ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் அதாவது பிறிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும்,வதுகவது தொழிலில் பங்குதாரர்கள் பிரச்சனை, விரோதிகள் அல்லது சத்துருக்கள், சட்டப் பிரச்சனைகள், தொழில் வளர்ச்சிக்கு மற்றும் கடன் தீர வசியம் அவசியமாகிறது.
மாந்திரீகம் 8 அங்கமாக பிரித்து வைத்துள்ளனர். அவைகள் ......
வசியம் -இது மற்றவர்களை தன்பால் வசியப்படுத்துவது
மோகனம் -பிறரை நம் மீது மோகம் கொள்ளச் செய்வது
ஸ்தம்பனம் - எந்த ஒரு செயலையும் அல்லது இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது
உச்சாடனம் -தீயசக்திகளை வசியப்படுத்துவது அல்லது நம் இடத்தை விட்டு அகற்றுவது
ஆக்ருஷணம் -துர்தேவதை நம் முன் பணிய வைப்பது
பேதனம் -இது சுயநினைவற்றுப் போகச் செய்வது
வித்வேஷனம் -ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது
மாரணம் -அனைத்து ஜீவராசிகளுக்கும் கேடு விளைவிப்பது.
சென்ற பதிவில் வசியம் பற்றி பார்த்தோம்.....
மோகனம்
ஸ்திரி மோகனம்
குங்குமம் வாழை அல்லி அலரி கோடாசூரி நீலி செங்குன்றம் ஆத்தர் சந்தனம் பச்சை கற்பூரம் ஜவ்வாது புனுகு இவை அனைத்தும் காராம் பசு நெய் கொண்டு அரைத்து நெற்றியில் திலகமிட பெண் மோகனமாவாள்.
மிருக மோகனம்
குங்குமப்பூ ஜவ்வாது வெண்கன்றி முத்தக்காசு செந்நாயுருவி பச்சை கற்பூரம் வெள்ள எருக்கன் இவைகளை சம அளவு எடுத்து கொம்புத்தேன் கொண்ட அரைத்து நெற்றியில் திலகமிட மிருகங்கள் அனைத்தும் மோகனம் ஆகும்.
சத்துரு மோகனம்
நாயுருவி வெண்குன்றி பொன்னாங்கண்ணி செங்கழநீர் சிறுமுன்னை தூதுவளை புல்லாமணக்கு இவைகளை சம அளவு எடுத்து தேன் விட்டு அரைத்து நெற்றியில் திலகமிட்டு செல்ல எதிர்வரும் சத்துரு மோகனம் ஆவார்கள்.
சொர்ண மோகனம்
நன்னாரி வேர் அவுரி வேர் மந்தன் வேர் கரு ஊமத்தை வேர் இவைகளைச் சமமாக எடுத்து இடித்து வெள்ள ஊமத்தன் சாறு கொண்டு அரைக்க வேண்டும்; இதனுடன் கோரோசனை ஜவ்வாது புனுகு அத்தர் கொண்ட அரைத்து நெற்றியில் திலகமிட சொர்ணம் உங்கள் விட்டு போகாது லட்சுமி கடாட்சம் என்றும் இருக்கும்.
லோக மோகனம்
முல்லை கரிசலாங்கண்ணி சோம்பு நரிப்பயிறு நொச்சி ஐவிரலி வேர் நன்னாரி வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்து திலகமிட அனைவரும் சர்வம் வசியமாகும்.
இராஜமோகன்
குங்குமப்பூ ஜவ்வாது குங்குமம் ஆக்டர் கோரசனம் புல்லுருவி (மாமரம்) இவை அனைத்தும் தேன் மற்றும் காராம் பசு நெய் கொண்டு அரைத்து திலகமிட இராஜமோகன் ஆகும்.
சர்வ மோகனம்
ஆம்பல் அல்லி அதிமதுரம் கோஷ்டம் ஆலமரம் புல்லுருவி வெண்குன்றி விருதை இவை அனைத்தும் தேன் கொண்ட அரைத்து திலகமிட சர்வ மோகனம் ஆகும்.
ஸ்தம்பனம்
ஜல ஸ்தம்பனம்
வன்னி கட்டுக்கொடி நின்னா சினுங்கி நிலம்புரண்டி பேய் முசுட்டை இலை சீரகம் இரும்பு களத்தில் முடக்கொத்தான் இவைகள் அனைத்தையும் புற்றுத்தேன் விட்டு அரைக்க வேண்டும் ஜல ஸ்தம்பனம் ஆகும்.
அக்னி ஸ்தம்பனம்
சங்கன் வேர் தாமரைக்கிழங்கு கற்றாழை குப்பைமேனி தலை வெள்ளை காக்கட்டான் செவ்வகத்தி சுண்டை செங்கொடி வட்டத்துத்தி ஓரிதழ் தாமரை சமஅளவு எடுத்து காராம்பசு கொண்டு அரைத்து நெற்றியில் திலகமிட அக்னி ஸ்தம்பம் ஆகும்.
சுக்கிலம் ஸ்தம்பனம்
விளாம் பிசின் விஷ்ணுகரந்தை வேர் சிவந்த கஞ்சா உன்மத்தன் விதை கருப்பு கஞ்சா மருவும் அத்தனை இவர்கள் சம அளவு எடுத்து பசுவின் நெய்யில் குழைத்து திலகமிட சுக்லாம் ஸ்தம்பமாகும்.
ஆயுத ஸ்தம்பனம் மிருக தம்பனம் லோக ஸ்தம்பனம் இதில் சொல்லப்பட்ட மூலிகைகள் கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது.
ஆக்ருஷணம்ர் பேதனம் வித்துவேஷணம் மாரணம் இதேபோல்தான் மூலிகையைக் கொண்டு செய்தல் வேண்டும்.
மந்திரம்
"ஓம் ரீங் வசி வசி" உரு லட்சம்
இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் மனதுக்குள் உதடு அசையாமல் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
எந்த ஒரு மந்திரமும் ஒரு லட்சத்திற்கு மேல் உரு போட்டால் அந்த மந்திரம் நம்மை வழிநடத்திச் செல்லும். இது உண்மை.
ஒரு வியாழக்கிழமை தஷிணாமூர்த்தி வணங்கி மேற்சொன்ன மந்திரத்தை உரு போடதொடங்குங்கள்.
உங்களுக்கு இந்த மந்திரம் வசியமாகும் இது உண்மை நடைமுறையில் பலன் அளித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் பலன் யாது என்று கேள்வி எழலாம். இந்த மந்திரத்தை சித்தி செய்தீர்கள் என்றால் எக்காரியமும் வெற்றி கிடைக்கும் யாரையும் வசியப்படுத்தலாம். நற்செய்கை காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்