நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜி நகுஸோத்தரம்"
(பகவத் கீதா)
"Please click "follow" icon ln my blog, so you will get notification of my future post. Kindly do leave your comments which will be a motivation for me to produce more content."
பொருள்
தூய்மையான இடத்தில் தரைமீது தர்ப்பை, மான்தோல், துணி இவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து மிக உயரமாக இல்லாமலும், மிகத் தாழ்வாக இல்லாமலும் தன்னுடைய இருக்கையை அசைவற்ற அமைத்துக்கொள்ள வேண்டும்.
விளக்கம்
அமர்வதற்கு வசதியாக பலகை அல்லது கல்லினால் செய்யப்பட்ட இடம் ஆசனமாகும்; அந்த இடம் உயரமாக இருந்தால் தியானத்திற்கு தடையாக சோம்பலோ, தூக்கமோ நேரும்போது தடுமாறி விழுந்து காயம் ஏற்படலாம். மிகவும் தாழ்வாக இருந்தால் தரையின் ஈரம் சூடு, எரும்பு, புழுக்கள் இவற்றால் இடையூறு ஏற்படலாம். ஆகவே ஆசனம் அதிக உயரமாகவோ தாழ்வாக இருக்கக் கூடாது.
கல் அல்லது பலகையால் ஆன ஆசனம் சொரசொரப்பாக இருந்தால் அதில் உட்காரும் போது கால்களுக்கு கஷ்டம் உண்டாகலாம். ஆகவே அதற்கு மேல் தர்ப்பம், மான்தோல், துணி இவற்றை விரிக்கவேண்டும் மான் தோல் கீழே தர்ப்பை விரித்து விட்டால் அது விரைவில் வீணாகாது மேலே துணியை விரித்து விட்டால் அதன் மேல் உள்ள ரோமங்கள் உடலில் ஒட்ட; அதனால் தான் மூன்று விதமான விரிப்புகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
மான்தோல் தானாக மரித்த மான் உடையதாக இருக்க வேண்டும், வேட்டையாடப்பட்டதாக இருக்கக் கூடாது.
இன்றைய காலகட்டத்தில் மான்தோல் பயன்படுத்தினால் பிரச்சினைகள் நேரம் ஆகையால் மான் தோலை தவிர்த்து கம்பளி பயன்படுத்தலாம்.
"தத்ரைகாக் ரம்மந க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரிய
உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத் யோக மாத்மவிஸுத்தயே"
(பகவத் கீதா)
பொருள்
ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மனம் புலன்களின் செயல்களை வசத்தில் வைத்துக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி உள்ளது மிக்க யோகத்தைப் பயில வேண்டும்.
விளக்கம்
"சித்தம்"என்ற சொல் உள்ளம் அதாவது அந்தக்கரணத்தை குறிப்பதாகும். மனம் புத்தி களால் உலக விஷயங்களை சிந்திக்க பட்டு நிச்சயிக்கப்படுகின்றன முற்றிலுமாக சிந்தனைகளை துறந்து அவற்றில் இருந்து ஓய்வு பெறுவது அந்தக் கரணத்தின் செயல்பாடுகளை வசத்தில் கொண்டு வருவதாகும்.
தியானிக்கப்படும் பொருள்மீது மனதின் ஓட்டத்தை சிதறவிடாமல் ஈடுபடுவதுதான் அதனை உருவ படுத்துவதாகும்.
யோகம் பயில்வது என்றால் சவுகரியமான ஆசனத்தில் அமர்ந்து உள்ளம் புலன்களின் செயல்களை தன்வசப்படுத்தி மனதை பரமேஸ்வரன் பால் ஈடுபடுத்தி இடைவிடாது எப்போதும் பரமாத்மாவை சிந்திப்பதுதான் யோகம் பயில்வதாகும்.
"ஸமம் காயஸிரோக் ரீவம் தாரயந்நசலம் ஸ்திர
ஸம்ப்ரேக்ஷ்ய நாசஸிகாக்ரம் ஸ்வீப் திஸஸ்சாநவலோகயந்"
(பகவத் கீதா)
பொருள்
உடல், தலை, கழுத்து இவற்றை சீராக அசைவற்றதாகவும் வைத்துக் கொண்டு அசையாமல் இருந்து கொண்டு மற்ற திசைகளை பாராமல் தன்னுடைய நாசியின் நுனியின் மீது பார்வையை ஒருமுனைப்படுத்தி அமர வேண்டும்.
விளக்கம்
தொடைக்கு மேல் கழுத்திற்கு கீழ் உள்ள உடலின் பாகத்தை காயம் என்கிறார்கள்; அதற்கு மேல் உள்ள கழுத்து, அதற்குமேல் இருப்பது தலை இடுப்பும், வயிறும், முன்னோ, பின்னோ, இடதுபுறமும், வலதுபறமும் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதுகுத்தண்டை நேராக முன் கழுத்தில் சாயலும் தலையை திருப்பாமல் ஒரே சீராக வைத்துக் கொண்டு அசையாமல் இருக்க வேண்டும். இதுதான் அசையாமல் இருப்பதாகும்.
உடல் தலை கழுத்து இவை சமமாகவும் சீராகவும் இருந்தாலும் கைகால்கள் அசையலாம்.
"சாதனை"செய்யும் போது தூக்கம் சோம்பல் தடுமாற்றம் தட்பவெப்பம் முதலிய இரட்டைகள் எல்லாம் இடையூறுகள் ஆகும். இந்த மாசுக்கள் இருந்து மீள்வதற்கு உடல் தலை கழுத்து நேராக நிமிர்ந்து இருப்பதாலும் கண்கள் திறந்து இருப்பதாலும் சோம்பல் தூக்கம் நம்மை ஆட்கொள்ள மாட்டாது.
இந்த ஸ்லோகத்தில் "ஸ்திர"மான் ஆசனம் என்று சொல்லுகிறார். இதையே பதஞ்சலி முனிவர் வலியுறுத்துகிறார் தனது யோக சூத்திரத்தில் "சாதன பாதம்"அத்தியாயத்தில் 46 வது சுலோகம்.......
"ஸ்திர ஸுகமாசனம்" என்கிறார்
அதாவது உறுதியாகவும் சுகமாக இருப்பது ஆசனம்.
பிரணாயாமம் தாரணை தியானம் சமாதி ஆகிய எல்லாமே ஆசனத்தை அடிப்படையாக வைத்துத்தான் சாதனை புரிய வேண்டும்.
ஆகவே ஆசனம் உறுதியாக இருந்தாக வேண்டும் அதே சமயம் தொல்லை தருவதாக இருக்க கூடாது அது குறிப்பிட்ட நேரம் நீடித்து சுலபமாக சுகமாக இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்