மந்திரம் அல்லது இறைவனின் நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதை ஜெபம் என்பதாகும். ஜெபம் என்பது தவத்தில் முந்தைய நிலை, ஒரு மந்திரத்தை உரு ஏற்ற எண்ணிக்கை அவசியம் அந்த எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மணி உருட்டப்படுகிறது.
ஜபம் செய்வதற்கு ஆசனம் மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது அதில் முக்கியமானதாக பத்மாசனம், வஜ்ராசனம் அல்லது சுகாசனம், போன்ற ஆசனங்களில் ஏதோ ஒரு ஆசனத்தில் அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும்.
புலித்தோல், மான்தோல் சிறந்தது ஆனால் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
மாமரத்தில் ஆன பலகை உபயோகிக்கலாம், தர்ப்பப்பை அல்லது கோரப்பாய் பயன் படுத்தலாம். கண்டிப்பாக வெறும் தரையில் ஆசனம் போடக்கூடாது. மாந்திரீகம் அல்லது வசியம் செய்பவர்கள் கருப்புக் கம்பளம் விரித்து அதன் மீது அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும்.
பொதுவாக ஜெபமாலை 27, 54,108 என்ற எண்ணிக்கையில் மணிகள் அமைக்கப்படுகிறது; அவற்றில் தனித்து உயர்ந்து இருக்கும் ஒரு மணி ஆனது "மேரு"என்று சொல்லப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்
ஜபம் செய்யும்போது ஜெபமாலை மணிகளில் நகம் படக்கூடாது விரல்கள் முனை கொண்டே உருட்ட வேண்டும். மணிகளை விரல்களால் நகர்த்தும் போது மணிகள் ஜெபம் செய்பவரின் நோக்கி நகரும் படி உருட்ட வேண்டும் இது தெய்வீக தரிசனத்திற்கும்,ஞானத்துக்கும் செய்யும் முறை.
செய்வினை மற்றும் தீய செயல்களுக்கு மணிகளை முன்நோக்கி உருட்ட வேண்டும்.இதற்கு தகுந்த மந்திரத்தை உரு போடவேண்டும் இதில் உச்சரிக்கும் தொனி மாறினால் ஜெபம் செய்பவர்களை பலியாகக் கூடும் ஆக எண்ணத்தில் தூய்மை கொண்டு ஜெபம் செய்வது நல்லது.
ஜபம் செய்யும்போது ஜெபமாலை பெரு விரல்களால் தள்ளி ஜெபம் செய்தால் முக்தியைத் தரும், ஆட்காட்டி விரலில் தள்ளி ஜபம் செய்தால் எதிரிகள் அழிவார்கள், நடு விரலால் தள்ளி ஜெபம் செய்திட செல்வம் கிட்டும், மோதிர விரலால் தள்ளி ஜெபம் செய்தால் உடல் பலம் பெரும், சுண்டு விரலால் தள்ளி ஜெபம் செய்திட துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மணிகளின் வகைகள்
துளசி மணி மாலை
இதை கொண்டு ஜபம் செய்தால் பெருமாள் அருள் கிட்டும் இது உடலின் குளிர்ச்சியை சம நிலைப்படுத்தும், ஆன்மீக உயர்வுக்கு இந்த மணியை உபயோகப்படுத்தலாம்.
ருத்ராட்ச மாலை
அக்னி தத்துவம் நிறைந்த மாலை பட்டுநூல்,தங்கம், வெள்ளி இதில் ஏதேனும் ஒன்றில் கோர்த்து ஜபம் செய்யலாம் சிவபெருமானின் அருட்பார்வை கண்டிப்பாக கிடைக்கும், மறுபிறவி என்பது இல்லை.
தாமரை மணி மாலை
மகாலட்சுமியின் கடாட்சம் இந்த மணிக்கு உண்டு தாமரை விதைகள் கொண்டு இது உருவாக்கப்படுகிறது தன ஆகர்ஷனத்திற்கு இந்த மாலை முதலிடம் வகிக்கிறது. இந்த வகை மணி பரவலாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது. இதில் 108 எண்ணிக்கையில் மாலை அமைவது சிறப்பு.
ஸ்படிக மாலை
குளிர்ச்சி தத்துவம் கொண்டது இந்த மாலை. ஜெபிப்பதற்கு இந்த மாலை பயன்படுத்தலாம், பார்வதி தேவியின் கருணை பார்வை கண்டிப்பாக கிடைக்கும். சக்தி உபாசகர் இந்த மாலை அணிவது மிகவும் சிறப்பு.
சந்தன மாலை
பொதுவாக இந்த வகை மாலை பரவலாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது குளிர்ச்சி மற்றும் வாசனை இந்த மாலையில் கிடைக்கும்..
கருங்காலி மாலை
ஆகர்ஷணம் சக்தி இந்த மாலைக்கு உண்டு. செவ்வாய் ஆதிக்கம் பெற்றது.திருமண தடை விலகும். வசியம் செய்வதற்கு ஏற்ற மாலை.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்