற்றும் அஷ்டோத்திர நாமாவளிகளுடன் ஆராத்தி செய்ய வேண்டும்.



நெய்வேத்தியம்:



தேங்காய், வாழைப்பழம் வெத்தலை பாக்கு இரண்டு எழுமிச்சம்பழம் பால் பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்ய வேண்டும். வாரம் வாரம் செய்ய வேண்டும்



கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூஜை முடிந்தவுடன் ஐந்து அல்லது எட்டு சுமங்கலி பெண்களுக்கு உங்கள் சக்திக்கு தகுந்தபடி தக்ஷிணை தந்து அவர்கள் ஆசிர்வாதம் பெறவேண்டும்.




முக்கிய குறிப்பு:-



ஒவ்வொரு வாரமும் பூஜை ஆரம்பிக்கும் முன்பு தங்கள் குலதெய்வத்தை வணங்கி பிறகு மஞ்சள் பிள்ளையார்  வணங்கி பூஜையை தொடங்க வேண்டும்.



மனமொன்றி பூஜை செய்தல் வேண்டும் ஏனோ தானோ என்று செய்தல் பிரயோஜனமில்லை. இந்த பரிகாரம் சொல்லி 3 பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.







லஷ்மி சுலோகம்:-


குறுமுனி என்று போற்றக்கூடிய அகஸ்திய முனிவர் ஒருமுறை கொல்லாபுரம் என்று ஊருக்குச் சென்றார். அங்கிருந்த கோவிலில் ஸ்ரீ மகாலட்சுமியை கண்டு மகிழ்ந்தவராய், பாடல்கள் சில பாடினார்.



லட்சுமிதேவி அவர் முன் தோன்றி உன் பாடல்கள் செவியுற்று பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் பாடல்கள் யார் பாடினாலும் அவர்களுக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும் நல்வாழ்வு பெறுவார்கள் என்று கூறி ஆசி வழங்கினார்.



கீழே கொடுக்கப்பட்ட பாடல்களை தினமும் பக்தியுடன் படித்து மகாலட்சுமி தியானம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தேவியின் அருள் கிட்டும்.




பாடல்கள்:-



மூவுலகும் இடரியற்றும் அடலவுணர்    
            உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள் 
          அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவருலகினும் விளங்கும் புகழ்க்கொல்லா
          புரத்தினிது சேர்ந்து வைக்கும்
பாவையிருதாள் தொழுது பழமறைதேர்
        குறுமுனிவன் பழிச்சுகின்றான்!



கொழதியிசை அளிமுரலும் தாமரை மென்
       பொகுட்டிலுறை கொள்கை போல
மழையுறழந் திருமேனி மணிவண்ணன்
      இதயமலர் வைகு மானே
முழதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
      கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங்கா தலில்தொழவோர் வினைதீர
      அருள் கொழிக்கும் கமலக் கண்ணாய்!!




கமலை திரு மறுமார்பன் மனைக் கிழத்தி
       செழங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங் கழைகுழைக்கும் வேனிலான்
       தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரதாய் பாற்கடலுள்
      அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட வொளிருஞ் செழஞ்சுடரே
      என வணக்கஞ் செய்வான் மன்னோ!



மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
      செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
      உலகமெலாங் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக் கிழவன் பசுங்குழவி
     மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞாசீர்த்தி எம்மனோரால்
     எடுத்துச் சொல்லற் பாற்றோ?




மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
         தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
        நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
       வாகைபுனை வீரர் தாமும்
அல்லி மலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
     அருள் நோக்கம அடைந்துளாரே!!



செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
        எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
       வெண்மதி யாய் அமரக் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
      நெடுங்கானில் பொறுப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
      சிறந்தோங்கி இருப்பதம்மா!!!



இந்த பாடலை தினமும் மாலையில் விளக்கேற்றி பாடி வந்தால் வளமையும், செழுமையும் விருத்தியாகும்.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்