விரதமிருக்கும் போது எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ஏனென்றால் உடல் சூட்டை சமன்படுத்த வேண்டும்.
திதி
சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி அதாவது தூரம், அதுவே திதி என்று சொல்லப்படுகிறது.சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்ந்து இருப்பது அமாவாசை. அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். சூரியனுக்கு நேர் எதிரே 180 டிகிரி வரும்பொழுது பௌர்ணமி ஏற்படுகிறது. அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட நாட்கள் 14 திதிகள் கொண்டது.
அமாவாசை
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதேசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்தசி
பவுர்ணமி
அம்மாவாசை திதியில் ஆரம்பித்து பௌர்ணமி திதி வரை தொடர்ந்து 14 திதிகள் நடுவிலிருக்கும்.
ஏகாதேசி என்பது மாதத்தில் பாதியாகிய பட்சத்தில் (திதியில்) பதினோராவது நாள் வருகிறது. ஆகவே மாதம் இருமுறை விரதம் கடைபிடிக்க வேண்டும். அமாவாசை முதல் பவுர்ணமி வரை உள்ள திதிகள் சுக்லபட்சம் அதாவது வளர்பிறை, பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள திதிகள் கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறை.
விரதம் என்று தொடங்க வேண்டும்
மார்கழி மாதம் சுக்ல பட்சம் வருகின்ற ஏகாதேசி யில் விரதம் தொடங்கி, அடுத்த வருடம் மார்கழி கிருஷ்ண பட்சம் ஏகாதசியில் முடிக்க வேண்டும். மார்கழி சுக்ல பட்சம் வருகின்ற ஏகாதசியை வைகுண்ட ஏகாதேசி என்று சொல்லப்படுகிறது. மாதத்துக்கு இரண்டு ஏகாதசி என்று மொத்தம் 24 ஏகாதேசி ஒரு வருடத்திற்கு வருகிறது.
24 ஏகாதேசியின் பெயர்கள்
மார்கழி மாதம்
கிருஷ்ணபட்சம் - உற்பத்தி ஏகாதசி
சுக்லபட்சம் - வைகுண்ட ஏகாதசி
தை மாதம்
கிருஷ்ணபட்சம் - சபலா ஏகாதசி
சுக்ல பட்சம் - புத்ரதா ஏகாதசி
மாசி மாதம்
கிருஷ்ண பட்சம் - ஷிட்திலா ஏகாதசி
சுக்லபட்சம் - ஜயா ஏகாதசி
பங்குனி மாதம்
கிருஷ்ணபட்சம் - விஜயா ஏகாதசி
சுக்கில பட்சம் - ஆமலகி ஏகாதசி
சித்திரை மாதம்
கிருஷ்ணபட்சம் - பாபமோசனிகா ஏகாதசி
சுக்லபட்சம் - காமதா ஏகாதசி
வைகாசி மாதம்
கிருஷ்ணபட்சம் - வருதினீ ஏகாதசி
சுக்லபட்சம் - மோஹிகி ஏகாதசி
ஆனி மாதம்
கிருஷ்ணபட்சம் - அபரா ஏகாதசி
சுக்ல பக்ஷம் - நிர்மல ஏகாதசி
ஆடி மாதம்
கிருஷ்ணபட்சம் - யோகினி ஏகாதசி
சுக்லபட்சம் - சாயினி ஏகாதசி
ஆவணி மாதம்
கிருஷ்ண பட்சம் - காமிகா ஏகாதசி
சுக்ல பட்சம் - புத்ர(ஜா)தா ஏகாதசி
புரட்டாசி மாதம்
கிருஷ்ணபட்சம் - அஜா ஏகாதசி
சுக்லபட்சம் - பத்மநாபா ஏகாதசி
ஐப்பசி மாதம்
கிருஷ்ணபட்சம் - இந்திரா ஏகாதசி
சுக்ல பட்சம் - பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை மாதம்
கிருஷ்ணபட்சம் - ரமா ஏகாதசி
சுக்ல பட்சம் - ப்ரமோதினி ஏகாதசி
ஏகாதசி விரத மகிமை
பெருமாளுக்கு உகந்த விரதங்கள் இரண்டு திருவோண விரதம் மற்றொன்று ஏகாதசி விரதம். 27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் திரு என்று அடைமொழி உண்டு.
ஒன்று திருவாதிரை சிவனுக்கு உகந்தது மற்றொன்று திருவோணம் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசியில் இருக்கின்ற விரதத்தின் பலன், திருவோண விரதம் இருந்தாலும் கிடைக்கும்.
ஏகாதசி அன்று உபவாசம் இருக்க வேண்டும். பகவான் பற்றிய சிந்தனையுடன் இரவு தூங்காமல் அவனின் திருநாமத்தைச் சொல்லி பஜனை செய்தால் மிகவும் நன்று இது "ஜாகர்ணா" எனப்படும். பகவானைப் பற்றி நினைத்து பிரார்த்தனை செய்து அதில் நாம் ஒன்றிப் போகும் புண்ணிய தினம் ஆகும், இதில் அனைவரும் ஈடுபடலாம்.
ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வருகிற ஏகாதசிக்கு ஆஷாட சுத்த ஏகாதசி என்று பெயர். மற்றொன்று நவம்பர் மாதம் மூன்றாவது வாரம் வருகிற ஏகாதசி கார்த்திகா சுத்த ஏகாதசி என்று பெயர்.
பாகவத புராணத்தின் படி திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டு கார்த்திகையில் துயில் நீங்கி எழுந்து இருக்கிறார். இந்த நான்கு மாதங்கள் கொண்ட பருவத்திற்கு சாதுர்மாஸ்யம் என்று பெயர்.இந்தப் பருவத்தில் பெரும்பாலும் மழை இருக்கும். மகான்கள், சன்யாசிகள் இடம் விட்டு இடம் செல்ல மாட்டார்கள். ஒரே இடத்தில் தங்கி இருந்து தியானம், பூஜை ,வேதாந்த போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
ஏகாதசி அன்று உணவு மறந்து, துயில் மறந்து முறையிலான காரியங்களைத் தொடர்ந்து இறைவனை நாடும் நாள் ஏகாதசி அன்று பட்டினி இருக்கும்போது; பகவானுக்காக பட்டினி இருக்கிறோம் என்ற புனித உணர்வை பெறுகிறோம். வயிற்றுக்கு உணவு இல்லாத நிலையில் சிந்தை பல நீங்கி இறைவனிடம் ஈடுபடுகிறது இவ்வாறு புண்ணியம் பெறுவது உடல்நலத்துக்கு ஏகாதசி உபவாசம் நல்லது.
மறுநாள் குளிர்ச்சி தரும் நெல்லிக்கனி, அகத்திக்கீரை அவற்றை சாப்பிடும் போது உடம்பின் ஜீரண உறுப்புகள் வலுவடைகின்றன. உணவையும் உறக்கத்தையும் துறக்க முன் வருவதால் உள்ளமும் வைராக்கிய பலன் பெறுகிறது.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்