ஹலாசனம்
சர்வாங்காசனம் போல் செய்ய வேண்டும் ஆனால் கால்களை நன்றாக தலையின் பின்புறம் நீட்டி தரையைத் தொடவேண்டும்.
இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் பின்புற தசைகள் முதுகு எலும்பு மூட்டுகள் முழுவதும் வலிமை பெறுகின்றன. கழுத்துப்பகுதி ஏராளமான இரத்த ஓடடம் பெறுகிறது. நரம்புகள் வலிமை பெறுகின்றன. தைராய்டு சுரப்பிகள் சரியாக இயக்கப்படும். முதுகெலும்பு நன்றாக வளையும்.
மத்ஸ்யாசனம்
பத்மாசனத்தில் அமர வேண்டும். பின்புறம் வளைய வேண்டும் பின்பு இடது கையை மடித்து உடலைத் தாங்கிக் கொள்ளவும் உள்ளங் கைகளை வைக்கவும்.தோள்கள் தலையின் இரு பக்கத்திலும் இருக்கும் விரல்கள் தோள்களைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். (பார்க்க படம்)
இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் சர்வாங்காசனத்தின் பலன்கள் துரிதமாக கிடைக்கின்றன. சர்க்கரை வியாதிக்கும் நல்லது. ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகிறது. கழுத்துப்பகுதி வலிமை பெறும்.
சலபாசனம்
குப்புறப் படுத்துக்கொண்டு கைகளை முன்னே நீட்டிக் கொள்ளவும்.
கட்டை விரலை மடக்கி மூடிய கைகளை அடிவயிற்றின் அருகே வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து விழிததுக் கொள்ள வேண்டும் இடுப்பில் இருந்து காலை இனைத்தவாறு உயர்த்த வேண்டும். முழங்கால் மூட்டு வளைய கூடாது. சிறிது நேரம் அப்படியே இருக்க வண்டும் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே கால்களை இறக்க வேண்டும்.
இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் கால்கள் இடுப்பு நலம் பெறும். மலச்சிக்கலை ஏற்படாது. சிறுநீரகத்தை தூண்டிச் சுறுசுறுப்படையச் செய்கிறது கல்லீரலையும் கணையத்தையும் மூத்திரப்பை தண்டுவடத்தில் தசை நார்களையும் நல்ல முறையில் இயங்கச் செய்கிறது.
மகராசனம்
குப்புறப் படுத்துக்கொண்டு கைகளை முன்னே நீட்டிக் கொள்ளவும். பாதங்களைப் பற்றிக் கொள்ளவும். உள்ளங்களை தரையை தொட்டவாறு உட்பக்கமாக இருக்க வேண்டும் விரல்கள் வெளிப்புறம் இருக்க வேண்டும்.
வலது கையை மடக்கி உள்ளங்கையை இடது தோள் மேல் வைக்கவும் இடது கையை வலது தோளின் மீது வைக்க வேண்டும். கீழ்தாடை கைகளில் இணைப்பில் இருக்க வண்டும் இரண்டு கைகளையும் இணையுமிடத்தில் கழுத்து இருக்கும்படி செய்ய வேண்டும்.
இதன் பயன்கள் என்னவென்று பார்த்தால் உயர்ந்த ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கிறது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இவ்வாசனம் பயன்படும்.
தனுராசனம்
இந்த ஆசனம் வில்லின் தோற்றம் போல் தெரியும்.குப்புறப் படுத்துக்கொண்டு கைகளை முன்னால் நீட்டி கொள்ளவும் முழங்கால் மூட்டுக்கள் வளைக்கவும் கைகளால் கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும் தலையை மாறும் நெஞ்சை உயர்த்தவும். தொடைகள் உயரட்டும் முதுகெலும்பு பின்புறமாக வளைந்து காட்சியளிக்கும் அடிவயிற்றின் மீது உடலை உயர்த்தி அப்படியே இருக்கவேண்டும். கைகள் மூட்டுக்களிடையே வளையக்கூடாது.
இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் வாய்வு சம்பந்தமான நோய்கள் மறைகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது அளவுக்கு மீறி பருத்த உடலையும் குறையச் செய்கிறது. முதுகுக்கு வலிமை கொடுக்கும் நல்ல ஆசனம்.
சக்ராசனம்
கால்களை இணைத்துக்கொண்டு தரைமீது மல்லாந்து படுக்க வேண்டும் கைகளை உடலுடன் ஒட்டி இருக்கட்டும் கைகளை பின்னே கொண்டுபோய் உள்ளங்கைகளை தோள்களுக்கு மேலாக தலையில் தலைக்கு இருபுறமும் வைக்கவண்டும் விரல்கள் தோள்களைப் பார்த்தவாறு இருக்கட்டும் கால் மூட்டுகளை மடித்து கால்களை மறக்கவும் உள்ளங்கைகள் குதிகால்கள் நன்றாக அழுத்தி புட்டம் இடுப்பு ஆகியவற்றை உதவும் சக்கரம் போல் உடல் குளிர்ந்து காணப்படும்.
என் பலன்கள் என்னவென்று பார்த்தால் முதுகு நன்றாக வலிமை பெறும் முதுகெலும்பும் அருகே உள்ள நரம்புகள் வலுவடையச் செய்கிறது பின்பக்கம் அறியக்கூடிய ஆசனங்கள் இது மிகவும் சக்தி வாய்ந்தது.
புஜங்காசனம்
தரையின் விரிப்பின் மீது கவிழ்ந்து படுக்க வேண்டும் கால்களை ஒன்றாக இணைத்து முகவாய் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும் குதிகால் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். கைகளை மடக்கி பின்னர் கடைசி விலா எலும்பு அருகில் வைத்து உள்ளங்கைகளை சற்று அழுத்தினால் போதும் கைகள் பரப்பினால் போல் அல்லாமல் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும் தலையை முதலில் உயர்த்தவும் பின் இடுப்பின் மேல் பாகத்தை உயர்த்தவும் நாபி வரை அதாவது தொப்புள் வரை உடல் உயர வேண்டும்.
இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால் முதுகெலும்பு நன்றாக வழியே செய்கிறது தண்டுவடத்தின் மேல்பாகத்தில் உறுதியாக இருக்க உதவும் அதையே உழைப்பால் ஏற்படும் முதுகுவலி போகிறது மார்பு சளி ஆஸ்த்மா போன்றவற்றை நீக்குகிறது தொந்தியைக் குறைக்கும்.
பொதுவாக ஆசனம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டும் காலை மாலை நேரம் இல்லை என்றால் குறைந்தபட்சம் 15 நிமிடமாவது தினமும் பயிற்சி செய்ததால் நீ உண்டாகும்.
உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.
திருமந்திரம்
விளக்கம்
உடம்பால் இருந்தாள் உயிரும் அந்த உடலை விட்டு நீங்கி விடும் பிறகு உயிர்க்கு உற்ற துணை யான மெய்ஞானம் ஆகிய பரம்பொருளை சிந்தனையில் வைத்து தியானம் செய்ய இயலாது எனவே உடம்பை அதிலுள்ள உயிரை காப்பாற்று வதற்காக உடலை வளர்த்தேன்.
வாழ்க வளமுடன்
0 கருத்துகள்