குழந்தை பாக்கியம் உண்டாக மூலிகை




பிறப்பும் இறப்பும் அந்த மகேசனுக்கு தெரியாது என்று சொல்வார்கள்.


இன்றைய தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதது பெருங்குறை. குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் தான் ஒரு பெண் முழுமையான தாய் என்று சொல்வதுண்டு.


புத்திரர் இல்லாத வீட்டில் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆல விருட்சம் போல் ஒரு குடும்பம் தொலைத்தோங்க வேண்டுமானால் அக்குடும்பத்தில் நிறைய குழந்தைச் செல்வம் இருக்க வேண்டும்.


பிறக்கும் ஒவ்வொருவரும் மூன்று கடன் உடையவர்களாகவே பிறக்கின்றோம் அதாவது


ஒன்று - பிரம்மச்சாரிய விரதத்தினால் முனிவர் கடனையும்,

இரண்டாவது - வேள்வியால் தேவர்கள் கடனையும்,

மூன்றாவதாக - பிள்ளைகளை பெறுவதால் பிதூர் கடனையும்

ஒழித்தல் வேண்டும் என்று கீரனூர் நடராஜரின் "ஜாதக அலங்காரம்" கூறுகின்றது.


தம்பதியர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை என்றால அன்னை/மாமியார் சாபம், தந்தை/மாமனார் சாபம், பித்ரு தோஷம் பித்ரு தோஷம் நாக தோஷம் போன்ற காரணங்களால் குழந்தைச்சல்வம் இல்லாமல் போகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.


நாம் ஜோதிடத்திற்கும் செல்ல வேண்டாம் என்ன காரணமாக இருந்தாலும அது நமக்கு தேவையில்லை. 


இன்றைய நிலையில் மருத்துவமனை நாடும் தம்பதிகள் ஏராளம். குழந்தை இல்லையே என்று லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள் அவர்களுக்காக ஒரு வேண்டுகோள் இங்கு சொல்லப்பட்டிருக்கும் மூலிகை வைத்தியம் நீங்கள் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.


தேவையான பொருட்கள்

விஷ்ணு கிரந்தி மூலிகை
எருமைப்பால்
எருமை வெண்ணெய்




முதலில் விஷ்ணுகரந்தை பற்றி பார்ப்போம். இது அருமையான காயகற்ப மூலிகை கடுமையான தீர்க்க முடியாத கர்ம நோய்களையும் (சாபம்) தீர்க்கும் சக்தி இந்த மூலிகைக்கு உண்டு. 


 வெள்ளை நிறம் பூவுடன் இருக்கும் விஷ்ணுகரந்தி பார்ப்பதற்கும், கிடைப்பதற்கும் அரிதாக இருக்கும், சிவப்பு நிற பூவுடன் இருக்கும் விஷ்ணு கரந்தி அரிதாக காணப்படும். நீல நிற பூக்களுடன் இருக்கும் விஷ்ணுகரந்தி பரவலாக எல்லா இடத்திலும் காணப்படுகிறது.


இதில் ஏதாவது ஒன்றை நம் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


பவுர்ணமி அன்று இந்த மூலிகையை சமூலமாக எடுத்தல் வேண்டும் அதாவது வேர், இலை, பூ, மற்றும் காய் இவை அனைத்துமே சமூலம் என்று சொல்லப்படுகிறது. 


மூலிகை எடுக்கும் முன்பு மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்தல் வேண்டும். மூலிகைக்கு சாபநிவர்த்தி எதற்கு என்று கேள்வி எழலாம்?மூலிகை மட்டுமன்றி எந்த ஒரு தாவரமும் பறித்தவுடன் இறந்து விடும் அதாவது தனது தன்மையை இழந்துவிடும் பறிப்பவர்களுக்கு சாபம் வரும் என்று சொல்லப்படுகிறது.ஆகையால் மூலிகைகள் சாப நிவர்த்தி செய்தல் வேண்டும் அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து பிறகு இரும்பு மற்றும் நகம் படாமல் எடுக்க வேண்டும் இப்படி செய்வதால் அந்த மூலிகையின் தன்மை அதாவது உயிர் அந்த மூலிகையில் தங்கி விடும். 


நாம் எதற்காக இந்த மூலிகையை எடுக்கிறோமோ அந்த காரியம் விரைவில் வெற்றிகரமாக முடியும்.
சாப நிவர்த்தி செய்ய தெரியாதவர்கள் தாயுமானவர் (சிவபெருமான்) மனதில் வேண்டிக்கொண்டு இந்த மூலிகையிடம் தேவையை குறித்து சொன்னபிறகு, மூலிகையை எடுக்கவேண்டும்.


எடுத்த பிறகு நன்றாக சுத்தம் செய்து எருமைப்பால் கொண்டு மைய அரைக்க வேண்டும் அதன்பிறகு எருமை வெண்ணெய் அதில் கலந்து பெண்கள் மாதவிடாய் முடிந்து ஆறாவது நாள் முதல் பத்தாம் நாள் வரை வெறும் வயிற்றில் குடித்து (அரை டம்ளர் அளவு) வர வேண்டும் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து மாதம் குடித்து வர கண்டிப்பாக அந்த சந்தானை கோபாலன் கருணை கிட்டும்.


தினமும் விஷ்ணுகிராந்தி மூலிகை கிடைக்கவில்லை என்றால் அந்த மூலிகை எடுத்து வந்து நிழலில் காயவத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.


மற்றொரு முறை




முதல்நாள் இரவில் கொள்ளு பருப்பை சுத்தம் செய்து (ஒரு கைப்பிடி அளவு) இரண்டு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் காலையில் அதை அப்படியே கொதிக்க  வைக்க வேண்டும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்கவிட வேண்டும்.அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அதாவது பெண்கள் மாதவிடாய் ஆன மூன்றாவது நாள் முதல் ஆறாவது நாள் வரை குடிக்க வேண்டும் இது போல் ஐந்து அல்லது ஆறு மாதம் செய்தல் அவசியம்.


 இப்படி குடிப்பதால் கர்ப பையில் இருக்கும் கசடு அதாவது அழுக்கு வெளியேறிவிடும் கர்ப்பப்பை சுவர்கள் சுத்தமாகிவிடும் எளிதில் கரு உண்டாகும்.


ஆண்களுக்கு




ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைபாடு இருந்தால் உணவில் கருணைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு மாதம் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் கண்டிப்பாக விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.


 முயற்சி செய்யுங்கள் முயற்சி திருவினையாக்கும்.


எல்லாம் வல்ல எம்பெருமான் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்