அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது அங்கமாக வருவது ஆசனம். நாள்தோறும் யோகி ஒருவன் யோகாசனம் சிலவற்றை செய்தால் தான் உடல் பக்குவம் அடையும். சாதனை செய்வதற்கு அதாவது யோகம் செய்வதற்கு உபயமாக இது அமைகிறது. உடலை வெவ்வேறு நிலைகளிலும் இருக்க செய்வதற்கு ஆசனங்கள் மிகவும் தேவையானது. நெடுநேரம் அமர்ந்து இருப்பதற்கு எந்த ஆசனம் பொருத்தமாக இருக்கும் என்று சாதகன் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த ஆசனத்தை பயில வேண்டும் ஸ்திரமாகவும் மனதிற்கு சுகமாகவும் அந்த ஆசனம் இருக்க வேண்டும். சாதகனுக்கு எந்த ஆசனம் பொருத்தமாக இருக்கிறதோ அதை பயிற்சி செய்தல் வேண்டும். சாதாரணமாக சப்பணம் கட்டி உட்கார்ந்தால் அது சுகாசனம் என்கிறோம். உள்ளங்கால் இரண்டும் மேல் நோக்கியபடி செய்துவிட்டால் அது பத்மாசனம் என்று சொல்லப்படுகிறது. ஆசனங்களில் பத்மாசனம் ராஜா போன்றது, சிங்கம் போன்றது யோகம் பயில்வதற்கு அதுவே சிறந்தது ஆனால் நல்ல தேர்ச்சி/ பயிற்சி பெற்றால் மட்டுமே நெடுநேரம் சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் அசைவற்று அமர அந்த ஆசனம் பழகினால் மிகவும் சிறப்பு.
ஆசனத்தில் இருக்கும் போது உடல் நினைவே வரக்கூடாது சுகமோ வலியோ இரண்டுமே உணரக் கூடாது. அப்படி இருந்தால் தான் ஆசனத்தில் வெற்றி பெற்றவன் என்று அர்த்தம்.
நாம் சாதனை செய்ய அமரும் போதுதான் உடலில் உள்ள குறைகள் எல்லாம் நமக்குத் தெரியவரும் உடல் தடுமாறுவதை உடல் மீது கவனம் செலுத்துவதே நாம் உணரலாம். இந்த நிலையில் மற்ற பயிற்சிகள் தொடர முடியாத நிலை ஏற்படும் அதனால்தான் ஆசனம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.
சூரிய நமஸ்காரம் தினமும் 108 தடவை செய்தால் போதுமானது. வேறு எந்த ஆசனமும் தேவை இல்லை.
யோகம் செய்ய ஆரம்பிக்கும்போது சில ஆசனங்களை கண்டிப்பாக செய்து பயிற்சி பெற வேண்டும்.
சில ஆசனங்கள் (உட்காரும் நிலையில்.....)
பத்மாசனம்
பங்கஜ ஆசனம் என்றும் சொல்லப்படும் பங்கஜம் என்றால் தாமரை வடிவம் என்று பொருள்.
தியானத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஆசனம் வலது முழங்கால் மூட்டுக்கள் மேல் வைத்து அதன் மேலே மடக்கிக் கொள்ளவும் இடதுகாலை தொடை அடிவயிற்றில் சேரும் இடத்தில் வைத்துக் கொள்ளவும்; இதே போல் இடது காலை வலது தொடை அடிவயிற்றில் சேரும் இடத்தில் வைக்கவும்.
இரண்டு கால்களும் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை தொடையின் மேல் வைத்துக்கொண்டு தியானம் பழகவும்.
பலன் என்னவென்று பார்த்தால் ஜபத்திற்கு தியானத்துக்கும் உட்காரும் ஆசனம். மூட்டு வலி ஏற்படாது.
வஜ்ராசனம்
வலது காலும் இடது காலும் மடக்கி, குதிகாலை வலது இடது புட்டத்தின் அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங்கால் மூட்டுகளில் ஒன்றாக வைத்துக் கொள்ளவும்; நன்றாக நிமிர்ந்து தலை தோள் புட்டங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு அமர வேண்டும் உள்ளங்கைகளை தொடையின் மேல் வைத்துக்கொள்ளலாம்.
இதன் பலன் என்னவென்று பார்த்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
யோகமுத்ரா
பத்மாசனத்தில் அமர்ந்து வலது மணிக்கட்டை இடது கையால் முதுகுக்குப் பின்புறம் பிடித்துக்கொள்ளவும், முன்னே குனிந்து நெற்றியால் தரையைத் தொடவும் திரும்பவும் நேர்கோட்டு க்கு வரவும்; பத்து முறை செய்தல் நன்று.
இதன் பலன் என்னவென்று பார்த்தால் மலச்சிக்கல் நீங்கும். குண்டலினி சக்தி இயக்க இது உதவும்.
பொது ஆசனம்
சிரசாசனம்
தலைகீழாக நிற்கும் ஆசனம். ஆரம்பகால பயிற்சியின் போது சுவற்றின் ஓரம் பயிற்சி செய்யவும்.
இதன் பலன் என்னவென்று பார்த்தால் தலைக்கு இரத்த ஓட்டம் நன்றாக கிடைப்பதால் உடம்பிலுள்ள எல்லா நரம்புகளும் வலிமை பெறுகின்றன. ஞாபக சக்தி அதிகரிக்கிறது. தைராய்டு சுரப்பி வலிமை பெறுகிறது. இதய நோய் உள்ளவர்கள் இவ்வாசனம் உபயோகமாக இருக்கிறது மனம் குவிய உதவுகிறது.
சர்வாங்காசனம்
தோள் மீது நிற்கும் பயிற்சி மல்லாந்து விரிப்பின் மீது படுத்து கைகளை தலைக்கு மேலாக நீட்ட வேண்டும். மெதுவாக இரண்டு கால்களையும் இணைத்தவாறு உயர்த்தி முழங்கால் மூட்டுகளை வளைக்காமல் உயர்த்தவும்.
நேராக வைத்துக் கொண்டு கால்களை வானம் நோக்கி நேராக நீட்டவும். தோள்களை உடலைத் தாங்கும் படி இருக்க வேண்டும் உடல் தளர்ந்த நிலையில் இருக்க பயிற்சி செய்ய வேண்டும்.
இதன் பலன் என்னவென்று பார்த்தால் நாளமில்லா சுரப்பிகளை வலிமையாக்கி வைக்கிறது இதனால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது ஆண், பெண் பால் உறுப்புகளை நன்கு இயங்கச் செய்கிறது கல்லீரலையும், நரம்புகளையும் பாதுகாக்கிறது.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்