அதிகாலையில் அந்தச் செடியை அதாவது இலையை 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தால் ஆகர்ஷண சக்தி நம் உடலுக்குள் வந்துவிடும்; முயற்சித்துப் பாருங்கள்; கண்களை மூடிக்கொண்டு இரண்டு நிமிடம் தியானத்தில் இருங்கள் உங்கள் உடம்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரை மெல்லிய மின்சாரம் பாய்வது போல் உணர்வீர்கள், இது உண்மை.
சித்தர்கள் சொன்ன மூலிகையில் புல்லாமணக்கு என்ற மூலிகை மிகவும் சக்தி வாய்ந்தது. வசியத்திற்கு மிகவும் பயன்படும் இம்மூலிகை கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப வசிய, மை வசியம், ஈடு வசியம், போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
வாருங்கள் சில மூலிகை பற்றி பார்ப்போம்.
சிறிய நங்கை
செடி வகையைச் சேர்ந்தது. சற்று சிறியதாக இருக்கும். வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டு இருக்கும். இது பெண் செடி என்று சொல்லப்படுகிறது. பூவில் நாகலிங்கம் இருக்கும், இது ஒரு குறுஞ்செடி. விதைத்து 15 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். நீள காய்கள் கொண்டது காய்ந்து வெடித்து விதைகள் சிதறிவிழும் அதிலிருந்து செடி முளைக்கும்.
செம்மண், கரிசல் மண்ணில் வளரக் கூடியது. அமாவாசை அல்லது பவுர்ணமி அன்று விரதம் இருந்து காப்பு கட்டி, சாபம் நிவர்த்தி செய்து, செடியைச் சமூலமாக எடுக்க வேண்டும். தண்ணீர், பால் கொண்டு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி; பின்பு அரைத்து மெழுகு பதம் வந்ததும் சிறு சிறு உருண்டையாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
சகல விஷத்துக்கும் கொடுக்கலாம். பாம்பு கடிக்கு அருமையான மருந்து இதன் வேரை தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் இட்டு 54 நாட்கள் மந்திரம் உரு போட்டு கையில் அணிந்து கொண்டால் பெண் (மனைவி) வசியமாவாள்.
பெரியா நங்கை
இதுவும் சிறியா நங்கை செடி போன்றது தான், உயரமாக வளரக்கூடியது. பூவில் சிவலிங்கம் போன்ற உருவம், அதில் நாக படம் எடுப்பது போன்ற வடிவுடன் இருக்கும், கசப்புத்தன்மை கொண்டது. சிறியா நங்கையின் சொன்னதுபோல் சமூலமாக எடுத்து, அரைத்து உருண்டையாக்கி வைத்துக்கொண்டு விஷக்கடிக்கு பயன்படுத்தலாம்.
இதன் வேரை வெள்ளி அல்லது செப்புத் தாயத்தில் அடைத்து 48 நாட்கள் மந்திரம் உரு ஏற்றி இடுப்பில் கட்டிக் கொண்டால் ஆண் (கணவன்) அவசியமாவான்.
கருஊமத்தம்
இலை, பூ, காய், தண்டு அனைத்தும் கருப்பாக இருக்கும். மலை சார்ந்த இடத்தில் வளரும் தன்மை கொண்டது. ரசமணி கட்டுவதற்கு கரு ஊமத்தை இலை பயன்படும். புடம் போடுவதற்கும் பயன்படும்.
இரசமணி நாக்கில் அடியில் வைத்து நீரை குடிக்க சகல நோய்களும் தீரும், ரசவாதம் செய்வதற்கு கருஊமத்தை சமூலமாக பயன்படும் என்று சொல்லப்படுகிறது. திரிகாலத்தை சொல்லக்கூடிய சக்தி இதில் செய்யும் மையில் உண்டு.
பொன்னூமத்தை
இது பரவலாக எல்லா இடத்திலும் மலை அடிவாரத்திலும் அதிகமாகவும் வளரும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும் மேல்நோக்கிய மலரும். சதுர்த்தி திதி வளர்பிறை அன்று காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஆணிவேர் அறாமல் எடுத்து பாலில் சுத்தம் செய்து காராம்பசு நெய் கொண்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி இந்த செடியை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இந்த வேரை தாயத்தில் அடைத்து ஒரு மண்டலம் பூஜை செய்தால் பெண் (மனைவி) வசியமாவாள்.
அழுகண்ணி
போரில் காயம்பட்ட வீரர்களுக்கு இந்த மூலிகை கொண்டு குணப் படுத்தி இருக்கிறார்கள்.மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. இன்னொரு மூலிகை தொழுகண்ணி இந்த இரண்டு மூலிகையும் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். மலை மற்றும் மலைசார்ந்த இடத்தில் வளரும்.
இதன் இலைகள் தடிமனாக இருக்கும். ஒருவித நீர் சுரந்து கொண்டிருக்கும். இந்த இலை அடியில் எப்போதும் ஈரமாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற தாரா பலன் அன்று (நல்ல நாள்) காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஆணி வேர் அறுபடாமல் எடுத்து, அந்த வேரை பன்னீர், பால் கொண்டு சுத்தம் செய்து, தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் (குரு ஆதிக்கம் பெற்றவர்கள் தங்கத்திலும் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள் வெள்ளியிலும்) வேரை அடைத்து ஒரு மண்டலம் மந்திரம் உரு ஏற்றி வலது கையில் கட்டிக் கண்டால் சகலமும் வசியமாக (லட்சுமி கடாட்சம், தொழில் விருத்தி, வியாபாரம் போன்றவை).
தொழுகண்ணி
துண்டிக்கப்பட்ட உடல் பாகத்தை ஒட்டி வைக்கும் தன்மை கொண்டது இந்த மூலிகைக்கு உண்டு. இந்த இலையை தொட்டால் பக்கவாட்டில் உள்ள இலையுடன் இணைந்து வணக்கம் செய்வது போல் காட்சி தரும். மலைசார்ந்த இடங்களில் வளரும் தன்மை கொண்டது.
முறைப்படி காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஆணி வேர் அறுபடாமல் எடுத்து வந்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி, பிறகு அதை இடித்துப் பொடி செய்து தினமும் காலை மற்றும் மாலை தேனில் திரிகடி அளவு எடுத்து (அதாவது மூன்று விரல் கொண்டு எடுக்கவேண்டும் ) கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோய் தீரும்; யானை பலம் கிடைக்கும்; வெட்டுப்பட்ட இடம் ஒன்று கூடும்.
வேரை தாயத்தில் அடைத்து பூஜை செய்து வலது புஜத்தில் கட்டிக்கொண்டால் சகல காரியம் வெற்றியடையும்.
நாயுருவி
இருவகை உண்டு சாத நாயுருவி செடி செந்நாயுருவி, இதன் வேரை காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து ஆணி வேர் அறுபடாமல் எடுத்து 40 நாள் சுத்தி செய்து அந்த வேரை சாம்பலாக்கி அதைக் கொண்டு பல் துலக்கி வர, சர்வ வசியம் ஆகும் இந்த பொடி அதிக உஷ்ணம் உடம்புக்கு கொடுப்பதால் எண்ணைக்குளியல் மற்றும் பசும்பால் குடிக்க வண்டும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்