பைரவர் நீலநிற மேனி கொண்டவர் சிலம்பொலிக்கும்திருவடிகளை உடையவராய் பாம்புகள் பொருந்திய திருஅரையும் தலை மாலைகள் புரளும் திருமார்பும் சூலத் மழு பாசம் உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் பெற்றவர். சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும் பெரியதான இரண்டு கோரப் பற்களை உடைய உடையவராய் காட்சியளிப்பார்.
அஷ்ட பைரவர்
பைரவர் எட்டு வகைப் பணிகளை என் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவராக தோற்றம் தருகின்றார்.
அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர்,
அஷ்ட பைரவர்களின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.
சண்ட பைரவர்
நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு அதிபதியாவார். பைரவரின் உபசக்தி கௌமாரி. சிவந்த வர்ணம் எட்டு கைகளில் சூலம் தனுசு, கட்கம், சூலம், கதை, சக்கரம், அபயம், வரதம் இவைகளை கையில் ஏந்தி காட்சி தருவார். கோடி சூரியப் பிரகாசம் கொண்டவர் சண்ட பைரவர். இவரை வணங்குவதால் கடன் தொல்லை, சத்ரு தொல்லைகள் நீங்கும்.
யந்திரம்
பூஜாவிதி
யந்திரத்தை செப்புத் தகட்டில் எழுதி கொள்ளவும். யந்திரம் பன்னீர், பால், இளநீர் கொண்டு சுத்தி செய்ய வேண்டும்; பிறகு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விபூதி பரப்பி அதில் இந்த யந்திரத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். செவ்வரளி மற்றும் சிவப்பு கலர் புஷ்பம் மிகுந்த நன்மை தரும்.
நைவேத்தியம்.
சுண்டல், பாயாசம், அப்பம், மோதகம், வெண்பொங்கல், அதிரசம், தேங்காய், பழம், வெத்தலை பாக்கு, எலுமிச்சம் பழம் இரண்டு தூபதபம் காட்ட வேண்டும்.
பலன்
எல்லா காரியமும் சாதிக்கலாம். தொழில் வளர்ச்சி அடையும். கடன் தீரும். சத்துருக்கள் விலகுவார்கள்.
சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்
"ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்"
மூல மந்திரம்
"ஓம் ஹரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நாஸாய ஹீம்பட் ஸ்வாஹா"
தினமும் 1,008. உரு 108 நாட்கள்.
உன்மத்த பைரவர்
வெண்மை நிறம் கொண்டவர். எட்டு கைகளில் அபயம், வரதம், கட்கம் வாங்கம், பாசம், அங்குசம், மூசலம், சூலம், டமரகம் இவைகளை ஏந்தியிருப்பார். அவருடைய சிம்மாசனம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டது. புதன் கிரகத்திற்கு அதிபதி ஆகிறார் உப சக்தி வாராகி; இவரை வழிபட்டால் கல்வியில் மேன்மையும் தொழிலில் வளர்ச்சியும் கிடைக்கும்.
யந்திரம்
பூஜாவிதி
யந்திரத்தை செம்பு அல்லது வெள்ளி தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும் யந்திரம் சுத்தி செய்துகொள்ள வேண்டும் (இளநீர் திருமஞ்சனம் பன்னீர் பால் தேன்).
விபூதி ஒரு தட்டில் பரப்பி அதில் இந்த யந்திரத்தை வைத்து பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும்.சிவப்பு வஸ்திரம் அணிந்து கொண்டு கிழக்கு முகமாக அமர்ந்து பூஜை செய்தல் நன்மை பயக்கும்.
நைவேத்தியம்
பாயாசம், வடை, சுண்டல், இளநீர், தேங்காய், பழம், வெத்தலை பாக்கு, எலுமிச்சம் பழம் தூபம் தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும்
பலன்
மேலே சொன்ன பூஜை சைவ பூஜை இதில் அசைவ பூஜையும் உண்டு மது மாமிசம் வைத்து பூஜை செய்து யந்திரத்தை மயானத்தில் புதைக்க எதிரிக்கு பைத்தியம் பிடிக்கும். அதற்கு பூஜா விதிகள் வேறு மாதிரி இருக்கும்.
மூலமந்திரத்தை 10008 ஒரு மண்டலம் உரு போட்டால் சித்தியாகும். இதில் ஒவ்வொரு ஜெபமாலையின் பயன்படுத்தி உரு செய்தால் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஸ்படிக மணி கொண்டு மந்திரம் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்; துளசி மணி கொண்டு ஜபம் செய்தால் நினைத்ததை செய்து முடிக்கலாம்.
(எனது ஜெபமாலை பதிவு பார்க்கவும்).
உன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்
"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வாராகி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்"
மூல மந்திரம்
"ஓம் ரீங் அங் க்லீம் உன்மத்த பைரவர் சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா"
10008 உரு ஒரு மண்டலம்
ஸ்ரீ பீஷண பைரவர்
சாம்பல் வர்ணம். எட்டுக் கைகள் கொண்டவர். கைகளில் பாசம் அங்குசம் சூலம் தமக்கை உடுக்கை கடமரகம் வேல் அபயம் வரதம் இவைகளை தாங்கி நிற்பவர் மூன்று கண்கள் உடையவர் சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளி தருபவர். ராகு கேது கிரகங்களுக்கு அதிபதியாவார் இவரை வணங்குவதால் பில்லி சூனியம் பயம் போகும் ஞானம் பெறலாம்.
யந்திரம்
பூஜாவிதி
யந்திரம் செப்பு தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும். யந்திரத்தை
பன்னீர் இளநீர் பால் தேன் திருமஞ்சனம் விபூதி கொண்டு சுத்தி செய்ய வேண்டும்.
தட்டில் விபூதி பரப்பி அதில் எந்திரத்தை வைத்து தூபம் தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும்.
நைவேத்தியம்
பால் பாயாசம் சக்கரை பொங்கல் அப்பம் அதிரசம் சுண்டல் வடை தேங்காய் பழம் வெத்தலை பாக்கு எலுமிச்சம்பழம் இரண்டு.
பலன்
இந்த யந்திரத்தை பூஜை முடிந்ததும் வீட்டு வாசற்படியில் புதைத்து வைத்தால் பில்லி சூனியம் காத்து கருப்பு துஷ்ட சக்தி எதுவும் வீட்டில் அண்டாது.
வித்வேஷணம் (ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது தான் வித்வேஷணம்) தொழில் செய்பவர்கள் இதை பயன் படுத்தலாம். வாக்கு சொல்லலாம், பலிதமாகும்.
ஸ்ரீ பீஷண பைரவர் காயத்ரி மந்திரம்
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்
மூல மந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் நமோ சர்வ தேவா குரு குரு ஸ்வாஹா
உரு 1,008 ஒரு மண்டலம்.
வாழ்க வளமுடன்
0 கருத்துகள்