சர்வம் சக்தி மயம் - 4 (ஸ்ரீ சக்கர அமைப்பு-3)


ஆறாவது ஆவரணம்



உள் பத்து கோணம்


ஸர்வ ரக்ஷா கரம்


ஆறாவது ஆவரணத்தில் உள் பத்து கோணம். இதில் பத்து சக்தி‌ வசிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆவரண சக்திகளுக்கு நிரகர்ப்ப யோகினிகள் என்று பெயர். சித்சக்தி ஆகையால் இப்பெயர் ஏற்பட்டது. இருதய குகையில் ரகசியமாக இந்த யோகினிகள் இருக்கின்றனர். இதன் சக்ரேஸ்வரி திரிபுராமாலினி ஆகும்.





 10 சக்திகளின் பெயர் பின்வருமாறு:-


ஸர்வஜ்ஞா

ஸர்வசித்தி

ஸர்வைச்வர்யப்ரதா

ஸர்வஜ்ஞானமயீ

ஸர்வவ்யாதிநிவாரணி

ஸர்வாதாரஸ்வரூபா

ஸர்வபாபஹரா

ஸர்வாநந்தமயீ

ஸாவரக் ஷாஸ்வரூபிணி

ஸர்வேப்ஸிதபலப்ரதா


இதன் அதிதேவதை த்ரி புரமாலினி ஸர்வமஹாங்கு சமுத்ரதேவி பரிபாலனம்.



                                    ஏழாவது ஆவரணம்


எட்டு திக்கு கோணம்


ஸர்வ ரோஹ ஹரம் சக்கரம்


இந்த ஏழாவது ஆவரணம் எட்டு கோணம் உடையது. எட்டு சக்திகள் இங்கே வாசிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் ரகசியமாக மறைந்திருப்பதால் இந்த  தேவதைகளுக்கு ரகசிய யோகினி என்று பெயர் எல்லா நோய்களுக்கு அடிப்படை அஞ்ஞானமாகும். இவர்களை வழிபட்டால் அஞ்ஞானம் நீங்கி எல்லா யோகமும் பெற்று யோகம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.





எட்டு சக்திகளின் பெயர்கள் பின்வருமாறு:-



வசிநீ

காமேச்வரீ

மோதிநீ

விமலா

அருணா

ஜயநீ

ஸர்வேஸ்வரீ

கௌலிநீ



                                   எட்டாவது ஆவரணம்


முக்கோணம்


ஸர்வ ஸித்தி பிரதம்





இந்த எட்டாவது ஆவரணம் முக்கோண வடிவம் உடையது ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள முக்கோணம். முக்கோணத்துக்கு அஷ்டகோணத்திற்கும் இடையில் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மேல் பக்கத்தில் மூன்று நாற்கோணங்கள் உண்டு. இதில் எண்ணற்ற ஆயுத தேவதைகளும், நித்யைகளும், குருமார்களும் வசிக்கின்றனர். இவைகளில் முக்கியமான அங்கம், பாசனனூர், மாணம் ஆக எட்டு ஆயுதமும் பதினாறு நித்ய கலா தேவிகளும், மூன்று குருநாதர்களையும் இங்கு வசிப்பதாக சொல்லப்படுகிறது. 



அதாவது முக்கோணத்தின் மேல் பாகத்து இடைவெளியில் ஒரு மண்டலம், பக்கவாட்டில் ஆயுத மண்டலம், முக்கோணத்தின் கோடுகளில் முறையே ஐந்து ஐந்தாக மூன்று புறமும் அவற்றின் பெயர் மஹாகாமேசி, மஹாவஜ்ரேச்வரி, மஹாகமாலிநீ ஆகிய தேவதைகள் வசித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.



                           ஒன்பதாவது ஆவரணம்


பிந்து


சர்வானந்தா மய சக்கரம்



இந்த ஒன்பதாவது அவரணம் பிந்து என்று சொல்லப்படுகிறது. அந்த பீடத்தில் மஹா திரிபுரசுந்தரி காமேஸ்வரன் இடது தொடையில் அமர்ந்து ஆனந்தமாய் காட்சியளிக்கும் மகா திரிபுர சுந்தரி தேவி சக்கர ஈஸ்வரி யோனிகள் பராபராதி ஹஸ்ய மோகினி என்று பெயர்.


                                                                                                                             (அடுத்த பதிவில்)



திருக்கடவூர் அபிராமி அம்மை ஸ்தோத்திரம்:-









நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய் 
நியமமுடன் முப்பத் திரட்டும் வளர்க்கின்ற
நீமனைவியாய் இருந்தும்
வீடு வீடுகடோறும் ஓடிப் புகுந்து கால்
வேற்று இலச்சையும்போய்
வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைகோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்து நின்று
உன்மத்தனாகி அம்மா
உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந் தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
ஆதி கடவூரின் வாழ்வே !
அமுத சீர் ஒரு பாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி !அபிராமியே !!

                                                                                                   .....7




ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினிலற் போய்
நடுவினிலிருந்து வந்தடிமையும் பூண்டவர்
 நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனதுநானெ மானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறகப்பு தைத்து நெஞ்சு
இருளற விளக்கேற்றிய
ஆனந்தமான விழி அன்னமே உன்னை என்
அகத்தாமரை ப்போதிலே
வைத்து வே றேகவலை யற்றுமே றுற்றபர
வசமாகி  அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்
ஆதி கடவூரின் வாழ்வே !
அமுத சீர் ஒரு பாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி !அபிராமியே !!


                                                                                                   .......8



வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்