யந்திரம் மந்திரம்






மந்திரம்:-


மந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல. மறை முகமாக நம் உள்ளுணர்வின் மூலம் இறை அனுபவத்தை தூண்டும் ஒலி அதிர்வு அலைகள் உண்டாக்கும் ஆற்றல் உடையது மந்திரம். ஒலி அதிர்வு அலைகளின் வடிவமே இறைவன்.


மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு அலைகள் தான். ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே இருந்தால் அது நம் ஸ்தூல உடம்பிலும் சூக்கும உடம்பிலும், அறிவிலும் நுட்பமான ஒலி அதிர்வு அலைகளை எழுப்பும்.


ஒருவர் என்ன பலன் அடைய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதற்கு ஏற்றவாறு ஒலி அமைப்பு எழுத்துக்கள் உள்ளன.மந்திரத்தின் வித்து (விதை) எழுத்தாகும்.


சில குறிப்பிட்ட மந்திரங்களில் வித்து எழுத்துக்களை நாம் உணராமல் இருக்கலாம், இருந்தாலும் அந்த மந்திரத்தை தொடர்ந்து ஓதி வருவதன் மூலமாக நம்முள்ளே அதிர்வுகள் எழுப்பி அதன் ஆற்றலை நாம் விரும்பிய பலனை பெற முடியும்.


மந்திரங்கள் நோய் நீக்குவது மட்டுமல்ல, நோயை உண்டாக்கவும் முடியும். பில்லி, சூனியம் முதலிய மாரண வித்தைக்காரர்கள் தாங்கள் விரும்பும் கூடிய காரியங்களை செய்வதற்கு அதற்கு வேண்டிய மந்திரங்களை பயன்படுத்து கின்றனர் ஒருவரை பாதுகாப்பதற்கு மந்திரங்கள் உண்டு, ஒருவரை கொலை செய்வதற்கு மந்திரங்கள் இருக்கின்றன. மந்திரங்களின் அடிப்படை அதன் ஏழத்து.


ஒலி அமைப்புக்கு ஏற்றவாறு எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் 51 அட்சர எழுத்துக்கள் கொண்டது. இதை மாற்றி மாற்றி இணைத்து உச்சரிக்கும் போது அதற்குரிய வெவ்வேறு ஒலிகள் உண்டாகின்றன. உதாரணமாக  க்ரிம் வங்,  சங், டங், ரிங்.





இப்படி உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு வகையான பலன்கள் கொடுக்கும், நல்லது அல்லது கெட்டது.இந்த மந்திரத்தை தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்தால்  அதற்கு "உரு" என்று சொல்லப்படுகிறது.


இப்படி ஓதிக் கொண்டிருக்கும் மந்திரத்தை அதாவது ஒலி அலைகளை பதிவு செய்வதற்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. அது ஜெபமாலை, தாயத்து, டாலர், எலுமிச்சை பழம்,  யந்திரமாக இருக்கலாம். 


அட்சரங்கள்

"சிவ சிவ" - என்று சொன்னால் தீவினைகள் ஒழியும்.

"வசி வசி" - என்றால் பீடைகள் விலகும்.

"அசி அசி"  - என்றால் பல்கி பெருகும்.

"மசி மசி". - என்றால் எல்லா விதமான விஷங்கள் இறங்கும்.

"உசி உசி" என்றால் அனைத்தும் ஒழிந்து விடும்.

" வங் வங்" என்றால் உலகம் வசியமாகும்.

"நங் நங்" என்றால் நன்மைகள் நடக்கும்.

"சிங் சிங்" என்றால் மிருகங்கள் ஒடும்.

"அங் அங்" என்றால் இடி விழாது.

" மசி நசி நசி மசி" பேய் பிசாசுகள் ஒடும்.


இவைகள் அனைத்தும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் இருந்து வந்தது.


சமஸ்கிருதத்தில் உள்ள 51 (அ முதல் க்ஷ வரை) எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு தனித்தன்மையுடன் கூடிய ஒலி அதிர்வு அலைகளை உடையது.


சமஸ்கிரதத்தில் ஐம்பத்தொரு எழுத்துக்களும் ஆறு ஆதாரங்களில் பல இதழ்களாக அமைந்து இருக்கின்றன. ஒவ்வோர் இதழும் ஒவ்வொரு வகையான ஒலி அதிர்வு அலைகளை எழுப்பும் சக்தியாக அமைந்திருக்கிறது.


1. அம்    2. ஆம்   3. இம்  4. ஈம்  5. உம்
6. ஊம். 7.  ரிம்.   8.  ரீம்   9. லும் 10.லூம்
11.ஏம் 12.ஐம் 13 ஓம் 14.ஔம் 15.அம்
16. அகம் 17.கம் 18.ககம் 19.க்ம் 20.க்கம் 21.ஙம் 22.சம் 23.ச்சம் 24.ஜம் 25.ஜ்ஜம் 26.ஞம் 27.டம் 28.ட்டம் 29.டம் 30.ட்டம் 31. ணம் 32. தம் 33.ததம் 34.த்ம் 35.த்தம் 36. நம் 37.பம் 38.ஃபம் 39.ப்ம் 40. ப்பம் 41. மம் 42.யம் 43.ரம் 44.லம் 45.வம் 46.ஸம் 47.ஷம் 48.ஷ்ஷம். 49.ஹம் 50.ளம் 51.க்ஷம்.


ஒரு மந்திரத்தை ஓதும் போது அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள தேவையில்லை, ஆனால் அந்த மந்திரம் அதற்குரிய ஆற்றலுடன் நம் உடலில் வேலை செய்யும். அது நம் அறிவுக்கு எட்டாமல் இருந்தாலும் அது தன் ஆற்றலுடன் வேலை செய்வதிலிரந்து அதை நிறுத்த முடியாது, இதுதான் மந்திரங்களின் ஆற்றலாகும்.


பீஜ மந்திரங்கள்


ஷ்ரீம், ஐம், க்லீம், ஹ்ரீம், க்ரீம், தம், ஹௌம், கம், க்ளௌம், ஹும், க்ஷ்ரெளம். 

இவைகள் பீஜ மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது. 
அனைத்தும் ஓம் என்ற பிரணவ மந்திரமே மூல மந்திரமாக அமைந்திருக்கிறது. ஓம் என்ற மந்திரத்தில் இருந்தே அனைத்து மந்திரங்களும் உருவானது என்று வேதம் சொல்கிறது.





யந்திரம்:-


யந்திரமே மிகச் சிறந்தது. செப்பு அல்லது தாமிர தகடு சிறந்தது. காரணம் ஒலி அலைகளை கிரகிக்கும் தன்மை அதாவது ஆகர்ஷண சக்தி அதிகம் இந்த தகடுக்கு உண்டு. இவை இரண்டு விதமாக கிடைக்கும் கனத்த மற்றும் மெல்லிய தகடு.

தேவைகள் எதுவோ அதற்குண்டான யந்திரத்தை செய்தோ அல்லது சமயப் பெரியவர்கள், ஜோதிடர்கள், சாஸ்திரிகள் இவர்களிடமிருந்து வாங்கி குறைந்தபட்சம் 48 நாட்கள் பூஜை செய்து வந்தால் பலன் நிச்சயம் உண்டு.


யந்திரங்கள் பல வகை உண்டு. 
ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு ராசிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும், ஒவ்வொரு தெய்வத்துக்கும் யந்திரங்கள் உண்டு.










யந்திரங்கள் வகைகள்



கணபதி யந்திரம்

அனைத்து தடைகளையும் நீக்கும் தொழில் சிறக்கும் முடங்கி இருக்கும் வியாபாரம் வெற்றி அழைத்துச் செல்லும் சகல நன்மைகள்  கிடைக்கு


ருத்ரகவசம் யந்திரம்

சிவனுக்கு உடையது.ஆயுள் தோஷத்தை நீக்கக் கூடிய யந்திரம்.


சுதர்சன யந்திரம்

பெருமாள் உடையது. வினைகள் தீரும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.


சுப்ரமணிய யந்திரம்

முருகனுக்கு உடையது திருமண தடை நிவர்த்தி செய்யக்கூடியது.


அஷ்டலட்சுமி யந்திரம், ஆஞ்சநேயர் யந்திரம், ஸ்ரீ சக்கரம் யந்திரம், மகாலட்சுமி யந்திரம், குபேர யந்திரம், சரஸ்வதி யந்திரம், பைரவர் உபாசனா யந்திரம், நவகிரக யந்திரம் இப்படியாக யந்திரங்கள் பல உண்டு.


யந்திரங்களை பயன்படுத்தி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வளமாக வாழ வேண்டும். எம் பெருமான் அருள் புரிவாராக.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்