இரண்டாவது ஆவரணம்
முதல் ஆவரணத்தில் த்ரைலோக்ய மோகன என்று சொல்லக்கூடிய சதுர வடிவு கொண்ட மூன்று கோடுகளை பற்றி பார்த்தோம். இரண்டாவது ஆவரணத்தில் ஸர்வாசாபரி பூரகம் பதினாறு தளங்கள் கொண்டது. இதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பதினாறு தளக்கமலம்
ஸர்வாசாபரி பூரக சக்கரம்:-
பதினாறு தளம் உடைய இரண்டாவது சக்கரத்தில் நித்திய கலாதேவி எனப்பெயர் கொண்ட பதினாறு சக்திகள் வாசம் செய்கிறார்கள். இவர்களை குப்தயோகினி என்று அழைக்கப்படுகிறது. குப்தயோகினி என்றால் மறைந்து உள்ளவர்கள் என்று பொருள் அதாவது ஸ்தூல சரீரத்தின் வழியில்லாமல் சூட்சமமாக வெளிப்படுகிறார்கள்.
உயிர் காணும் கனவை சூட்சும சரீரத்தையும் அதில் உண்டாகும் இந்த ஆவரணம் உணர்த்தும் பதினாறு தேவிகளின் பெயர்கள் பின் வருமாறு:-
காமாகர்ஷிணி
புத்தி அஹாஸ்ணி
அங்காரா கர்ஷிணி
ஸப்த கர்ஷிணி
ஸ்பர்சாகர்ஷிணி
ரூபாகர்ஷிணி
ரஸாகர்ஷிணி
கந்தாகர்ஷிணி
சித்தாகர்ஷிணி
தைர்யாகர்ஷிணி
ஸ்ம்ருத்யாகர்ஷிணி
நாமகர்ஷிணி
பீஜாகர்ஷிணி
ஆத்மாகர்ஷிணி
அம்ருதாகர்ஷிணி
சரீராகர்ஷிணி
மூன்றாவது ஆவரணம்
எட்டு தளக்கமலம்
ஸர்வ ஜனம் ஷோபண சக்கரம்
எட்டு தளம் உடைய மூன்றாவது சக்கரத்தில் 8 சக்திகள் வசிப்பதாக சொல்லப்படுகிறது அவர்கள் திரிபுரசுந்தரி நாயகியாக பாவித்து அவளை தியானித்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
8 சக்திகளின் பெயர்கள் பின்வருமாறு:-
அனங்க குமனே
அலங்க மேகலா
அனங்க மதனா
அனங்க மதனா துரா
அனங்க ரேகா
அனங்க நேகினி
அனங்க மாலினி
மேற்படி பெயர் கொண்ட எட்டு சக்திக்கும் குப்த தரயோகினி என்று பெயர் திரிபுரசுந்தரி சகரேஸ்வரி சர்வா ஹாஸனி மூதாராதேவி பரிபாலயம் ஸ்வர்ண ஸம்ஷோபண சக்ரம் என்று பெயர்.
நான்காவது ஆவரணம்
பதினான்கு கோணம்
ஸர்வ ஸெளபாக்ய தாயகம்
இந்த நான்காவது ஆபரணம் 14 குணத்தை உடையது இதில் 14 சித்த சக்தி தேவதைகள் வசிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சித்த சக்திக்கு சம்பிரதாய யோகினி என்று பெயர்.
இவர்களை வழி படுவர்களுக்கு பரமேஸ்வரன் தானாகவே வந்து அல்லது குழுவாகவோ வந்து ஞானத்தை அருள்வார் என்று நம்பப்படுகிறது அதனாலேயே சம்பிரதாய யோகினி என்று பெயர் ஏற்பட்டது.
பதினான்கு லோகங்களில் சூட்சம இயக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நமது சரீரத்தில் உள்ள 14 நாடிகளின் துடிப்பையும் எடுத்துக் காட்டுகிறது இந்த சக்கரம்.
14 தேவதைகளின் பெயர்கள் பின்வருமாறு:-
ஸர்வ ஸங்க்ஷோபிணி
ஸர்வ வித்ராவிணி
ஸர்வ கர்ஷிணி
ஸர்வ ஹ்லாதினி
ஸர்வ ஸம்மோஹிணி
ஸர்வ ஸ்தம்பிணி
ஸர்வ ஜ்ரும்பிணி
ஸர்வ சங்கரி
ஸர்வ ரஞ்ஜிநீ
ஸர்வோன்மாதிணி
ஸர்வார்த்த ஸாதினி
ஸர்வஸம்பத்தி பூரணி
ஸர்வமந்த்ரமயி
ஸர்வத்வந்த் வக்க்ஷயங்கரி
கர்புவாஸினீ சகரேஸ்வரி ஸர்வ வஸங்கரி முத்ரா தேவி பரிபாலனம்.
ஐந்தாவது ஆவரணம்
வெளி பத்து கோணம்
ஐந்தாவது ஆவரணத்தில் 10 காண முடியாது இதில் 10 சக்திகள் வசிக்கின்றனர். இந்தப் பத்து சக்திகள் பரிவார தேவதைகளாக உள்ளனர் இவர்களுக்கெல்லாம் நாயகி சக்ரேஸ்வரி என்று அழைக்கப்படும் திரிபூரா ஸ்ரீ.
பரம புருஷார்த்தத்தை அளிப்பதால் இதற்கு சர்வார்த்த சாதக சக்கரம் என்று பெயர் ஏற்பட்டது.
ஸர்வாத்த ஸாதக சக்கரம்
10 சக்திகளின் பெயர்கள் பின்வருமாறு:-
ஸர்வ ஸித்திப்ரதா
ஸர்வ ஸம்பத்ப்ரதா
ஸர்வ ப்ரியங்கரி
ஸர்வ மங்களகாரிணி
ஸர்வ காமப்ரதா
ஸர்வ துக்கவிமோசினி
ஸர்வ ம்ருத்யுப்ரசமணி
ஸர்வ விக்னநிவாரணி
ஸர்வாங்க சுந்தரி
ஸர்வஸௌபாக்யதாயிணி...
(அடுத்த பதிவில்)
வாடாமல் உயிர் எனும் பயிர் தழைத்து ஓங்கி வர
அருள் மழை பொழிந்து இன்ப
வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால்
வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல் குஞ்சரக்
கூட்ட முதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக்
குறையாமலே கொடுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுனதர பந்தி பூக்கும்
நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்றோதும்
நீலியென்று ஓதுவாரோ?
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்கு புகழ்
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுத சீர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி ! அபிராமியே !!
......5
பல்குஞ்சரந் தொட்டெறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் உங்கள் எடை
பட்டதே கேக்கும் ஆன்றுற்பவித் திடூகரூப்
பையுறு சீவனுக்கும்
மலக்குடல் சராசரப் பொருளுக்கு இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கு மியாவாக்கும் அவரவர்
மனச் சலிப்பு இல்லாமலே
நல்குந் தொழிற் பெருமை உண்டா யிருந்து மிகு
நவ நிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமையின் சிறியனா னால்அந்
நகைப்புனக்கே அல்ல வோ?
அல்கலந் தும்பர்நா டனவெடுக் குஞ்சோலை
ஆதி கடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே !!
....6
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்