மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே"
திருமந்திரம்
பொருள்
பிறப்பை அறுக்கும் - பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடச் செய்யும்.
பெருந்தவம் நல்கும் - அவளை எண்ணி தவம் செய்வோர்க்கு நன்மைகளை தரும்.
மறப்பை அறுக்கும் - அறிவை மறைக்கும் அஞ்ஞானமாகிய திரையை அறுத் தெரியும்.
வழி படவைக்கும் - உலகம் தவம் செய்பவர்களை வழிபட செய்யும் தெய்வ நிலையை அருளும்.
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே -
இவையெல்லாம் குறப்பெண் கோமளவல்லியை சிறப்போடு பூஜை செய்யும் சாதகனுக்கு அமையும்.
விளக்கம்
வேத மார்க்கத்தில் இவள் வித்தை என்றும் போற்றப்படுபவள். ஆத்ய சக்தி என்றும், பரதேவதை என்றும், எல்லாம் அறிந்தவள் என்றும், அனைத்து உயிர்களுக்கும் உறைபவள் என்றும், முனிவர்கள், ரிஷிகள் தியானம் செய்பவர்களாக இருப்பவள்.
உயிருள்ள மற்றும் உயிர் இல்லாததிலும் இவ்வுலகம் அனைத்தையும் தன் முக்குண சக்தியால் சிருஷ்டித்து காத்து பிரளயகாலத்தில் அனைத்தையும் அழித்து முத்தொழில் புரிபவள் என்றும், இவளை வணங்கினால் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட செய்பவள்.
இவளை வணங்கி, தியானித்தால் பல நன்மைகளைத் தருபவள். அறிவை மறைக்கும் அஞ்ஞானத்தை அழித்து காட்சி தருபவள். இவளை தியானித்து வழிபட்டால் உலகம் இந்த சாதனை தெய்வநிலை அடைய செய்பவள் என்று திருமூலர் கூறுகிறார்.
ஸ்ரீ சக்கரம்
பராசக்தியின் யந்திர ரூபமே ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ என்றால் பெருமை என்று பொருள் அதாவது பெருமை வாய்ந்த சக்கரம் என்று பொருள். இந்த அண்டம் (உலகம்) பிரம்மாண்டமாக நமக்குத் தெரிகிறது. இந்த உலகத்தை இயக்கும் சக்தி சூட்சமமாக இருக்கிறாள்.
ஸ்ரீ சக்கரத்தை பெண்ணாக அதாவது அம்பாளாக பாவித்து வழிபடுகிறார்கள். தேவியின் யந்திரம் ஸ்ரீசக்கரம் என சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீசக்கரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கிறார்.
ஹ்ரீம் பீஜத்தை ஒன்றுக்கொன்று திரிகோணங்களில் நடுவில் எழுதி அதைச் சுற்றி விருத்தம் வரைந்து அதை மேல்பாகத்தில் அஷ்டதாளத்தில் அலங்கரித்து, அது தேவியினுடைய திருவடிகளை தியானித்துக் கொண்டு சௌந்தர் அழகிரியை சுலோகங்களை பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் கனவிலும் நனவிலும் பராசக்தியின் தரிசனம் பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார் ஆதிசங்கரர்.
சிவபெருமானுக்கு பானலிங்கம், விஷ்ணுவுக்கு சாளக்கிராமத்திலும், வாசம் செய்வதுபோல், பராசக்தி ஸ்ரீசக்கரத்தில் வாசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது. 14 லோகங்களுக்கு நாயகியான லலிதா மஹா திரிபுர சுந்தரி என்னும் மகாலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். திரிபூராம்பிகை பேரொளியாய் காட்சி தந்ததால். பேரொளி வடிவமே ஸ்ரீசக்கரம் என்று சொல்லப்படுகிறது.
திருமூலரும் திருமந்திரத்தில்........
"ஆதி விதமிகுத் தன்தந்தமால் நங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில்வைத்துப் பல்காற்பயில்விரேல்
சோதிமிகுந்துமுக் காலமுந் தோன்றுமே".
விளக்கம்
ஆதியாகிய சிவப் பரம்பொருளின் முந்தைய படைப்பு தொழில் பெருக தன் அருள் புரிந்தவள் திருமாலின் தங்கை நாராயணி; முறையாக அமைக்கப்பட்ட எட்டு இதழ்கள் உடைய தாமரை சிவ சக்தியாகிய அவள் அந்தத் தாமரை நடுவில் வைத்தும் பலகாலம் தொடர்ந்து இடைவிடாது ஜெபித்து உரு ஏற்றினால் உடம்பு ஒளிமிகுந்த ஜோதி மயமாக விளங்கும் நடந்த, நடக்கின்ற, நடக்க உள்ள முக்காலமும் உணரும் வல்லமைய அடையலாம் என்கிறார் திருமூலர்.
ஸ்ரீ சக்கரத்தில் ஒன்பது முக்கோணங்கள் மேலே பார்த்தபடி நான்கு கோணங்களும் சிவம் என்றும்; கீழே பார்த்தபடி ஐந்து கோணங்கள் சக்தி என்றும் நம்பப்படுகிறது; ஐங்கோணம், ஷட்கோணம் ஆகியவை இதன் அங்கங்கள் 2 இதழ் முதல் பல இதழ்கள் பங்கஜத்துக்கு உண்டு (பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள் உண்டு).
கோணங்களும் இதழ்களும் சேர்ந்தது ஸ்ரீசக்கரம். இதில் உள்ள மலர்கள் எல்லாமே ஸ்ரீ சக்கரம். ஆக தாமரை ஸ்ரீ சக்கரத்தை குறிக்கிறது. அதனால்தான் அம்பிகையின் வாசஸ்தலமாக தாமரை குறிப்பிடுகிறார்கள்.......(அடுத்த பதிவில்)
திருக்கடவூர் அபிராமியம்மை ஸ்தோத்திரம்
கலையாத கல்வி குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்,
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்,
துய்யநின் பாதத்தில் அன்பு உதவி பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்,
அலையாழி அறிதுயிலுமாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி !அபிராமியே !!
.....1
காரளக பந்தியும் பந்தியும் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்,
கர்ண குண்டல முமதிமுக மண்டலம்நுதற்
கத்தூரிப் பொட்டும் மிட்டுக்,
கூரணிந் திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் இனிய தரமும்,
குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தையும்
கோடுசோடான களமும்,
வரணிந் திறுமாந்த வன்முறையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும்,
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினைய மற்றுவாயே,
ஆரமணிவானிலுறை தாரகைகள் போலநிறை
ஆதிகடவூரின் வாழ்வே,
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுபாணி
அருள்வாமி !அபிராமியே !!
.....2
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்