நவ நாயகர்கள் வழிபாடு,



"வேள்படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாளரக்கர் புரம்எரித் தான்மங் கலக்குடி
ஆளும் ஆதிப் பிரான் அடி கள் அடைந்து ஏத்தவே
கோளும் நாளவை போயறும் குற்றமில்லார்களே"

                                                                                    (ஞான சம்பந்த மூர்த்தி)


சூரியனார் கோயில் தல வரலாறு


காலவ முனிவர்


இமயமலைச் சாரலில் முனிவர்கள் பலர் தவம் செய்து வந்தனர். அதில் காலவ முனிவரும் ஒருவர். அங்கே இளந்துறவி ஒருவர் காலவ முனிவரை சந்தித்து தனது எதிர்காலம் பற்றி தெரிவிக்கும்படி கேட்டார். காலவ முனிவரும் தனது ஞான திருஷ்டியால் இளம் துறவியின் எதிர்காலம் ஆராய்ந்து, சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.


எல்லோருக்கும் எதிர்காலம் சொல்லும் நீர், உமது எதிர்காலம் என்னவோ?என்று இளம் துறவி வினா எழுப்ப, நீ யாரப்பா?என்று கேட்க, நான் தான் காலதேவன் என்று சொல்லி மறைந்தான்.


காலவ முனிவர் தன் எதிர்காலம் என்னவென்று அறிய ஞானதிருஷ்டியால் ஆராய்ந்தார் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக தனக்கு தொழுநோய் வர இருப்பதை கண்டு உணர்ந்தார்.


இமயமலையிலிருந்து விந்திய மலைக்கு வந்த காலவ முனிவர் நவகிரங்களின் நோக்கி கடும் தவம் புரிந்தார். அவர் தவத்தை மகிழ்ந்து நவகிரகங்கள் அவர் முன் தோன்றினார்கள்.தனக்கு வரவிருக்கும் தொழுநோய் வராமல் காத்து அருள் புரிய வேண்டும் என்று வரம் கேட்டார் அவ்வண்ணமே ஆகுக என்று வரம் தந்து மறைந்தனர்.





நவகிரகங்கள்


பிரம்ம தேவருக்கு நவகிரகங்கள் காலவ முனிவருக்கு கொடுத்த வரத்தை கேள்விப்பட்டு கோபம் கொண்டார். "நவகிரகங்களே"சிவபெருமானின் ஆணைப்படி காலதேவனின் துணைகொண்டு உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் அவரவர்கள் வினைப்பயனை அனுபவிப்பதற்காக தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் தனித்து செயல்பட அதிகாரம் இல்லை, ஆகையால் முனிவருக்கு வரவிருந்த தொழுநோயை நீங்கள் அனைவரும் பூலோகத்தில் பிறந்து அவர் அனுபவிக்க வேண்டிய கால அளவை நீங்கள் தொழுநோய் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார்.

நவகிரகங்கள் மிகவும் வருந்தி சாபவிமோசனம் யாது? என்று வினாவ பிரம்மதேவரும் மனமிரங்கி பின்வரும் சாபவிமோசனம் சொல்லத் தொடங்கினார்.





தென் தமிழகம் சென்று காவிரி ஆற்றின் வடகரை அணுகுங்கள் அங்கே வெள்ளெருக்கங்காடு (ஆர்க்க வனம்) ஒன்று உள்ளது அங்கு 78 நாட்கள் தவம் புரிந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் உதியாதி ஏழு நாழிகைகுள் எருக்க இலையில் ஒரு பிடி அளவு தயிர் அன்னம் வைத்து பிரிணவரதரையும் தாய் மங்கள நாயகியையும் வழிபட்டு நைவேத்யம் செய்த தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும் மற்ற நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் எனறார்.


அகத்தியர்





பூலோகம் வந்த நவகிரகங்கள் காவிரி ஆற்றின் வடகரையில் வெள்ளருக்கன் காட்டை தேடிய போது அங்கு அகத்தியர் தென்பட அவரிடம் தங்கள் நிலைமையை சொல்லி காட்டைப் பற்றி விசாரித்தனர். அவரும் நானும் அங்குதான் செல்கிறேன் என்று சொல்லி நவகிரங்கள் அழைத்துச் சென்றார்.


நவகிரகங்கள் அகத்தியரிடம் நாங்கள் எங்கிருந்து தவம் செய்தால் நன்மை ஏற்படும் என்று கேட்க அவரும் பதிலுரைத்தார்.


நவகிரகங்களே நீங்கள் தவம் செய்வதற்கு இந்த வெள்ளருக்கன் காட்டின் வடகிழக்குப் பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அங்கே விநாயகரை பிரதிஷ்டை செய்து தவம் எந்த தடையும் இன்றி முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 78 நாட்கள் தவம் புரிய வேண்டும். திங்கட்கிழமை மட்டும் தயிரன்னம் எருக்க இலையில் வைத்து புசிக்க வேண்டும் என்று சொன்னார்.


எருக்கன் இலை ரகசியம்


நவகிரகங்கள் அகத்திய முனிவரிடம் எருக்க இலையில் தயிர் அன்னத்தை புசிக்க சொன்ன காரணம் என்ன? என்று கேட்க, அதுவா தேவரகசியம் இருந்தாலும் மூலிகையின் தண்ணியை எடுத்து இருக்கிறேன் என்று பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்.

 எருக்க இலையில் தயிர் அன்னம் வைத்தால் அந்த இலையில் உள்ள சாரம் (சாறு அல்லது மருந்து) சிறிதளவு பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி இந்த சாறு தயிர் அன்னத்தில் கலந்து விடும் அதனால்தான் பிரம்மதேவன் மறைத்து நோன்பு முறையை மட்டும் கூறினார்.




தவம்


பிரம்மதேவன் மற்றும் அகத்திய முனிவர் வழிகாட்டுதல்படி அவர்கள் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை கண்டு மகிழ்ந்து பிராணவரதர் மற்றும் மங்களநாயகி யும் அவர்கள் முன் தோன்றி "நவகிரகர்களே"உங்களுடைய தவத்திற்கு மகிழ்ந்தோம் உம்முடைய தொழுநோயி இந்நேரத்துடன் முற்றும் நீங்கும். இந்த வனத்தில் நீங்கள் தவம் செய்த இடத்தில், உங்களுக்கு எனத் தனி ஆலயம் உண்டாகி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கும். இங்கு வரும் பக்தர்களுக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம் என்று சொல்லி மறைந்தனர்.


நவகிரக வழிபாடு





நவகிரக வழிபாடு ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கிறது நவகிரக தோஷம் உடையவர்கள். சூரியனார்கவில் வந்து பரிகாரம் செய்து நவகிரகங்கள் அருளைப் பெறுங்கள்.


கோளறு பதிகம்


"வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
                 மிகநல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
                உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
              சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
            அடியார் அவர்க்கு மிகவே"


என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
           எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து, என்
          உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொடு ஆறும்
         உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
        அடியார் அவர்க்கு மிகவே


உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து 
         உமையோடும் வெள்ளை விடைமேல் 
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என் 
         உளமே புகுந்த அதனால்
 திருமகள் கலையது ஊர்தி செயமாது பூமி 
        திசை தெய்வம் ஆன பலவும் 
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
       அடியார் அவர்க்கு மிகவே


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
       மறையோதும் எங்கள் பரமன் 
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என் 
      உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் 
      கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
     அடியார் அவர்க்கு மிகவே.


நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
      விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள்  வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
வெம்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் 
      மிகையான பூதம் அவையும் 
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே.


வாள்வரி அதள்அது ஆடை வரி கோவணத்தர்
         மடவாள் தனோடும் உடனாய் 
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் 
        உளமே புகுந்த அதனால் 
கோள்அரி உழுவையோடு கொலையானை கேழல் 
       கொடுநாக மோடு கரடி 
ஆள்அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
       அடியார் அவர்க்கு மிகவே.


செப்பு இள முலைநன் மங்கை ஒரு பாகம் ஆக
          விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிஇள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் 
         உளமே புகுந்த அதனால்
 வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் 
        வினையான வந்து நலியா 
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
       அடியார் அவர்க்கு மிகவே


வேள் பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து 
       மடவாள் தனோடும் உடனாய் 
வன்னி கொன்றை மலர்சூடி வந்து என் 
       உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் 
      இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே


பலபல வேடம் ஆகும் பரன் நாரி பாகன்
       பசு ஏறும் எங்கள் பரமன்
சலமக ளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் 
       உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் 
       வருகாலம் ஆன பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே


கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு 
        குணம்ஆய வேட விகிர்தன்
 மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
        உளமே புகுந்த அதனால்
 புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
        திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
        அடியார் ஆவர்க்கு மிகவே.


தேன்அமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து 
         மறைஞான ஞான முனிவன் 
தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து 
        நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
      அரசாள்வர் ஆணை நமதே



நவகிரங்களின் மகிமையை தனித் தனிப் பதிவாக பதிவு செய்கிறேன்.


வாழ்க வளமுடன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்