காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார்இல்லை
காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறிஆமே"
திருமூலர்
பொருள்
இடப்பக்கம் மூச்சை உள்ளிழுத்து, வலப்பக்கம் வழியாக மூச்சை வெளிவிட்டு; இருபக்கமும் செய்து உள்ளே மூச்சைக்காற்றை நிறுத்தி ஆசனம் செய்யணும் மூச்சை உள்ளுக்குள் நிறுத்தும் கால அளவுக் கணக்கை பலர் அறிவதில்லை. மூச்சுக்காற்றை உள்ளிழுத்து கால அளவு கணக்கும் தெரிந்த பெரியவர்கள் (அறிவாளர்கள்) எமனை எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலாளர் அவர்.
விளக்கம்
பிரணாயாமம் என்பது மூச்சை இடது பக்கம் நன்கு உள்ளிழுத்து குறிப்பிட்ட கால அளவு மூச்சை விடாது வைத்திருந்து, பின்பு குறிப்பிட்ட கால அளவில் வலப்பக்கமாக வெளியிடவேண்டும். இரு புறம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது பாடல். அப்படி என்றால் வலப்பக்கம் வெளியேற்றிய காற்றை மீண்டும் உள்ளிழுத்து குறிப்பிட்ட கால அளவு மூச்சை உள் வைத்து பின்பு இடப்பக்கம் வெளியேற்ற வேண்டும். அப்படி செய்தால் ஒரு சுற்று என்று சொல்வார்கள்.
பூரகம் - காற்றை உள்வாங்குதல்
ரேசகம் - காற்றை வெளியேற்றுதல்
கும்பம் - காற்று உள் நிறுத்துதல்
இந்த மூன்றில் கும்பம் தான் மிக முக்கியமானது அதுவே ஆயுள் விருத்தி தரவல்லது. உதாரனமாக 25 வினாடிகள் காற்றை கும்பம் செய்தால் ஆயுள் 25 விநாடிகள் அதிகரிக்கும்.
இதைத்தான் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லி இருக்கிறார்...
"வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரட்டும் இரேசித்துக்
காயமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் தும்பிக்கை உண்மையே"
திருமூலர்
பொருள்
இடது பக்க நாசி துவாரம் இடகலை, இதன் வழியாக ஈரெட்டு அதாவது 16 மாத்திரை அளவு மூச்சை உள்ளிழுத்து பாதுகாப்பாக 32 மாத்திரை அளவு வெளியேற்றி விரும்பிய இடகலை பிங்கலை ஆகிய இரண்டும் இருக்க கொண்டு 64 மாத்திரை அளவு கும்பமாக்கி வேள்வி செய்தல் உண்மைப் பயன் அடைய உதவும்.
விளக்கம்
இந்தப் பாடலில் மூச்சை உள்ளிழுக்கும் கணக்கையும் வெளியிடும் கணக்கையும் உள்ளே நிறுத்தி வைக்கும் கணக்கையும் சொல்லியிருக்கிறார்.
பூரகம். 16 விநாடி என்றால்
ரேசகம். 32 விநாடி
கும்பம். 64. விநாடி
அதாவது 1:4:2 அளவு
உள்ளிழுக்கும் பூரகம் 1 என்றால் கும்பம் 4 வெளியிடும் ரேசகம் 2 என்ற வீகிதத்தில் இருக்க வேண்டும். என்ற பாடலில் சொல்லியிருக்கிறார்.
பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் பிரணயாமம் செய்பவர்கள் அல்லது பழகுபவர்கள் கும்பம் இல்லாமல் பூரகம் ரேசகம் சரிசமமாக அதாவது 1:1 பழக வேண்டும்.இப்படி பயிற்சி செய்தால் மனம் ஒத்துழைக்கும், பிறகு கும்பம் சேர்த்துக்கொள்ளலாம்.
"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்புலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே"
பொருள்
உடலில், வெளிவந்தும் உள்ளே புகுந்தும் திரிகின்ற மூச்சுக்காற்றை முறையாக உடலுக்குள் கும்பம் செய்வதன் மூலம் தூய்மை அடையச் செய்தால் உறுப்பு சிவக்கும், உரோமம் கறுக்கும் புத்துணர்ச்சி பெறும்.
விளக்கம்
பூரகம், ரேசகம் எந்த ஒரு முயற்சியும் இன்றி தானாகவே நடக்கும். தானாக நடக்கும் சுவாசத்தை கட்டுப்படுத்தி அதை ஒரு நீயதிக்குள் கொண்டு வருவதுதான் பிரணாயாமம். அதில் கும்பம் மிக முக்கியமானது கும்பம் செய்து பழகி விட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும், உரோமம் கறுக்கும் என்று பாடலில் சொல்லியுள்ளார்.
நாடிசத்தி
"சித்தி" என்றால் பக்குவம் என்று பொருள். அதுபோல் சித்தமாகிவிட்டது என்றால் தயாராகிவிட்டது என்று பொருள் கொள்ளலாம்; பக்குவம் ஆகிவிட்டது என்றும் கூட சொல்லலாம். எதற்கு என்று கேள்வி தோன்றும். தினமும் பயிற்சி செய்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட கால அளவில் பக்குவம் கிடைக்கும்.
பிரணாயாமம் பழகும் முன் நாடி சுத்தி என்னும் மூச்சுப் பயிற்சி மிக முக்கியம் இதை செய்வதன் மூலம் உடல் தகுதி பெறும்.
செய்முறை
இடது நாசியை ஒரு விரலால் மூடி வலது நாசியால் காற்றை முடிந்த அளவு இழுக்கவும் மூச்சை சற்றும் நிறுத்தாமல் இடது நாசியில் மூலம் வெளியேற்ற வேண்டும் பின்பு இடது நாசியால் சுவாசத்தை இழுத்து வலது நாசியில் வெளியேற்றவும் இப்படி 10 நிமிடங்கள் நாள்தோறும் விடியற்காலை, மதியம், சாயங்காலம், இரவு ஆகிய நான்கு வேளைகளும் செய்ய வேண்டும் இவை யோகம் (பிரம்மச்சாரிகளுக்கு) பயில்பவர்களுக்கு. இல்லத்தார்க்கு காலை, இரவு போதுமானது.
மூச்சை இழுக்கும்போதும், விடும்போதும் மெல்ல ஒரே சீராக இடை இடையே நிறுத்தி விடாமல் செய்ய வேண்டும். துன்பமின்றி எத்தனை காலம் மூச்சை உள்ளிழுக்க முடியுமோ அந்த அளவு இழுக்க வேண்டும் அதே போல் எத்தனை காலம் மூச்சை வெளியேற்ற முடியுமோ வெளியேற்ற வேண்டும் இதில் அவசரம் காட்டக்கூடாது நிதானமாக செயல்பட வேண்டும்.
சுவாசத்துடன் மந்திரம் ஜெபம் செய்வது மிகவும் நல்லது. சுவாசம் எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதால்; சுவாசத்துடன் பழகிய மந்திர உச்சாடனம், சுவாசத்துடன் கலந்திருக்கும்.
நாடிசுத்தி குறைந்தபட்சம் ஒரு மண்டலம் செய்து பின்பு பூரகம், ரேசகம், கும்பம் பயிலலாம்.
கவனிக்க வேண்டியவை
இடம், ஆசனம், காலம் இவைகள் முக்கியமானது இவைகள் அடுத்த பதிவில் காணலாம்.........
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்