மை அல்லது அஞ்சனம்



வசியம்
 
எட்டு பிரிவுகளாக பிரித்து வைத்தார்கள் நம் சித்தர்கள். புருஷ வசியம், ஜன வசியம், ராஜ வசியம், பெண் வசியம், லோக வசியம், சத்துரு வசியம், தேவதா வசியம், பூத வசியம். இத்தகைய வசிய முறைகளுக்கு மை அதாவது அஞ்சனம் மிக முக்கியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அஞ்சனம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.







எளிய முறையில் வசிய மை


தேவையான மூலிகைகள்


குங்குமப்பூ, அம்பர், கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், மற்றும் சுத்தமான தேன்.


இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


செய்முறை


மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் கல்வத்திலிட்டு சுமார் 4 மணி நேரம் அரைக்க வேண்டும். தேன் சொட்டு சொட்டாக விட்டு அரைக்க வேண்டும். மெழுகு பதத்திற்கு வரும்; அதை வெள்ளி டப்பா அல்லது சிமிழில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.


மூல மந்திரம்


"ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஓம் சர்வ லோக வசியம் ஆக சுவாஹா"

உரு 108 தினமும்.



பலன்கள்


நாம் ஏதாவது ஒரு காரியமாக வெளியில் செல்லும்போது அந்தக் காரியம் நமக்கு வெற்றி அல்லது சாதகமாக அமைய இந்த மையை நெற்றியில் திலகமிட்டு சென்றால் வெற்றி நிச்சயம்.



பெண் (மனைவி) வசியம்


தேவையான மூலிகைகள்


கொன்றை, குப்பைமேனி,  சிறிய நங்கை மற்றும் பெரிய நங்கை, ஆடை தொட்டால், தொட்டால் வாடி, பேய்மிரட்டி, பூனைவணங்கி, வில்வம், அழிஞ்சி, வெள்ளருக்கன் அனைத்தும் வேர்களும் மற்றும் புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம், மலைத்தேன்.


செய்முறை


அனைத்தும் கல்வத்திலிட்டு 3 மணி நேரம் அரைக்க மெழுகு பதத்திற்கு வரும் இதை  வெள்ளி டப்பாவில் பத்திரப்படுத்தவும்.


மூல மந்திரம்


"ஓம் ஹரீம் ஸ்ரீம் க்லீம் ஸௌம் ஸ்ரீ பால மோகினி ராஜாதி ராஜ மோகினி சர்வ சங்கம் வசமாக குரு குரு ஸ்வாஹா"


உரு 108 தினமும் 108 நாட்கள்.


பலன்கள்

பூஜை முடித்து இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் பெண் வசியமாவாள்.






சர்வ ஜன வசியம்


தேவையான மூலிகைகள்


புல்லாமணக்கு வேர், குழலா தண்டை வேர், வெள்ளை சாரணை வேர், வெள்ளை குண்டுமணி வேர், ஆடையொட்டி வேர், தொட்டால் வாடி வேர், வெள்ளை விஷ்ணு கரந்தை வேர், புனுகு, கோரோசனை பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி, காராம் பசு நெய்.


செய்முறை


இவை அனைத்தும் கல்வத்திலிட்டு நான்கு மணி நேரம் அரைக்க மெழுக பதத்திற்கு வரும். கொம்பு டப்பாவில் அல்லது வெள்ளி சிமிழில் பத்திரப்படுத்தவும்.



மூல மந்திரம்


"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸௌம் ஸ்ரீ பால மோகினி சர்வ ஜனம் வசிய வசிய குரு குரு ஸ்வாஹா"


உரு 1008 ஒரு மண்டலம் ஜெபிக்கவேண்டும்.


பலன்கள் 


 நெற்றில் திலகமிட்டு சென்றால் ஜன வசியம் மற்றும் சகல காரிய சித்தியாகும்.

                                                                                     கல்வத்தின் அளவு


சத்ரு வசியம்


தேவையான மூலிகைகள்


பெரியா நங்கை வேர், நாகதாளி வேர், வெள்ளருக்கம் வேர், வெட்டிவேர், அல்லி வேர், மல்லி வேர், மூலம் வேர், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, வெள்ளை விஷ்ணுகிரந்தி, வெள்ளை குண்டுமணி வேர், பச்சைக் கற்பூரம், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோசனை, அத்தர் மற்றும் காராம் பசு நெய்.


செய்முறை


 இவை அனைத்தும் சுமார் 4 மணி நேரம் அரைக்க மெழுகு பதம் வரும். வெள்ளி சிமிழில் பத்திரப்படுத்தவும்.


மூல மந்திரம்


"ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா"


உரு ஆயிரத்தெட்டு ஒரு மண்டலம் ஜெபிக்க வேண்டும்.


பலன்கள்


நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு சென்றால் சத்துருக்கள் வசியமாவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.


தேவதா வசியம்





தேவையான மூலிகைகள்


அழுகண்ணி வேர், சிறுமல்லி வேர், தொழுகண்ணி வேர், தலைச்சுருளி, பேய்த்தேர்,  நின்றால் சுருங்கி வேர், நத்தைச்சூரி வேர், ஜடை விருட்சம் வேர், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ, கோரோசனை, புனுகு, காராம் பசு நெய் மற்றும் தேன்.


செய்முறை


வேர்கள் அனைத்தும் கருக்கி எடுத்து கல்வத்தில் விட்டு மற்ற பொருட்களை அதில் சேர்த்து 5 மணி நேரம் அரைக்க வேண்டும் மெழுகு பதம் வந்தவுடன் வெள்ளி டப்பாவில் அடைத்து பத்திரப்படுத்தவும்.


மூல மந்திரம்


"ஓம் நமோ பகவதே திரிபுர தகனம் மகா மாயா சக்தி ஹரியின் க்லீம் சௌம் ஸ்ரீ காருண்ய ரூபி நம்ம காரியம் சதாய குரு குரு ஸ்வாஹா"


உரு 1008 ஒரு மண்டலம்


பலன்கள்


இந்த திலகமாக அணிந்து கொண்டு ஜபம் செய்தால் எந்த தேவதையை நோக்கி ஜபம் செய்கிறோமோ அந்த தேவதை பிரசன்னமாகும்.


மேலே சொன்ன  அஞ்சனம் எப்படி செய்வதென்று சித்தர்கள் தங்களது அஷ்டமாசித்து நூலில் சொல்லியிருக்கிறார்கள்.


 நடைமுறையில் சில மூலிகைகள் அடையாளம் காண முடியவில்லை "எளிய முறையில் வசிய மை" முதலில் சொல்லியிருக்கிறேன் அதை அனைவரும் செய்து கொள்ளலாம் நடைமுறையில் பலன் அளிக்கக்கூடியது  இந்த மையை உரு ஏற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.



வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. எளிய முறையில் வசிய மை தயாரிக்க இப்பொருட்கள் அனைத்தயும் என்ன விகிதத்தில் சேர்க்க வேண்டும்? இப் பொருட்களை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கினால் போதுமானதா அல்லது மூலிகைகளைப் பறிக்க வேணடுமா?

    பதிலளிநீக்கு