மங்கள நிகழ்ச்சிகளுக்கு செய்யப்படுவது தடை அல்லது இடையூறு இல்லாமல் செய்யும் செயலுக்கு செய்யப்படும் ஹோமம் கணபதி ஹோமம்.
நவகிரக ஹோமம்
நவ நாயகர்களால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து காத்துக் கொள்ள செய்யப்படுவது.
சுதர்சன ஹோமம்
நினைத்த காரி வெற்றி பெற செய்யப்படுவது
லட்சுமி குபேர ஹோமம்
வியாபார வளர்ச்சிக்காக செய்யப்படும் ஹோமம்
பார்வதி- பரமேஸ்வரன் ஹோமம்
திருமண தடை நீங்க மற்றும் நல்ல கணவன் மனைவி அமைய செய்யப்படுவது.
தன்வந்திரி ஹோமம்
நோய் - இதிலிருந்து விடு பட செய்யப்படும் ஹோமம்.
சரஸ்வதி ஹோமம்
கல்வியில் தேர்ச்சி பெற, அறிவு பெருக செய்யப்படும் ஹோமம்.
ஆயுஷ் ஹோமம்
ஆயுள் வேண்டி செய்யப்படுவது.
வாஸ்து ஹோமம்
வீட்டுப் பிரச்சினை தீர, வீடு கட்ட செய்யப்படும் ஹோமம்.
மிருத்யுஞ்ஜய ஹோமம்
அகால மரணம் ஏற்படாமல் இருக்க செய்யப்படுது.
சண்டி ஹோமம்
இடையூறுகள் அகற்ற, வளர்ச்சி ஏற்பட செய்யப்படும் ஹோமம்.
தில ஹோமம்
யம பயம் நீங்க செய்யப்படுவது.
ஒவ்வொரு ஹோமத்துக்கும் பொருட்கள், மந்திரம், விதிமறைகள் மாறுபடும்.
கணபதி ஹோமம் புதிய தொழில், வாழ்வில் வெற்றி பெற, புதிய வீட்டில் குடிபுக போன்ற மங்கள நிகழ்ச்சிகளுக்கு கணபதிஹோமம் செய்யப்படுவது வழக்கம். தடைகளை அகற்ற படிப்பு, பொருளாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றில் உள்ள தடைகள் நீங்க கணபதி ஹோமம் செய்தால் நன்மை. மேலே சொன்ன எல்லா ஹோமங்கள் செய்வதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.
கணபதி ஞானத்தின் உருவம் அதனால் தான் நமது முயற்சிகளில், நல்வழியில் நடத்துவார். நாம் நல்வழியில் தடையில்லாமல் காரியம் சித்தி பெற முதலில் விநாயகரின் அருள் பெற வேண்டும் அவரின் அனுகிரகம் இருந்தால் எந்த தடையும் வராது.
விநாயகரை மங்கள தாதா என்றும் சித்த தாதா என்றும் அழைக்கபடுவது வழக்கம், ஏனென்றால் அவர் நமக்கு நன்மைகளை மட்டும் அருள் புரிபவர் யோக அடிப்படையில் பார்க்கும்போது அவர் மூலாதாரத்திற்கு அதிபதியாவார் ஆகையால் எந்தக் நற்காரியத்துக்கும் மூலமாகவும் ஆதாரமாகவும் அவரை வணங்கி வழிபட வேண்டும்.
விநாயகர் வரப்பிரசாதி என்று சொல்லப்படுவதும் உண்டு காரணம் நாம் எந்த செயல் செய்தாலும் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவோம்; ஆகையால் வெற்றி என்ற வரத்தை பெற முதற் கடவுளை அணுக வேண்டும்.
ஹோமங்கள் தினசரி வாழ்வில் செய்தால் நல்லது ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதற்கு சாத்தியமிலலை ஆனால் கணபதி ஹோமம் தினமும் செய்யலாம், செய்ய இயலாதவர்கள் வாரவாரம் வெள்ளிகிழமை அன்று செய்யலாம் இல்லை என்றால் வளர்பிறை சதுர்த்தி அன்று செய்யலாம் (மாத ஒருமுறை).
அருகம்புல் மகிமை
காஷியப்ப முனிவர் தனது ஆசிரமத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்து தினமும் அவருக்கு அருகம்புல் கொண்டு பூஜை செய்து வந்தார். இவரே விநாயகருக்கு கணபதி ஹோமம் மந்திரம் உருவாக்கியவர். தினமும் அறுகம்புல் கொண்டு பூஜைசெய்வதைக் கண்ட ரிஷி பத்தினி அதிதிக்கு சந்தேகம் வந்தது விரைவில் காய்ந்து போகும் அருகம்புல்லைக் கொண்டு எதற்காக தினமும் பிள்ளையாரை வழிபாடு செய்கிறார்?. இந்த சந்தேகத்தை தனது கணவரிடம் கேட்டார்.
அருகம்புல்லின் மகிமையை அதிதிக்கு உணர்த்த விரும்பிய காசியபர் தான் பூஜை செய்த அருகம்புல்லை ஒன்றை எடுத்து அதிதியிடம் கொடுத்து தேவலோகம் சென்று இந்திரனிடம் இதற்கு சமமாக எடைக்கு எடை தங்கம் வாங்கி வா என்றார்.
அதிதிக்கு ஆச்சரியம், குழப்பம் இருந்தாலும் கணவரின் சொற்படி தேவலோகம் சென்று நடந்ததை யெல்லாம் இந்திரனிடம் சொன்னார்.
அருகம்புல்லின் எடைக்கு எடை தங்கம் வாங்கி வர எனது கணவர் கட்டளையிட்டுள்ளார்.
இந்திரன் அருகம்புல்லை தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் கொஞ்சம் தங்கம் வைத்தான் தராசு தட்டு சரிசமமாகவில்லை மீண்டும், மீண்டும் தங்கம் வைத்தாலும் தராசு தட்டு என்னமோ சரிசமமாகவில்லை. இந்திரன் தேவலோகத்தில் உள்ள அனைத்தும் வைத்தான் அப்போதும் தட்டு மேலே வரவில்லை.
அப்போதுதான் அதிதிக்கு தான் செய்த தவறு மற்றும் அருகம்புல் மகிமையை தெரிந்து கொண்டாள்.
மனதார தன் கணவரிடம் மன்னிப்பு கேட்க அவ்விடத்தில் தோன்றிய காசியபர் பிள்ளையாரைத் துதித்து ஒரு குண்டுமணி தங்கம் தராசுத் தட்டில் வைக்க தராசு சரிசமமானது.
கணபதி பூஜைக்கு மிக முக்கியம் அருகம்புல். நூற்றியெட்டு போற்றி அல்லது நாமாவளி சொல்லி அருகம் புல் கொண்டு பூஜை செய்தால்; விநாயகர் மனம் குளிரும், கேட்டதை தருவார். ஏனென்றால் அவர் எளிமையின் வடிவம்.
ஹோமத்தில் இடும் பொருட்களின் பலன்கள்
திரவியங்கள் மற்றும் தேங்காய் துண்டு மிகவும் ஹோமத்துக்கு உகந்தது.
செல்வம் சேர - மட்டை உரிக்காத ஆயிரம் தேங்காய் அல்லது தேங்காய் துண்டு அல்லது தாமரை.
நெல் பொரி திரிமதுரம் கொண்டு ஹோமம் செய்தால் சர்வ வசியம் கிடைக்கும்.
திரிமதுரம் கலந்த நெல்பொரி திருமணத்தடை விலகும்.
நெல் கலந்த சாதம், நெய் - விருப்பம் நிறைவேறும்.
தேன் - தங்கம் கிடைக்கும்.
நெய்யில் நனைத்த அப்பம் - மந்திர சித்தி கிடைக்கும், வெற்றி தரும்.
அருகம்புல் குபேர சம்பத்து.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்