மந்திர சித்தி பெறுவது எப்படி?


"மந்திரம் யந்திரம்"எனது முந்தைய பதிவில் மந்திரம் அது இயங்கும் தன்மையைப் பற்றி எடுத்துரைத்தேன். இதில் மந்திரம் சித்தி செய்யும் முறை பற்றி பதிவு செய்கிறேன்.


மந்திரத்தின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது.லட்சம் அல்லது கோடிக்கணக்கான முறை ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சொன்னால் அந்த மந்திரம் சித்தியாகும். சித்தியான மந்திரம் பிரயோகம் செய்தால் அதன் பலன் கிடைக்கும்.


மந்திரத்தை லட்சம் முறை சொல்லும் போது உடலில் மந்திர ஒலி அலைகள் உடல் முழுவதும் பரவும். அதுவே பரவச நிலைக்கு சாதகரை (உபாஸனை செய்பவர்) அழைத்து சொல்லும்.


அந்த அதிர்வு அலைகளை தான் யந்திரத்தில் பதிவு செய்கிறோம். தங்கம், வெள்ளி, செப்பு, தாமிரம் போன்ற உலோகங்களில் ஈர்ப்பு சக்தி அதிகம் அதாவது ஆகர்ஷன சக்தி அதிகமுண்டு.


ஜெபம் செய்ய ஏற்ற இடம்


கீதையில் அத்தியாயம்-6 ஸ்லோகம் 11





"ஸீசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸ ந மாத்மந
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் செலாஜி நகு ஸ்தோத்திரம்"


பொருள்


தூய்மையான இடத்தில் தரைமீது தர்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக விரித்து மிக உயரமாக இல்லாமலும் மிகத் தாழ்வாக இல்லாமலும் தன்னுடைய இருக்கையை அசைவற்றதாக அமைத்துக் கொண்டு........



விளக்கம்


தியானம் செய்வதற்கு இடம் இயல்பாகவே பரிசுத்தமாக இருக்க வேண்டும் அந்த இடத்தை துடைத்து அல்லது மெழுகித் (பசு சாணம் கொண்டு) தூய்மையாகவும் மாசற்ற தாகவும் இருக்க வேண்டும்.



கங்கை, யமுனை, காவிரி முதலிய புண்ணிய நதிக் கரை அல்லது மலைக்குகை, தேவாலயம், புனித தலங்கள், சோலை, பூங்கா, மாசற்ற காற்று வீசுகின்ற இடங்கள். எது எளிதாகக் கிடைக்கின்றனவோ. அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.



அமர்வதற்கு வசதியாக பலகை அல்லது கல்லினால் செய்யப்பட்ட இடம் ஆசனம் ஆகும் . அந்த இடம் உயரமாக இருந்தால் தியானத்துக்கு தடையாக சோம்பலும், தூக்கமும் நேரிடும்போது தடுமாறி விழுந்து காயம் ஏற்படலாம்; மிகவும் தாழ்வாக இருந்தால் தரையின் இளம் சூடு எறும்பு, புழக்கள் இவற்றால் இடையூறு ஏற்படலாம். ஆகவே அதிக உயரமாகவும் தாழ்வும் இருக்கக் கூடாது.







கல் அல்லது பலகையால் ஆன ஆசனம் சொரசொரப்பாக இருந்தால் அதில் உட்காரும் போது கால்களுக்கு கஷ்டம் உண்டாகலாம். ஆகவே அதற்கு மேல் தர்ப்பையை விரித்து அதன் மேல் மான்தோல் விரித்து கொண்டால் அந்தத் தோல் விரைவில் வீணாகாது. துணியை மான் தோல் மீது விரிக்க வேண்டும். அப்போதுதான் தோலில் உள்ள ரோமங்கள் உடலில் ஒட்டாது. அதனால்தான் மூன்றுவிதமான விரிப்புகளை இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. மான்தோல் இல்லையென்றால் கம்பளி பயன்படுத்தலாம்.


எந்த திசையில் அமர்வது



கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் உண்டாகும். அக்னி மூலை இருந்து தவம் செய்தால் கடன் தீரும். மேற்கு திசை நோக்கி தவம் செய்தால் பகை தீரும். ஈசானம் (வடகிழக்கு) மோட்சம் ஏற்படும். அதுபோல் ஆசனம் மிக முக்கியம் குடும்பஸ்தர்கள் சுகாசனம் சிறந்தது. 9 வகையான ஆசனங்களில் இருந்து ஜெபம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது







பத்மாசனம் மிகச்சிறந்து.

 எளிமையான ஆசனத்தை பயன்படுத்தவேண்டும், கஷ்டமான ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.


மந்திர சித்தி


நம் முன்னோர்கள் மந்திர சித்தி எளிதாக அடைவதற்கு சில வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.


சூரிய, சந்திர கிரகணம் அன்று ஒரு மந்திரத்தை ஜபம் செய்தால் சித்தி ஆகும் (கிரகண காலம் முழுவதும்).


தேய்பிறை அஷ்டமியில் ஜெபம் தொடங்கி அடுத்த தேய்பிறை அஷ்டமி வரை நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை ஜெபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.


மாதம் முழுவதும் இரவில் மந்திரம் ஜபம் செய்தால் மந்திர சித்தியாகும்


வளர்பிறை அஷ்டமி அல்லது தேய்பிறை அஷ்டமி அல்லது சதுர்த்தி ஏதாவது ஒரு நாள் தேர்வு செய்து பிரம்ம முகூர்த்தத்தில் ஜபத்தை தொடங்கி மறுநாள் சூரிய உதய நாழிகை வரை இடைவிடாமல் ஜபம் செய்தால் மந்திர சித்தியாகும்.


ஒரு மாதத்தில் மந்திரம் சித்தியாக விரும்புகிறவர்கள் ஒருகுறிப்பிட்ட திதியில் ஜெபத்தை தொடங்கி அடுத்த தேதி வரை நாள் ஒன்றுக்கு 1008 அல்லது 10008 முறை மூலமந்திரத்தை மட்டும் சொன்னால் மந்திரம் சித்தியாகும்.


சமஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரையில் 51 அட்சரங்கள் (பார்க்க எனது மந்திரம் யந்திரம் பதிவு) மாத்ருகா அக்ஷரங்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு அட்சரங்களுக்குஒரு மணி என்று 51 மணிகள் கொண்டு     ( பார்க்க எனது - ஜெபமாலை பதிவு) மாத்ருகா ஜெபமாலை உருவாக்கப்படுகிறது.
இந்த மாலையை (51அட்சரங்கள்) ஏறு முக வரிசையிலும் இறங்குமுக வரிசையிலும் ஜெபம் செய்யவேண்டும் மந்திரத்தை ஒரு மாதம் ஜெபிக்கவேண்டும் மந்திரம் சித்தியாகும்.


வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்