அஷ்டமா சித்திகள் - 2




"குதஸ்தாவா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்ட மஸ்வார்க் யமகீர் திகரமர்ஜீந"



பொருள்


ஸ்ரீ பகவான் கூறுகிறார் - அர்ஜுனா தகாத சமயத்தில் இந்த மோஹம்(அயர்ச்சி) எந்தக் காரணத்தினால் உன்னை வந்து அடைந்தது? ஏனெனில் இது சான்றோர்களால் கடைப்பிடிக்கப்படாதது, சொர்க்கத்தை அளிக்காதது, மேலும் புகழையும் தரவல்லதன்று.



விளக்கம்


ஸ்ரீ கிருஷ்ணர் கீதா உபதேசத்தில் இரண்டாவது அத்தியாயத்தில், இரண்டாவது ஸ்லோகமாக திருவாய் மலர்ந்து அருள் புரிந்தது - எதிரில் நிற்கும் தனது உற்றார் உறவினர்களை பார்த்ததும் துவண்டு போய் தனது காண்டீபத்தை நழுவ விட்டான் அர்ஜுனன்.


"இதம் கஸ்மாலம்" என்பது அர்ஜுனனுக்கு மோஹத்தால் ஏற்பட்ட சோகத்தையும், கோழைத் தனததையும் குறிப்பிடுப்படுகிறது. பகவான் ஆச்சரியத்துடன் அர்ஜுனனைப் பார்த்து கேட்கிறார்; போர் நடக்கும் சமயத்தில் அதாவது கோழைத்தனத்திற்கும் துயரத்துக்கும் ஒவ்வாத இந்த யுத்தகளத்தில், சரியாக போர் ஆரம்பிக்கும் நேரத்தில் எதிரிகளை எளிதாக தோற்கடிக்க கூடிய உன்னைப் போன்ற வீரனுக்கு கொஞ்சமும் இருக்கக்கூடாத கோழைத்தனம் எங்கிருந்து வந்தது? பலவீனத்தை விட்டு துணிந்து எழுந்து செயலாற்று. செயல் இழந்து நின்ற அர்ஜுனனுக்கு வீரியம் ஊட்டுவதற்காக மாயவனால் உபதேசிக்கப்பட்டது. வீரியம் என்பது பிராணன், மூச்சு,வாசி என்று பொருள் கொள்ளலாம்.



"சத்தன் அருள்தரின் சக்தி அருளுண்டாம்
சக்தி அருள்தரின் சத்தன் அருளுண் டாம்
சக்தி சிவமாய் இரண்டும்தான் முள் வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையுமாமே"

                                                                                      -திருமந்திரம்



விளக்கம்


"சத்தன்" என்றால் சிவன் என்று பொருள். சிவன் அருள் தந்தால் உமையவள் அருளும் கிட்டும். சக்தி அருள் கிட்டினால் சிவன் தன் அருளை தரத் தயங்க மாட்டான். இருவரையும் மனதில் வைத்து தியானிக்க எட்டுவகை சித்தியும் கிடைக்கும் என்கிறார் திருமூலர்.



"மனிதனில் ஈராறாய் மன்னும் கலையில்
உதயம் அது கால் ஒழிய ஓர் எட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்று அறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திகள் ஆமே"

                                                                                 திருமந்திரம்


விளக்கம்


"மதி" என்றால் சந்திரன் மன்னும் கலையில் என்றால தங்கிப் பின் கலையில் என்று பொருள் அதாவது பிங்கலை; சந்திர நாடியாகிய இடைக்கலையில் 12 அங்குல அளவு உள்ளிழுக்கப்படும் சுவாசமானது பிங்கலை அதாவது வலப்பக்கம் காலங்குல அளவு வெளிப்பட்டு, மீதமுள்ள எட்டங்குல அளவு உள்ளே தங்கும் (ரேசம், பூரகம், கும்பம்-பின் வரும் பதிவில் இதைப் பற்றி காணலாம்) இந்த மூச்சுப் பயிற்சி பன்னிரண்டு வருடம் பயின்று வந்தால் நிச்சயமாக அஷ்டமா சித்திகள் பெறலாம் என்கிறது பாடல்.






பிராணாயாமமும் அதன் பயன்களும்


பிராணன் என்பது மிக முக்கியமான உயிர்சக்தி; இதுதான் நமது உடம்பின் எல்லா இயக்கஙகளுக்கும் அதிபதி.


 மூச்சு இல்லை என்றால் உடலில் எந்த உறுப்புகளும் இயங்க. இதைத்தான் பேர் அண்டங்களையும் இயக்கும் சக்தி என்று சொல்வார்கள். பிரணாயாமம் பயிற்சிக்கு உயிர் சக்தியாகிய பிராணனை முறைப்படுத்தி அதை நம் உடல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி செய்கிறது.


ரத்தத்திலும் நமது உடலின் மற்ற பகுதிகளிலும் இருந்து உண்டாகின்ற விஷத் தன்மையை போக்கி நரம்பு மண்டலத்தை தூய்மைப் படுத்தும் ஆற்றல் உடையது பிராணயாமம்.


பிரணாயாமம் சளி மற்றும் சைனஸ்  தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும்படி செய்யலாம்.


பிராணயாமம் நம் முகத்தை அழகுபடுத்தும் மிகச் சிறந்த சாதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.





பிராணாயாமத்தினால் மனம் தூய்மையையும், அமைதியையும் அடையும். எதையும் கூர்ந்து கவனித்து அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் மகத்தான ஆற்றலையும் மனம் பெறும் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகிறார்.


மனம், பிராணன், விந்து ஆகிய மூன்றுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. நீங்கள் உங்கள் விந்து ஆற்றலை கட்டுப்படுத்தி விட்டால் உங்கள் மனதையும் பிராண சக்தியும் எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும்.


நீங்கள் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் பிராண சக்தியை கட்டுப்படுத்தினால் மனம் எளிதில் கற்றுக் அடங்கும் மனசு எவரோ அவருக்கு சுவாசம் கட்டுப்படும்.


ஔவை சொன்னது


ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி சூரிய நாடி (வலது நாசி)
திங்கள், புதன், வெள்ளி சந்திர நாடி (இடது நாசி)


மூக்கு நுனியின் மீது பெரு விரலை மடக்கி மற்ற நான்கு விரல்களையும் நேர் கோடாக வைத்துப்பர்த்தால் மூச்சின் வரவு செலவு ஒரு பக்கம் மட்டும் அதிகமாக நடப்பது தெரியும்.


இடது நாசியில் நடக்கும் சுவாசத்திற்கு சந்திர நாடி என்றும் அல்லது இடகலை என்றும் அழைக்கப்படுகிறது. சக்தியின் அம்சம். வலது நாசி நடக்கும் மூச்சானது சூரிய நாடி என்றும் பிங்கலை என்றும் பெயர். இது சிவனின் அம்சம்.


வலது நாசியில் நடக்கும் வரவு செலவுகள் அல்லது சுவாசத்தின் ஓட்டம் நீங்கள் ஈடுபடும் காரியம் நிறைவாகவும் வெற்றிகளைத் தரும் விதத்தில் அமையும்.


சுவாசம் சூரிய நாடியில் வைத்துச் சென்றால் அல்லது வைத்துக் கொண்டிருந்தாலும் செல்கிற காரியம் வெற்றி கிட்டும்; செய்கின்ற வேலையும் நல்லபடியாக நடந்து முடியும்.


தெய்வ வழிபாடு, கல்வி தொடங்குதல், மருந்து சாப்பிடுதல், நெடும்பயணம் அல்லது யாத்திரை செய்தல், புது வீட்டில் குடி புகுதல், நீர் ஆதாரங்களான கிணறு, குளம், வெட்டுதல் போன்றவற்றிற்கு இடது நாசியில் சுவாசம் வைத்துக்கொண்டால் எளிதில் செய்து முடிக்கலாம் அல்லது வெற்றி கிட்டும்.


சரி சுவாசத்தை எப்படி மூக்கில் மாற்றிக்கொள்வது அதாவது வலது நாசியில் சூரிய நாடியில் இயங்கும் சுவாசம் இடத்துக்கு மாற்றுவது எப்படி? அதுபோல் இடது மூக்கில் நடக்கும் சுவாசம் வலது மூக்கு சுவாசத்தை மாற்றுவது எப்படி? மிக எளிமை மூச்சை மாற்று வழிகள் உண்டு.


சூரிய நாடியில் நடைபெறும் ஓட்டத்தை  சந்திரன் நாடிக்கு மாற்ற வலது கையைத் தரையில் ஊன்றி வலது முதுகை மட்டும் சுவரில் சாய்த்து சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தால் நாடி மாறும்.


அதுபோல் சந்திரன் நாடியில் இருந்து சூரிய நாடிக்கு மூச்சை மாற்ற இடது கையை பூமியில் ஊன்றி இடது முதுகில் சுவற்றில் சற்றுநேரம் சாய்த்து வைத்து இருந்தால் மூச்சு நடை மாறும்.


சுவாச ஓட்டம் மன ஒருமையோடு ஒருங்கிணைந்தது. மனக்கட்டுப்பாடு ஒருமைக்கு இந்த சுவாச பயிற்சி முக்கியமானது.


வாழ்க வளமுடன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்