அஷ்ட பைரவர்கள் - 2


கபால பைரவர்


நீல வர்ணம் கொண்டவர் எட்டு கரங்கள் கொண்ட அவர் கரங்களில் பாசம் அங்குசம் சூலம் டமருகம் கட்கம் மது பத்திரம் வரதம் இவைகளை ஏந்தி அருள் தருவார். சூரியனைப் போல் பிரகாசம் உடையவர் உப சக்தி இந்திராணி. சந்திர பகவானுக்கு அதிபதி. இவரை வழிபட்டால் அறியாமை நீங்கும் ஞானம் கிடைக்கும்.



பூஜா விதி


ஒரு தட்டில் விபூதி பரப்பி அதில் மூல மந்திரத்தை எழுதி பூஜை செய்ய வேண்டும் செவ்வரளி மற்றும் சிவப்பு வண்ண பூக்கள் பூஜைக்கு உகந்தது இந்த பூஜையை பவுர்ணமி இரவில் செய்தால் பலன் உடனே கிடைக்கும்



நைவேத்தியம்.

அவல் பொரி கடலை சுண்டல் பால் பாயாசம் இளநீர் பானகம் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் எலுமிச்சம்பழம் இரண்டு.



பலன்


விபூதியை பூஜை முடிந்ததும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். வெளியில் முக்கிய காரியமாக செல்லும் பொழுது விபூதியை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் அந்த செயல் ஜெயமாகும். நடைமுறையில் பலன் கொடுக்கக் கூடியது.


கபால பைரவர் காயத்ரி மந்திரம்


ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்



மூல மந்திரம்


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் கம் கால தண்டாய வஜ்ர வீராய ஹண ஸ்வாஹா

உரு 1008 ஒரு மண்டலம்



குரோதன பைரவர்


கருப்பு வர்ணம் கொண்டவர் எட்டு கரங்களில் காலம் பாசம் கதை சூலம் டமருகம் அபயம் வரதம் இவைகளை தரித்து காட்சிதருபவர் எருமை வாகனத்தில் அமர்ந்திருப்பது சனி பகவானுக்கு அதிபதி. இவரை வழிபடுவதால் ஆங்காரம் குறையும் சனி பாதிப்புகள் குறையும் அதாவது ஏழரைச் சனி அஷ்டமச் சனி கண்டச் சனி போன்ற தோஷங்கள் குறையும்.


பூஜா விதி


பன்னீர் கலந்து விபூதி தட்டில் பரப்பி அதில் மூல மந்திரத்தை எழுதி தூபம் தீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும் இந்த பூஜையானது சர்வ அமாவாசை அன்று செய்ய வேண்டும் பூஜை முடிந்ததும்  குளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை விபூதியை கலந்து குளித்தால் தோஷம் நீங்கும். 


நைவேத்தியம்.



சர்க்கரைப் பொங்கல் வடை பாயாசம் சுண்டல் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கு எலுமிச்சம்பழம் இரண்டு.


குரோதன பைரவர் காயத்ரி மந்திரம்


ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்


மூல மந்திரம்


ஓம் க்ரீம் வஜா தண்டாய மகா வீரா பைரவாய ஜோதி ஹஹீம்பட் ஸ்வாஹா


உரு 1008 தினமும் 44 நாட்கள்.



அஸிதாங்க பைரவர்


சிவப்பு வர்ணம் எட்டுக்கையில் சூலம் தந்தம் பாசம் அங்குசம் டமருகம் அபயம் வரதம் தரித்த அக்னி கனல் வீசும், சிவந்த வஸ்திரம் அணிந்து சிம்ம வாகனத்தில் அருள் புரிபவர். குரு பகவானுக்கு அதிபதி உப சக்தி பிராமி. இவரை வணங்குவதால் தனலாபம் புத்திரபக்கியம் கிடைக்கும்.


பூஜா விதி


பௌர்ணமி அன்று பன்னீர் மற்றும் இளநீர் கலந்த விபூதி ஒரு தட்டில் பரப்பி மூல மந்திரத்தை எழுதி தீபம் காட்டி பூஜை செய்தல் வேண்டும். பூஜை முடிந்த பிறகு நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும் பெண்கள் விபூதியை தண்ணீரில் கலந்து குடித்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.



நைவேத்தியம்


பால் பாயாசம் வடை சுண்டல் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் ராஜ கனி எலுமிச்சம்பழம் இரண்டு.


அசிதாங்க பைரவர் காயத்ரி மந்திரம்


ஓம் ஞான தேவாய வித்மஹே 
வித்யா ராஜாய தீமஹி 
தன்னோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்



மூல மந்திரம்


ஓம் ஐம்  க்ரீம் க்லீம் வித்யா பைரவர் சுவாகா

உரு 10008; 48 நாட்கள்



ஸம்ஹார பைரவர்


மஞ்சள் வர்ணம் கொண்டவர் எட்டு கைகளில் பாசம் அங்குசம் சூலம் கட்கம் தந்தம் கதை அபயம் வரதம் இவைகளைத் அறிவித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குபவர். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் காட்சி தருபவர் இவரை வணங்குவதால் துஷ்டர்களை அழித்து வெற்றி பெறலாம் சுகமான வாழ்வு கிடைக்கும்.


பூஜா விதி


வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்ய வேண்டும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் செய்தல் நலம் மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூரண கும்பம் வைத்து தட்டில் விபூதி பரப்பி மூலமந்திரத்தை அதில் எழுதி தூபம் தீபம் காட்டி பூஜை செய்தல் வேண்டும். பூஜை முடிந்ததும் இந்த விபூதியை திலகமிட்டு கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம்



நைவேத்தியம்


பால் பாயாசம் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு எலுமிச்சம்பழம்


காயத்ரி மந்திரம்


ஓம் மங்களாய வித்மஹே
 சண்டிகாப்ரியாய தீமஹி 
தன்னோ பைரவ ப்ரசோதயாத்


மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் மங்கள சண்டிகாயை ஸ்வாஹா

உரு 1008 ஒரு மண்டலம்



ஸ்ரீகுரு பைரவர்


மஞ்சள் வர்ணம் கொண்டவர் எட்டு கைகளில் சூலம் தந்தம் பாசம் அங்குசம் டமருகம் கட்டம் அபயம் வரதம் இவர்களை அழித்து பக்தர்களுக்கு ஆசி வழங்குபவர் இவரை வணங்கினால் இல்லற வாழ்வு சிறக்கும் தம்பதியர் ஒற்றுமை உண்டாகும் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள் சுக்கிர பகவானுக்கு அதிபதி மகேஸ்வரி உபசக்தி.


பூஜா விதி


பன்னீர் மற்றும் ஜவ்வாது கலந்த விபூதியை தட்டில் பரப்பி அதில் மூல மந்திரத்தை எழுதி ஒரு மண்டலம் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும் இந்த பூஜை முடிந்ததும் இந்த விபூதியை  திலகமிட்டுக் கொண்டால் தம்பதியருக்கு இல்லறம் சிறக்கும்.
மூலமந்திரத்தை ஜெபிக்கும் பொழுது தாமரை இதழ்கள் கொண்டு அர்ச்சனை செய்தல் வேண்டும்.


ஒவ்வொரு நாளும் பூஜை செய்த தாமரைப் பூவை பத்திரப்படுத்தி வைத்து கொள்ளவும் பூஜை முடிந்ததும் அனைத்து தாமரைப் பூவும் காய்ந்திருக்கும் அவைகள் பச்சைக்கற்பூரம் கொண்டு பஸ்பமாகி வேண்டும் அந்தக் கரியை விபூதியுடன் கலந்து திலகம் இட்டு கொண்டால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும்.


ஸ்ரீ குரு பைரவர் காயத்ரி


ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி
தன்னோ குரு பைரவ ப்ரசோதயாத்



மூல மந்திரம்


ஓம் ஐம் ஸ்ரீம் க்ரீம் க்லீம் டங்கேஷாய ஷீம்பட் ஸ்வாஹா

உரு 1008 ஒரு மண்டலம்




வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்