சப்த கன்னியர்


                                                              கண்ணகி



" பிடர்த்தலைப்பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் கணக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க்கிளைய நங்கை இறைவன்
ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளிதாருகன்"

                                                               ( சிலப்பதிகாரம்)


தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். ஆசிரியர் இளங்கோவடிகள். சமண சமயக் காப்பியம். இந்த காப்பியம் சங்க காலத்துக்கும் தேவார காலத்துக்கும் இடைப்பட்ட காலம். 


அறுவர்க்கு  இளைய நங்கை இறைவன் என்ற வரிகள், சப்த கன்னியர்களை குறிக்கிறது. அதாவது கண்ணகி கால் சிலம்பை கையில் ஏந்தி அரச சபை வாயில் காவலரிடம் முறையிட, காவலன் அரசனிடம் போய் கண்ணகியை பற்றி விவரிக்கும் காட்சி. கண்ணகி ஆறு சகோதரிக்கு இளையவளாக, அதாவது சாமுண்டியாக வந்திருக்கிறாள் என்கிறது பாடல். ஆக ஏழு கன்னியர் அதாவது சப்த மாதாக்கள் வழிபாடு சங்க காலத்திலே இருந்திருக்கிறது.


கன்னி தெய்வங்கள் ஏழு என்று சொல்வதுண்டு ஏழு கன்னிமார், சப்த கண்ணியர், சப்த மாதாக்கள், ஏழு தாய்மார்கள், ஏழு காவல் தெய்வங்கள் என்று ஊருக்கு ஊர் சொல்வது உண்டு.


வரலாறு


 கன்னியர்கள் ஏழ பேர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுடைய ஆடைகளை அந்த ஊர் இளைஞன் ஒருவன் எடுத்துக் கொண்டு சென்றுவிடுவதால் அப்பெண்கள் ஜல சமாதி ஆகி கரையோரம் ஒதுங்கி, அசரீரியாக எங்களைப் வழிபட்டால் இந்த கிராமம் சுபிட்சம் பெறும் என்று செவிவழிச் செய்தி உண்டு. அந்த கிராமத்தின் பெயர் ஏழமுக்கி. 


மற்றொரு செவி வழிச் செய்தி வானத்திலிருந்து வந்து பொதிகை மலையில் நீராடி, வனத்திலே தங்கி பக்தருக்கு அருள் புரிவதாகவும் செய்திகள் உண்டு.


ஊருக்கு ஊர் செவிவழிச் செய்திகள் பல உண்டு. காவிரி கரையோரம் உள்ள ஊர்களில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரத்தில் ஏழு கற்களை நட்டு படையலிட்டு புது துணிகளை கன்னிப்பெண்களுக்கு கொடுப்பது வழக்கம் உண்டு.


தங்கள் குடும்பத்தில் கன்னி கழியாமல் இறந்த பெண்களை கன்னி தெய்வமாக இருந்து தங்கள் குடும்பத்தை வழிநடத்தி செல்வதாக ஐதீகம்.


பவானி, ஈரோடு, பள்ளிபாளையம் குமாரபாளையம் போன்ற ஊர்களில் சிறப்பாக வழிபடுகிறார்கள்.


சப்த கன்னியர்கள்


பிராமி



மேற்கு திசைக்கு அதிபதி. பராசக்தி முகத்தில் இருந்து உருவானவள். நான்முகன் அதாவது பிரம்மனின் அம்சமாக கொண்டு தோன்றியவள். கல்விக்கு அதிபதி இவள் மேனி சூரிய சந்திரர்களின் மிஞ்சும் பொன்னொளி கொண்டவள்.

 மஞ்சள் வண்ணம் பிடித்தது. வரதம், அபயம், கமண்டலம், அசமாலிகை கரங்களில் கொண்டவள். இவளது வாகனம் அன்னம், கொடி அன்னக்கொடி. மான்தோல் ஆடையை அணிந்திருப்பவள். இவளை வழிபட்டால் கல்வியில் தேர்ச்சி பெறலாம்.

சர்மத்திற்கு அதிபதி

நோய்

சொறி, சிரங்கு உண்டாகும்.


காயத்திரி மந்திரம்

"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்"

 நைவேத்தியம்

 பிட்டு சர்க்கரைப்பாகு.


மகேஸ்வரி




வடகிழக்கு திசைக்கு அதிபதி அம்பாள் தோளில் இருந்து தோன்றியவள். பராசக்தி அம்சம் உடையவள். ரிஷப வாகனம், ரிஷப கொடி கொண்டவள். வரதம், அபயம்,  அட்சய மாலை சூலம்  கரங்களில் ஏந்தி அருள் புரிவாள்.

 ஜடாமகுடம் தரித்து காட்சி தருபவள். விஸ்வரூபம் பெற்று சூலத்தால் எதிரிகளை சம்ஹாரம் செய்தவள். குங்கும அர்ச்சனை செய்தால் மகிழ்ச்சி அடைவாள். இவளை வணங்கினால் கோபம் குறையும் சாந்தம் உண்டாகும். வெண்ணிறம் பிடித்தது.

ரணத்திற்கு அதிபதி

நோய்

வெட்டுக்காயம், ரணம் உண்டாகும்.

காயத்ரி மந்திரம்

"ஓம் ச்வேத வாணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மகேஷ்வரி ப்ரசோதயாத்"

நெய்வேத்தியம்

சுண்டல் நிவேதனம் செய்தால் மனம் குளிர் வல் குங்கும் அர்ச்சனை சிறந்தது.



கௌமாரி




அஷ்டத்திற்கும் ஆட்சிமாற்று புரிபவர் முருகனின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. முருகனை வழிபடுபவர்கள் குமாரன் என்று அழைக்கப்படுவார்கள். கவுமாரன் என்றால் குமரன் என்று பொருள். குமரன் என்றால் முருகன். 

அபயம், அங்குசம், வரதம் தரித்து அருள் புரிபவள். சிவந்த நிறத்தை அதிகம் விரும்புவள். வாகனம் மயில், கொடி மயில். இவளை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரத்தத்துக்கு அதிபதி

நோய்

கோமாரி நோய் கால்நடைகளைத் தாக்கும்.

காயத்ரி மந்திரம்


'ஓம் சிகி வாஹனாய வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கொளமாரி ப்ரசோதயாத்"

நெய்வேத்தியம்

எலுமிச்சம்பழ ரசம் மற்றும் வெண் பொங்கல்.


வைஷ்ணவி




நாராயணி என்றும் அழைக்கப்படுபவர் திருமால் அம்சம் கொண்டவள் தாமரை இலைகள் போல் பிரிந்த இவளது கண்கள் அழகுடன் விளங்கும் மஞ்சள் ஆடை அணிந்திருப்பாள் சங்கு சக்கரம் அபயம் வரதம் இவைகளுடன் காட்சி தருபவள் வாகனம் கருடன் கொடி கருடன்.

சீழ் மற்றும் விஷத்திற்கு அதிதேவதை

நோய்

சீழ் பெருகும்


காயத்ரி மந்திரம்

"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்"

நெய்வேத்தியம்

பாயாசம் நிவேதனம் செய்தால் இவன் மனம் மகிழ்வாள்.


வாராகி




அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குபவள்.அவதாரம் கொண்டு மோள முகம் கொண்டவள். மிருக பலமும் தேவர் குணமும் கொண்டவள். சில இடங்களில் திருமால் அம்சமாகவும் சில இடங்களில் சிவபெருமான் அம்சமாகவும் கொண்டாடப்படுபவர்.

 கரங்களில் கலப்பை, முசலம், வரதம், அபயம் தரித்து காட்சி தருபவள். இவளை வணங்கினால் எதிரிகள் தொல்லை இருப்பதில்லை. துன்பங்கள் எட்டிப்பார்க்காது.

ஏலும்புக்கு அதிபதி.

நோய்

வாத பித்த நோய்

காயத்ரி மந்திரம்

"ஓம் சியமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்"

நைவேத்யம்

 முறுக்கு வெள்ளரிக்காய்.


இந்திராணி





இந்திரன் அம்சம் கொண்டவள் அழகிய கண்கள் உடையவள் பொன்னிறமானவர் அற்புதமாக சூடுதல கரங்கள் அபயம் வரதம் சக்தி ஆயுதம் வஜ்ராயுதம் கொண்டவர். வாகனம் யானை யானை இவளை வணங்கினால் எதிரிகள் பயம் போகும். வாழ்க்கை துணை நல்லபடியாக அமையும்.

சதைக்கு அதிபதி

நோய்

அம்மை நோய் ஏற்படும்.

காயத்ரி மந்திரம்

"ஓம் சாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஜந்திரீ ப்ரசோதயாத்"

நைவேத்யம்

 பலாச்சுளையில் பலகாரம் செய்து நிவேதனம் செய்தால் மனம் குளிரும்.


சாமுண்டி





காளி பத்ரகாளி போன்ற பெயர்களும் சிவன் அம்சம் கொண்டவள் கரங்களில் சூலம் கரும்பு சக்கரம் பாசம் பலகை வில் சங்கு முதலியன தாங்கி அருள் புரிபவள். சடா மகுடம் தரித்தவள். வாகனம் மகிஷ வாகனம்.

நரம்புக்கு அதிபதி


நோய் 

கிராமத்தில் கலகம் உண்டாகும்.


காயத்ரி மந்திரம்

" ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
 தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்"

நெய்வேத்தியம்

 அவல் பாயாசம் அவள் கலந்த தின்பண்டங்கள் தயிர் சாதம்.

ஒவ்வொரு தேவியின் காயத்ரி மந்திரத்தை 48 அல்லது 108 முறை ஜெபித்து வந்தால் உங்களது எண்ணம் ஈடேறும் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்