காதணி தாமிர குண்டலம் கண்டிகை
ஓதிஅவர்க்கும் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.."
என்கிறார் திருமூலர்.
யோகியர் முதலில் கொள்ள வேண்டிய அடையாளச்சின்னம் திருநீறு அணிவது ஆகும் - சாதனம் ஆதியில் அணிவது. அடுத்தது காதில் அணிந்து கொள்ள வேண்டிய செம்பிலான குண்டலம். கழுத்தில் அணியும் ருத்ராட்சம் மாலை. திருமுறை ஓதும் சிவசின்னங்கள் இவை. சிவயோகிகள் ஏற்கத்தக்க சின்னங்கள் என்பது ஆழ்ந்து உணர்ந்தால் புலனாகும்.
இந்தப் பாடல் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் திருமூலர் காலத்திற்கு முன்பே ருத்ராட்சம் இருந்திருக்கிறது.
ருத்ராட்சம் ருத்ரனின் கண்கள் என்று சொல்லப்படுகிறது. ருத்ரன் கண்களிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என்று நம்பப்படுகிறது.
எம்பெருமானின் அன்பு கருணை நிறைந்த கண்கள் போன்ற ருத்ராட்சம் அணிவதால் அனைத்து இன்னல்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
ருத்ராட்சத்தில் முகம் எப்படி பார்க்கப்படுகிறது? உதாரணமாக இரண்டு முகம் என்றால் இரண்டு கோடுகள் இருக்கும் மூன்று முகம் என்றால் மூன்று கோடுகள் இருக்கும் நான்கு முகம் என்றால் நான்கு கோடுகள் இருக்கும்.
ஐம்பத்தி நான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் இருக்கு என்று சொல்லப்படுகிறது ஆனால் சாஸ்திரத்திலும், புராணங்களிலும் (தேவி பாகவதம், ஸ்கந்த புராணம், சிவபுராணம்) பதினான்கு முகங்கள் வரை குறிப்புகள் காணப்படுகிறது; ஆனால் 21 முகம் வரை பார்த்திருப்பதாக அதாவது கிடைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?
ஜாதி, மத, பேதம் கடந்து யாவரும் இதை அணிந்து கொள்ளலாம்; ருத்ராட்சத்தை பெண்களும் அணியலாம் என்று குறிப்புகள் இருக்கிறது.
"கொந்தளமகம் சடை பிடித்து, விரித்து பொன்தோள்
குழை களத்தில் கண்டிகை யின் குப்பு பூட்டி
உந்தும் அமர்வு உரிநிகர்பட்டாடை நீக்கி
உரித்தமர உரிசாத்தி உத்தூளத்தால்
விந்தை திருநீறு அணிந்து கனற்கும் காய்ந்து
விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி
அந்தி பகல் இறைபதத்தின் மனத்தை ஊன்றி
அரிய பெரும் தவம் புரிந்தாள் அகிலம் ஈன்றாள்"
ருத்ராட்சம் அதன் முகங்களும்
ஒரு முகம்
சூரியனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சூரியன் பலம் இன்றி இருப்பவர்கள் இதை அணியலாம்.சூரியனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
ஜாதகத்தில் சூரியனின் ஆதிக்க குறைவால் ஏற்படும் நோய்களான
கண் பார்வை, வலது கண், இதயம்,தலை சம்பந்தமான நோய்கள், உச்சந்தலை முதுகுத்தண்டு, நரம்பு, சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
இரண்டு முகம்
சந்திரன் ஆதிக்கம் பெற்றது அர்த்தநாரீஸ்வரர் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது சந்திரபகவான். பலம் குன்றி இருந்தால் இதை அணியலாம்.இதை அணிவதால் இடதுகண், உள்ளோரும் ரத்தம், காக்காய் வலிப்பு, சோம்பல் நெஞ்செரிச்சல், சளி போன்ற நோய்கள் நீங்கும்.
மூன்று முகம்
அக்னி ஆதிக்கம் பெற்றது செவ்வாய் பகவானுக்கு இது உகந்தது. இதை அணிவதால் புற்றுநோய், மச்சை, வெளியேறும் ரத்தம், சிவப்பணுக்கள், விபத்து, துர்மரணம், ரத்தத்தில் விஷம் கலத்தல் போன்ற பாதிப்புகளிலிருந்து அபாயம் நீங்கும்.
நான்கு முகம்
இதே பிரம்ம தேவரை குறிக்கும். புதனின் ஆதிக்கம் நான்கு முக ருத்ராட்சத்துக்கு உண்டு இதை அணிவதால் ஞாபகசக்தி மன ஒருமைப்பாடு ஏற்படும். இதை அணிவதால் திக்கு வாய் சரியாகும், நரம்பு மண்டலம், தோல்களில் ஏற்படும் நோய் நீங்கும்.
ஐந்து முகம்
சிவபெருமான் கருணை இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு பஞ்ச முகம் என்றும் சொல்லப்படுகிறது. உள்ளதால் தேவர்கள் ஆசி கிடைக்கப்பெறுவர். குரு பகவான் ஆதிக்கம் பெற்றது. இதை அணிவதால் மூளை, கொழுப்பு, கட்டி, வயிறு,பெருங்குடல், இந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் நீங்கும்.
ஆறு முகம்
முருகப் பெருமானை குறிக்கும் மன வலிமை அறிவு திறமை ஆகியவற்றை தரும்.முருகப்பெருமானின் கடைக்கண் பார்வை இதை அணிபவர்களுக்கு கிடைக்கும். சுக்ரன் ஆதிக்கம் பெற்றது என்று சொல்லப்படுகிறது. இதை அணிந்தால் ஆணுக்கு விந்தும்,பெண்ணுக்கு கர்பப்பையும், சிறுநீரகம் உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் நீங்கும்
ஏழ முகம்
சப்தம் என்ற பொருள் கொள்ள வேண்டும் சப்த மாதாக்கள் ஆசி இந்த ருத்ராட்சத்தில் இருக்கிறது. சனி பகவான் ஆதிக்கம் பெற்றதாக சொல்லப்படுகிறது.இதை அணிவதால் வெளியே தெரியும் நரம்பு, கால் முட்டி, முட்டிக்கு கீழ் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் நீங்கும்.
எட்டு முகம்
ராகு பகவானின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் என்று சொல்லப்படுகிறது தலைமைப் பதவி கிடைக்கும் அஷ்ட என்றால் எட்டு அஷ்ட பைரவர்கள் அஷ்டலட்சுமி போன்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும். குறிப்பாக தேவியர்கள் அருள் கிடைக்கும். இதை அணிவதால் விஷக்கடி, டிபி, கேன்சர் போன்ற நோய்கள் நீங்கும்.
ஒன்பது முகம்
கேது பகவான் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் என்று சொல்லப்படுகிறது. கேதுவின் அதிதேவதையான விநாயகப் பெருமான் பரிபூரண அருள் கிடைக்கும். இதை அணிவதால் பயம் நீங்கும்.
பத்து முகம்
மகாவிஷ்ணு அருள் நிறைந்ததாக தேவி பாகவதம் கூறுகின்றது இதை அணிபவர்கள் நவ கிரகங்களால் வரும் கெடுபலன்கள் அனைத்தும் நீங்கும்.
பதினோரு முகம்
இதை அணிவதால் நல்ல பேச்சுத் திறமை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
பன்னிரண்டு முகம்
இந்த ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் ஆளுமைத் தன்மைவிருத்தியடையும் தலைமைப் பதவி தேடி வரும்.
பதின்மூன்று முகம்
இதை அணிவதால் ஆன்மீகத்தில் வளர்ச்சி கலைத் துறையில் வளர்ச்சி அரசியல் முதல் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பதினான்கு முகம்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நேரடியாக தோன்றியது என்று சொல்லப்படுகிறது மிகவும் சக்தி வாய்ந்தது இந்த மணி அணிபவர்கள் முன்னோர்கள் செய்த பாவத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்