வாமாச்சாரம்
"வாமாம்" என்றால் பெண் என்று பொருள்படுகிறது. வாமாச்சாரம் என்றால் பெண் சடங்குகள் மற்றும் காமம் என்று ஒரு சாரர்களால் சொல்லப்படுகிறது. வாமாசாரத்தை பின்பற்றுபவர்கள் பெண் தெய்வங்களை பாரம்பரியமான முறையில் வழிபட்டு வந்துள்ளனர்.
தாந்திரீகம் தமிழ்நாட்டிலும் வழக்கில் இருந்துள்ளது. தாந்திரீக மரபு வழி நின்றவர்கள் நமது சித்தர்கள் என்று சொல்லலாம். தாந்திரீகம் நீங்கள் கற்க விரும்பினால், அது உங்கள் கர்ம வினை தூண்டுதலே காரணமாக இருக்கும். நீங்கள் இந்த கலையை கற்று அதன்படி நடக்கத் தொடங்கினால், உங்கள் கர்ம வினைகள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும். உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும். மனம் ஆனந்தமாக இருக்க நீங்கள் உணர்வீர்கள். மனித வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் தாந்திரீக கலையில் நிறைய உள்ளன அவற்றின் ஆரம்பநிலை பயிற்சி தான் இந்தக் கலை.
தாந்த்ரீகம் என்பது கடினமான ஒரு செயலை அறிவு கொண்டு எளிமையாகவும், விரைவாகவும் செய்து முடிப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. மனிதன் ஆயுள் தெளிவில்லாமல் இருக்கிறது. இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தாந்திரீக மார்க்கமே சிறப்பானது தாந்திரிய மார்க்கத்தின் அடிப்படையான சில யோகங்கள் ஏற்படுத்தி அதை கடைபிடித்து வந்துள்ளனர்.
மந்திர யோகம், யந்திர யோகம், ஹட யோகம், ராஜ யோகம், குண்டலினி யோகம் போன்றவைகள் தாந்திரீகத்திற்கு அடிப்படையானவை. இதில் சில சக்தி வாய்ந்த வழி முறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை எளிமையாக்கி உருவாக்கி மற்றவர்களுக்காக ஒரு நிறைவான வாழ்க்கை வாழ இந்த தந்திரீக யோக மார்க்கத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பரிகாரம் - 9
சர்வ வசியம்
கோரோசனை காராம் பசு நெய் பச்சைக்கற்பூரம் சுத்தமான தேன் இவை அனைத்தும் சம அளவு எடுத்து கல்வத்தில் (கல்வம் இல்லை என்றால் அம்மியில் அரைக்கலாம்) இரண்டு மணி நேரம் அரைக்க வேண்டும் மெழுகு பதத்திற்கு வரும் ஒரு வெள்ளி டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
மந்திரம்
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அஞ்சனா தேவி பகவதி மகா மாயா க்லீம் ஜென்மம் ஐம் சர்வ காரியம் கதய கதய திரிலோக விரித்தினி மம வஸம் குரு குரு ஸ்வாஹா"
பலன்
வேலை விஷயம் அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் அல்லது காரியம் நல்லபடியாக நமக்கு சாதகமாக நடக்க இந்த அஞ்சனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம்.
பரிகாரம் - 10
வியாபாரம் செழிக்க
வியாபாரம் செழிக்க வியாபாரத்தில் ஊட்டியில் இருந்து வருமானம் தடைபட்டு கொண்டிருந்தால் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு டப்பாவில் 5 எலுமிச்சம்பழம் இரண்டு துண்டாக வெட்டி அதில் குங்குமம் மஞ்சள் தடவி வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின் மூடி வைத்துவடவும் மறு நாள் திறந்தவுடன் அனைத்தையும் எடுத்துக்கொண்டு முச்சந்தியில் அவைகளை போட்டு எரித்து விடவண்டும் இதுபோல் 9 ஞாயிற்றுக்கழமை செய்தால் வியாபாரம் செழிக்கும் வருமானம் கூடும்.
பரிகாரம் - 11
வேலை கிடைக்க
நேர்முக தேர்வில் அல்லது ஏதேனும் புதிய தொழில் முயற்சி தொடங்கும் முன் 3 வர மிளகாய் கல் உப்பு கொஞ்சம் பச்சைப்பயிறு கொஞ்சம் மூன்றையும் எடுத்து வலதுபுறம் இடதுபுறமாக சம்பந்தப்பட்டவரை சுற்றி விட்டு அவர் சென்ற உடன் அவைகளை எரித்துவிட வேண்டும் இப்படி செய்தால் வெற்றி நிச்சயம்.
பரிகாரம் - 12
மகாலட்சுமி வசிய சாம்பிராணி
கோரோசனை, பச்சைகற்பூரம், ரோஜா இதழ், ஆலமர இலை, வேப்ப இலை, துளசி, தாமரை, வெண்கடுகு, ஏலக்காய், வெள்ளெருகு, குங்குலியம், புங்கன், இலுப்பை, செந்நாயுருவி வேர், கஸ்தூரி மருதாணி, மாஇலை, வேப்ப இலை
இவை அனைத்தும் காயவைத்து இடித்து தூளாக்கிக் கொண்டு சாம்பிராணியுடன் பொடி செய்த இந்தத் தூளை கலந்து வைத்துக் கொள்ளவும். மாலை விளக்கேற்றி இந்த சாம்பிராணி புகை போட வேண்டும். இப்படி செய்து வந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி வசியம் ஆவாள்.
பரிகாரம் - 13
வீட்டில் அமைதி மற்றும் செல்வம் பெருக
பச்சரிசியுடன் நாட்டுச்சக்கரை கலந்து கருப்பு எறும்பு இருக்கும் இடத்தில் போட்டு வர செல்வம் பெருகும் வீட்டில் அமைதி நிலவும் சண்டை சச்சரவுகள் இருக்காது.
தாந்திரீகத்தில் எந்த ஒரு காரியத்திற்கும் உடனடியாக பலன் தரும் வகையில் யந்திர பிரயோகங்கள் உள்ளன மிக சக்தி வாய்ந்தவை. நல்ல பலன் தரும். கணவன் மனைவி ஒற்றுமை, குடும்ப சண்டை, பண கஷ்டம், கடன் தொல்லை, காணாமல் போனவர் திரும்பி வர, நவகிரக தாக்கங்கள் இருந்து வெளிப்பட, விபத்து வராமல் இருக்க , திருமணம் நடக்க, வியாபாரம் வெற்றி, குழந்தைகள் ஒற்றுமை போன்றவைகள் நடப்பதற்கு ஆயிரக்கணக்கில் யந்திர பரிகாரங்கள் இருக்கிறது.
(பார்க்க எமது யந்திர ஜாலம் பதிவுகள்).
வாழ்க வளமுடன்
0 கருத்துகள்