சர்வம் சக்தி மயம் - 2 (ஸ்ரீசக்கர அமைப்பு)




ஆவரணம் என்றால் மதில், மறைப்பு, திரை, துணி, உடை போன்ற வைகளைக் குறிக்கும். ஸ்ரீசக்கரம் தேவியின் சூஷ்ம ரூபம் அந்த ஸ்ரீசக்கரத்தில் 9 ஆவரணங்கள் உண்டு. அதாவது மதில் அல்லது மறைப்பு என்று பொருள்.



ஸ்ரீ சக்கரம் பிந்து, முக்கோணம் எட்டு கோணம் இரண்டு, பத்து கோணங்கள், பதினாறு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம் மூன்று கோடு என்ற அமைப்பில் உருவானது.



ஸ்ரீசக்கரத்தில் பிரதானமாக ஒன்பது முக்கோணங்கள் உள்ளன முக்கோணத்தில் முனை உயர இருப்பது சிவத்தையும் அதாவது மேல்நோக்கி நான்கு கோணங்கள் சிவ கோணங்கள் என்றும,




முனை கீழே இருப்பது சக்தியை உணர்த்துகிறது அதாவது கீழே பார்த்தபடி ஐந்து கோணங்கள் சக்தி கோணங்கள் என்றும்,




இவைகள் கலந்து இணைந்த வடிவம் பிரம்மம் இந்த நிலையை சொல்கிறது.





இந்த முக்கோணங்கள் யோனிகள் என்று அழைக்கப்படும். பிந்து ஸ்தானம் என்ற மத்திய இடம் பத்தாவது. இவள் இயங்கும் இந்த முக்கோணங்கள் அந்தர்முகமாக இருப்பது 43 முக்கோணங்கள் ஆகும்.



ஸ்ரீ சக்கரத்தில் 43 முக்கோணங்கள் என்ன கணக்கு? என்று கேள்வி எழும். ஒன்றான தேவி ஒன்பது சக்திகளாக ஆனாள். ஒன்பதுடன் பத்து இந்திரங்கள்; ஐந்து பிராணன்; பஞ்சபூதங்கள்; பத்து விஷயங்கள்; நான்கு கரணங்கள் ஆக 43 ஆனாள்.


அவைகள்:-


 சக்திகள் ஒன்பது

இச்சா ஞானம் கிரியா சத்வம் ரஜஸ் தமஸ் பச்யந்தி மத்யமா வைகரீ


இந்திரியங்கள் பத்து

வாக்கு பாதம் கை ஆசனவாய் குறி கண் மூக்கு வாய் காது உடம்பு.


பிராணன்கள் ஐந்து 
(பார்க்க அஷ்டமாசித்திகள் பதிவு)

பிராணன் அபானன் உதானன் சமானன் வியானன்


பூதங்கள் ஐந்து


நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்


விஷயங்கள் பத்து


சத்தம் பரிசம் ரூபம் ரஸம் கந்ததம் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம்



கரணங்கள் நான்கு


மனம் புத்தி அகங்காரம் சித்தம்.



ஸ்ரீ சக்கரத்தில் 9 ஆவரணங்கள் உள்ளன அவைகள்....



ஸ்ரீ சக்கரத்தின் முதல் சதுர வடிவமாக மூன்று கோடுகளை திரைலோக்கிய மோகன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது.



இரண்டாவது பதினாறு தளம் உடையது ஸர்வா சாபரி பூரகம் என்று அழைக்கப்படுகிறது.


மூன்றாவதாக எட்டுதளம்  சர்வ ஸம் க்ஷோபண சக்கரம்  என்று அழைக்கப்படுகிறது.


நான்காவது பதினான்கு கோணம் உடையது சர்வ சௌபாக்கியதாயக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது.


ஐந்தாவது வெளி பத்து கோணம் உடையது ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது.


ஆறாவது உள்ளபத்து கோணம் சர்வ ரக்ஷாகரம் என்று அழைக்கப்படுகிறது.


ஏழாவது எட்டுத்திக்கும் கோணம் ஸர்வ ரோக ஹரம் என்று அழைக்கப்படுகிறது.


எட்டாவது முக்கோணம் சர்வசித்தி பிரதம் என்று அழைக்கப்படுகிறது.


ஒன்பதாவது பிந்து வடிவம் சர்வானந்தமய. இங்கு இருந்து தான் தேவியும் தேவனும் உலகை ரக்ஷிக்கின்றார்கள்.


ஒன்பது ஆவரணத்தில் உள்ள தேவதைகளின் பெயர்கள்:-


ஸ்ரீ சக்கரத்தை சுற்றி சதுரமான மூன்று கோடுகள் காணப்படும் இந்த மூன்றும் திரைலோக்கிய மோகனம் என்று அழைக்கப்படுகிறது. முதல் ரேகையில் சித்தி தேவதைகளும் இரண்டாவது ரேகையில் அஷ்ட மாதாக்களும் மற்றும் மூன்றாவது ரேகையில் முத்தரக் தேவிகளும் உள்ளனர்.




                                                                                 
                                                                       மூன்று கோடு (பிரகாரங்கள்)



                           சதுர வடிவு (மூன்று பிரகாரங்கள்)


த்ரைலோக்ய மோகன சக்கரம் முதல் ரேகை (வெளிக்கோடு):-


மூன்று நாற்சதுரமாய் அமைந்த கோடு (பிரகாரங்கள் அல்லது ரேகை)





முதல் கோட்டில் பத்து சித்தி தேவதைகள் உள்ளன அவைகள்;
அணிமா; மகிமா; லகிமா; ஈசித்வம் ; வசித்வம்; ப்ராகாம்யம் ; புத்தி ; இச்சா; பிராப்தி ஸர்வகாம இவர்கள் வாசம் செய்கிறார்கள். இதன் நிறம் வெள்ளை.



த்ரைலோக்ய மோகன சக்கரம் இரண்டாவது கோடு (நடுக்கோடு)



                             
                                                                                                நடுக்கோடு


அஷ்ட மாதாக்கள் வாசம் செய்கிறார்கள் அவர்கள் பெயர்;


பிராமி மகேஸ்வரி கௌமாரி வைஷ்ணவி வாராகி மஹந்திரி சாமுண்டா மகாலட்சுமி. இவர்கள் பலவித ஆயுதங்களை கொண்டவர்களாக காட்சி தருவார்கள். இவர்கள் அருளால் மன கட்டுப்பாடு உண்டாகும். காமம் குரோதம் மோகம் லோபம் மதம் புண்ணியம் பாவம் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதன் நிறம் சிவப்பு.


த்ரைலோக்ய மோகன சக்கரம் மூன்றாவது கோடு (உள் பக்க கோடு):-




                                                                                           உள்பக்க கோடு



ஸர்வஸம்க்சோபிணீ

ஸர்வவித்ராவிணீ

ஸர்வகர்ஷிணீ

ஸர்வசங்கரிஷிணீ

ஸர்வோன்மாதிணீ

ஸர்வமஹாங்குசா

ஸர்வகோசரீ

ஸர்வயோனீ

ஸர்வத்ரிகண்டா



பத்து முத்ரா தேவிகள் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் கிழக்கு திசையிலிருந்து பிரதக்ஷ்ணமாய் அங்கு வசிக்கிறார்கள். இவர்களை வழி படுவதால் முத்ரா சித்தி கட்க சித்தி லோக சித்தி என்று பல சித்திகளை அடையாளம்.......(அடுத்த பதிவில்)




திருக்கடவூர் அபிராமி அம்மை ஸ்தோத்திரம்:-




 

மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டி நின் செங்கமல விழியருள்
வரம் பெற்ற பேர்களன்றோ?
செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்தில் லுற்றுச்
செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்று மிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர் முகத்து ஐராவதப் பாக ராகி நிறை
புத்தேளிர் வந்து போற்றிப்
போகாதே வேந்திரன் எனப்புகழ் விண்ணில்
புலோமிசையொடுஞ்சு கிப்பர்
அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுத சீர் ஒருபாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி ! அபிராமியே !!

                                                                                                                       ....3


மறிகடல்கள் ஏழையுமந் திகிரிஇரு நான்கையும்
மாதிரிக் கரியெட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையுமோர்
பொறியரவு தாங்கிவரு ரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்
பூ மகளை யுத்திகிரி மாயவனையும்
அரையிற்
புலியாடை உடையானையும்
முறைமுறைக ளாயீன்ற முதியர்களாய்ப் பழமை
முறைகள் தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றதேது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர் தம் ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுத சீர் ஒரு பகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே

                                                                                                                     .‌‌‌‌‌‌.....4


வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்