வாழ்க்கையை கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். எல்லாம் நமக்கு வேண்டும் என்றால் நாம் எல்லாவற்றையும் விட வேண்டும்.
இன்பம் வேண்டும் என்றால் துன்பத்தையும், சுகம் வேண்டும் என்றால் துக்கத்தையும், நன்மை வேண்டும் என்றால் தீமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே வாழ்க்கையை நியதி.
யாகம் மற்றும் ஹோமம் இரண்டுமே இறைவனிடம் வரம் கேட்பதற்காகவே செய்யப்படுவது ஹோமம் என்றால் அர்ப்பணிப்பு. இது ஒரு சிறு வகையான யாகம். ஹோமம் ஒரு மணி முதல் 4 மணி நேரத்தில் செய்வது. யாகம் என்பது 3, 4, 5 நாட்கள் தொடர்ந்து வீடு, கோவில் அல்லது பொது இடத்தில் செய்வது. இரண்டுமே அக்னியை வளர்த்து தெய்வத்தை வணங்குவது.
யாகம் ஒரு காட்சி
"யதாலே லாயதே ஹ்யர்ச்சி ஸமித்தே ஹவ்யவாஹனே!
ததாssஜ்ய பாகௌ அந்தரேணோssஹீதீ ப்ரதிபாநயேதா"
(முண்டக உபநிஷதம்.)
பொருள்
ஜொலித்துக் கொண்டிருக்கின்ற அக்னியில் தீ ஜுவாலைகள் ஓங்கி எழும்போது இரண்டு பக்கங்களுக்கு நடுவில் ஆஹீதிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
விளக்கம்
ஆதிகாலத்தில் யாகங்கள் முக்கிய வழிபாட்டு முறையாக இருந்துவந்துள்ளது. மந்திரம் ஓதி வளர்க்கப்பட்ட யாகத்தீயில் (அக்னி) மந்திரம் சொல்லி ஆத்மார்த்தமாக உயர்ந்த பொருள்களை யாக குண்டத்தில் இடும்போது அந்தப் பொருள்கள் உரிய தேவர்களிடம் சென்று அடையும். ஆஹீதிகள் (யாகத்தில் போடும் பொருட்கள்) எப்படி ஹோமத்தில் இட வேண்டும் என்றால், அக்னியின் இடது மற்றும் வலது பக்கத்தின் நடுவில் இடவேண்டும்.
யாக குண்டத்தில் அக்னி வளர்த்து குறிப்பிட்ட தேவர்களை உத்தேசித்து உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களை சமர்ப்பித்து வழிபடும்போது அந்த யாகம்/ஹோமம் அதற்குரிய பலனை தருகிறது.
யாகம் மூன்று வகைப்படும் ஒன்று சுயநலம் இன்றி பொதுநலத்துடன் செய்வது, இரண்டாவது மனப்பூர்வமாக உள்ளத்தின் அடிப்படையில் செய்வது, மூன்றாவதாக ஆசைகள் நிறைவேறுவதற்காக செய்யப்படுவது.
உலக அமைதி அல்லது நன்மைக்காக செய்யப்படுகின்றன ஹோமத்தில் நாமும் இருப்போம் அதாவது எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைத்து செய்கின்ற செயலில் இறைவன் இருப்பான். சுயநலத்தில் செய்கின்ற செயல் அல்லது காரியத்தில் இறைவன் இருப்பதில்லை.
அக்னியின் ஏழு பண்புகள்
"காளீ, கராளீச மனோஜவாச
ஸுலோஹிதா யாச ஸுதூம்ரவர்ணா!
ஸ்ஃபுலிங் கினி விச்வருசி சதேவி
லேலாயமானா இதி ஸப்தஜிஷ்வா"
(முண்டக உபநிஷதம்)
பொருள்
காளீ, கராளீ, னோஜவா, சுலோஹிதா, சுதூரம்ணா, ஸ்ஃபுலிங்கினி, விச்வருச் ஆகிய ஏழம் ஓங்கி எழுந்து பிரகாசத்துடன் எழுகின்ற அக்கினியின் ஏழு நாக்குகள் ஆகும்.
விளக்கம்
காளீ என்றால் கருப்பு, கராளீ என்றால் பயங்கரம், மனோஜவா என்றாள் மனத்தின் வேகம், சுலோஹிதா என்றால் சிவப்பு, சுதூம்ரவர்ணா என்றால் புகையுடன் கூடியது, ஸ்ஃபுலிங்கினி என்றாள் நெருப்புப் பொறிகளுடன் கூடியது, விச்வருசிதேவி என்றால் அழகுடன் பரவுகின்ற ஒளி. இவையே அக்னியின் ஏழு பண்புகள்.
(அக்னி தேவன்)
தேவர்களின் தலைவன் இந்திரன். வருணன் போன்றவர்கள் ஏழு உலகங்களுக்கும் செல்வதற்கான யாகங்கள்/ஹோமங்கள் இந்திரன் மற்றும் தேவர்களையும் (பூலோகம், புவர்லோகம், சொர்க்கலகம்,மஹா லோகம், ஜனலோகம்,தபலோகம் சத்தியலோகம் என்று 7 லோகங்கள் சொல்லப்பட்டிருக்கிறது) உத்தேசித்து செய்யப்படுகின்றது.
அக்னி நாக்குகளில் குறிப்பிட்ட தேவர்களுக்கு குறிப்பிட்ட ஆகுதிகள் பொருட்களை அளிக்க வேண்டும்.யாகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பொருட்கள் அக்னிதேவன் அந்தந்த தேவர்களுக்கு கொண்டு சேர்க்கிறார் அக்னிதேவன் புரோகிதன் என்று அழைக்கிறோம்.
பயன் என்ன
சூரியனின் கிரணங்கள் என்கிறது மந்திரம். சூட்டினால் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி மழை வருவது போல்; அக்னி தேவன் ஆஹீதி பொருட்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதன் சாராம்சத்தை உரிய தேவர்களிடம் சேர்க்கிறான்.
இன்ன இன்ன யாகங்களுக்கு/ஹோமங்களுக்கு கன்னி இன்ன பொருட்கள் பயன்படுத்தினால் இன்ன இன்ன சுகபோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்