ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா:!!
அன்பரே நியதாஹாரா:ப்ராணாந்ப் ராணேஷு ஜுஹ்வதி!
ஸர்வேப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:!!"
பொருள்
சில யோகிகள் அபான வாய்வில் பிராண வாயுவை ஹோமம் செய்கிறார்கள். அதே போன்று வேறு சில யோகிகள் அபனா வாயுவை ஹோமம் செய்கிறார்கள். மற்றும் சிலர் முறையாக உணவு உண்பவர்களாக பிராணாயாமத்தில் ஈடுபட்டவர்களாக பிராணன், அபானன் இவற்றின் சஞ்சாரத்தை அதாவது சுவாசத்தை கட்டுப்படுத்தி பிராணங்களை பிராணன்களிலேயே ஹோமம் செய்கிறார்கள். இப்படிப் பயிற்சி செய்யும் சாதகர்கள் தங்கள் பாவங்களை அழித்தவர்கள் ஆகிறார்கள்; யக்ஞ்ங்களை அறிந்தவர்கள்.
விளக்கம்
யோகம் மிகவும் புரியாத விஷயம். சிக்கலானது, பயிற்சி அனுபவம் உள்ளவர்கள் இதை அறிய முடியும். இவ்விஷயத்தில் இங்கே சொல்லப்போவது சரியான முறையில் விதிகளை கூறி விளக்கம் தர முயற்சி செய்கிறோம்.
சாஸ்திரங்களில் பிராணாயாமம் பற்றி பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன அவற்றில் எதைக் குறிப்பிட்டு மாயவன் (கீதா உபதேசம்) இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சாஸ்திரங்களில் அபானனின் இடம் புட்டம் என்றும் (அதாவது குதம்) பிரணனின் இடம் இருதயம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது............
உடலில் சஞ்சரிக்கும் வாயு 5 விதம் ஆகும்; அவைகள்
பிராணன்
இடம் இருதயம். நாசித் துவாரங்கள் வழியாக மேல் நோக்கி நடந்து பசி தாகங்கள் உண்டாக்கி புசித்து ஆகாரத்தை ஜீரணம் செய்யும் சக்தி கொண்டவை.
அபானன்
இடம் புட்டம் அதாவது குதம்.இது குதத்தை பற்றி நின்று மனம் மூத்தீரங்களையும், சுக்கிலம் (விந்து) சுரோணிதம் வெளியில் தள்ளுபடி செயலாற்றும் தன்மை கொண்டது.
உதானன்
இடம் கழுத்து. அன்னம் விழுங்கி அதன் உயிர் சக்தியை நாடிகளுக்கு வியாபிக்க செய்து சப்தத்தோடு கலந்து குரலோசை செய்விக்கும்.
ஸமானன்
இடம் நாபி அதாவது தொப்புள். உதான வாயுவால் அனுப்பப்பட்ட அன்ன ரசத்தை நாடி நரம்புகளுக்கு சமமாக பங்கிட்டு உடலை வளர்க்கும்.
வியானன்
இடம் உடல் முழுவதும்.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பரவி ஸ்பரிசத்தை கிடைக்கச்செய்யும் உண்ட உணவை சக்கை வேறு வேறாக ஆக்கும் தன்மை உடையது.
...... வெளிக்காற்றை உள்ளே இழுப்பது சுவாசம் என்று சொல்லுவோம். உடலில் எப்பொழுதும் அபானவாயு இருந்துகண்டே இருக்கும் அந்த வாயுடன் உள்ளே இழக்கும் காற்றை கலப்பது அல்லது சேர்ப்பது பூரகம் என்று சொல்லப்படுகிறது. வெளிக்காற்று உள்ளே இழுத்தவுடன் கீழே செல்கிறது அதாவது அபானின் சஞ்சாரம் என்று சொல்லப்படும். அபானன் இருக்கும் இடம் குதம் (கீழே). அதுபோல் உள்ளிருக்கும் காற்றை வெளியே தள்ளுவது "ரேசகம்" என்று சொல்லப்படுகிறது இது பிராணனின் சஞ்சாரம். பிராணன் இருக்குமிடம் இருதயம் கீழிருந்து மேல் செல்வது.
பிராணாயாமம் என்ற யாகத்தில் அக்னியாக அபானவாயு அதில் ஹோமம் செய்யப்படும் இரகசியமாக பிராண வாயுவும் இருக்கின்றன. ஆகவே செய்யும்போது அபான வாயுவில் பிராண வாய்வு ஹோமம் செய்யப்படுகிறது ஏனெனில் சாதகன் பிரணாயாமம் செய்யும் பொழுது வெளிக்காற்றை மூக்கு வழியாக உடலில் இழுத்துக் கொள்கிறான், அப்போது அந்த வெளிக்காற்று இதயத்தில் உள்ள வாழ்வில் சேர்த்துக் கொண்டு தொப்புளில் உள்ள அபான வாயுவில் கலந்து விடுகிறது. இந்த சாதனையில் உள்ளிழுக்கப்படும் காற்றை வெளியே விடாமல் தடுத்து நிறுத்துவது கும்பம் என்று அழைக்கப்படுகிறது.
பூரகம். காற்றை உள்ளே இழுப்பது.
ரேசகம். காற்றை வெளியிடுவது.
கும்பம். காற்றை வெளியிடாமல் நிறுத்தி வைப்பது.
சிலர் பூரகத்தை மட்டும் செய்கிறார்கள் சிலர் ரேசகத்தை மட்டும் செய்கிறார்கள், சில கும்பம் மட்டும் செய்கிறார்கள் என்று பரந்தாமனின் வாக்கு.
பூரகம் இன்றி ரேசகத்தை மட்டும் அல்லது ரேசகம் இன்றி பூரகம் மட்டும் யாரும் செய்ய முடியாது. இதற்கு உட்பொருள் இருந்தாகவேண்டும் அது பரந்தாமனுக்கே தெரிந்த ரகசியம்.
ஒரு பழமொழி உண்டு பதறாத காரியம் சிதறாது. ஒரு செயல் சிறப்பாக செய்து முடிப்பதற்கு அக்கறையும், ஒருமைப்பாடும், முயற்சியும் வேண்டும் இதற்குத்தான் காயத்ரி மந்திரத்துடன் பிராணாயாமம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு எதையும் தொடங்குகிறார்கள்.
பிராண சக்தி குறைந்ததற்கான அடையாளம்:-
கைகள், குரல் நடுங்குதல், தலை ஆடுதல், வெளிச்சத்தைக் காண முடியாமல் கண் கூசுதல், தொடைகள் ஆட்டுதல், பெண்களிடம் அதிகம் வெக்கமடைதல், சீக்கிரம் களைப்படைதல், நம்பிக்கையினமை, வெறுப்பு, சலிப்பு, படபடப்பு தன்மை, பயம் கொள்ளுதல், போன்றவைகள் காரணமாக இருக்கும்.
பிரணாயாமம் மாறும் மனதை ஒழுங்கு படுத்தி தனக்கும் உலகத்திற்கும் பயனுள்ளவனாக மாற்றக்கூடியது என்று தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்