ஆதாரசோதனை ஆத்துவ சோதனை
தாது ஆதாரமாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமை
திருமந்திரம்
விளக்கம்
மேதை முதலான 16 கலைகளிலும் பொருந்த ஓம் என்னும் பிரணவத்தை ஓதி மூச்சுப் பயிற்சி செய்ய மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் குண்டலினி மேலே செல்ல வழியை, அது செய்து தரும். உயிர் சக்தியாகிய வீரியம் கீழ் நோக்கி போகாது மேல செய்தால் ஆறு ஆதார நிலைகளிலும் இன்பம் விளையும் நிலமாக இவ்வுடம்பு ஆகிவிடும்.
ஸ்வாதிஷ்டானம்
நிறம் இளஞ்சிவப்பு இதற்கு தேவதை பிரம்மா 6 இதழ்கள் கொண்டது. இது ஜனனேந்திரிய உறுப்பின் வேரில் க்ஷஷும்னா நாடிக்குள் அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தை தியானிக்கும் யோகிக்கு நீரைப் பற்றிய பயம் நீங்கி விடும். மேலும் பல மனோ சக்திகள் அறிவு மனம் மற்றும் பிற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் இருந்து நீங்குவான். எல்லா தேவதைகளும் அவனை நேசிக்கும். இதுவரை அறிந்திராத சாஸ்திரங்களை கண்டு உணர்ந்து மரணத்தை வென்று இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அச்சமின்றி திரிவான்.
மணிப்பூரகம்
மூன்றாவது நிலை இதன் தேவதை மகாவிஷ்ணு. நிறம் ஊதா. இது தொப்புள் பகுதியில் அமைந்துள்ளது. பத்து இதழ்கள் கொண்டது.
பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தை தியானிக்கும் யோகிக்கு ஆக்கவும் அழிக்கவும் வல்ல ஆற்றல் சித்திக்கும். கலைவாணி அருளுக்கு பாத்திரமாவான்.பொக்கிஷங்கள் பற்றிய ஞானம் அவனுக்கு உண்டாகும். எல்லாவகை நோய்களிலிருந்து விடுதலை பெறுவான்.
நெருப்பின் அச்சம் அவனை விட்டு விலகும். ரசவாதம் அவனுக்கு கைகூடும்.
அநாஹதம்
இது நான்காவது சக்கரம். 12 இதழ்கள் கொண்டது. நிறம் ஆழ்ந்த சிவப்பு. இதயப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. ஜோதி ரூபம்.
பிராணாயாமத்தின் போது ஆழ்ந்த தியானிக்கும் யோகிக்கு காற்றின் மீது ஆதிக்கம் பெறுகிறான். வானில் பறக்க முடியும். கூடு விட்டு கூடு பாய முடியும்.
விசுத்தி
ஐந்தாவது சக்கரம் இது பதினாறு இதழ்கள் கொண்டது. சாம்பல் நிறம். தேவதை ஜீவன். தொண்டைக் கடியில் இது அமைந்துள்ளது.
பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தை இடைவிடாது தியானிக்கும் யோகிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும். அவன் பிரளய காலத்தின் போது அழிவதில்லை. நான்கு வேதங்களின் பூரண ஞானம் பெற்றவனாய் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்படும் முக்காலத்தயும் அறிவான்.
ஆங்ஞை
இது ஆறாவது சக்கரம் இரண்டு இதழ்கள் கொண்ட வெள்ளை நிறமுடையது இங்கே ஜீவன் யோகி. அஷ்டமா சித்து பெறுகிறான். இரண்டு கண்களுக்கு நடுவில் புருவ மத்தியில் சுக்ஷும்னாவினுள் இது அமைந்துள்ளது. தேவதை ஈஸ்வரன்.
பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தை தியானம் செய்வதால் யோகிக்கு பூர்வ ஜன்மங்களில் தான் செய்த கர்ம வினைகளை எல்லாம் அழிக்கிறான். ஜீவன் முக்தனாகிறான்.
ஸஹஸ்ராரம்
ஏழாவது சக்கரம் என்று சொல்லப்படுகிறது. தலை மீது அமைந்துள்ளது என்றும் சிலர் மேலே உயரத்தில் காற்று வெளியில் அமைந்துள்ளதாகவும் கூறுவர். ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரை போன்ற வடிவம் உடையது. முக்திநிலை. எங்கும் நிறைந்த ஏக வடிவமாய் விளங்கும் பரமாத்மாவான பரமேஸ்வரன் ஆகாய வடிவில் இங்கு குடி கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பிராணாயாமத்தின் போது இந்த சக்கரத்தில் தியானம் செய்தால் யோகி ஞானி ஆகிறான். அமிர்தத்தை அவன் அருந்துவான். பரப்பிரம்மத்தோடு கலந்துவிடுவான்.
தியானத்தின் உக்கிரத்தால் கும்பம் வீரியமடைந்து அதனால் உண்டான வெப்பத்தால் மூலாதாரத்தில் குண்டலினி சக்தி தன் வாலைத் தானே கவ்வியபடி சுருண்டு கிடக்கும் சக்தியை பிரம்மச்சரியத்தினால் தட்டியெழப்ப அச்சக்தியானாது போக வழியின்றி சுக்ஷம்னா நாடி வழியே மேலே ஒவ்வொரு சக்கரமாக ஏற தொடங்குகின்றது.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்ற மொழிக்கேற்ப ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பிரபஞ்ச சக்தியை, குண்டலின சக்தி வந்துசேர யோகி தன் வசமாக்கி கொள்கிறான்.
மூலாதாரத்தில் குண்டலினி சக்தி விழிப்புற்று மேல் செல்லும் போது மிருக இச்சையிலிருந்து விடுதலையையும், சுவாதிஷ்டானம் கடக்கும்போது உயர்ந்த பண்பையும், மணிபூரகத்தில் அடையும் பொழுது ஆனந்தமான மனதையும் யோகி அடைகிறான்.
மணிபூரகத்தில் இருந்து குண்டலினி சக்தியானது மூலாதாரத்தை
நோக்கி கீழே செல்லும் அபாயம் உண்டு. அருவியில் இருந்து தண்ணீர் கீழே நோக்கிப் பாய்வது போல் மேலே கொண்டு வரப்பட்ட குண்டலினி சக்தியானது கீழே செல்லும் சந்தர்ப்பம் உண்டு.ஆதார சக்கரங்களை இயங்கு செய்துவிட்டால் சாதனம் பழகும் யோகி அதீத ஆற்றலை அடக்கியாள முடியாமல் காமம், பெண் பித்தன் அல்லது பாலுணர்வுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும்.
நாலாவது சக்கரம் அனாஹதம் வந்து சேர்ந்து வட்டால் சாதகன் ஒன்றும் செய்யாவிடினும் படிப்படியாக குண்டலினி சக்தி எந்த சிரமமுமின்றி மேலே ஏறி முக்தி அடைவான்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்