சகல தோஷம் மற்றும் திருஷ்டி விலக வேப்பிலையால் மந்திரிக்கும் முறை:-
முக்கியமாக குழந்தைகளுக்கு திருஷ்டி விலகுவதற்காக வேப்பில்லையால் மந்திரிப்பார்கள்.
மந்திரம்
"ஓம் நமோ நமசிவாய வா வா வசிய வசிய யநமசிவா வங் சிங் யங் சர்வ ஓங்காரி சக்தி சக்தி மஹாசக்தி சத்ரு சங்கார றீங்காரி வா வா ஏவல் பில்லி சூனியம் விலக விலக வாழா ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சிவ சில"
இந்த மந்திரத்தை 108 உரு வீதம் ஒன்பது நாள் செபிக்க சித்தியாகும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீர் கொண்டு அதில் ஒன்பது வேப்பில்லை கையில் வைத்துக்கண்டு மேலே கூறிய மந்திரத்தை ஒன்பது முறை கூறிவேப்பிலையை சுழற்றி தண்ணீரை மந்திரிக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை தோஷம் உள்ள குழந்தையின் முகத்தில் தெளித்து வாயினால் ஊத வேண்டும் இதுபோல் 3 முறை செய்யவும்.
இப்படியாக அதிகாலையில் மூன்று நாட்கள் செய்து வந்தால் குழந்தை ஆரோக்கியம் அடையும்.
பயந்த பிள்ளைகளுக்கு யந்திரம் கட்ட
யந்திரம்
மூல மந்திரம்
"நம் மங் சிங் மங் ஓம் நம"
1008 உரு
பூஜாவதி
வெள்ளிக்கிழமை காலையில் சுக்கிர ஓரையில் அதாவது 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்படி யந்திரத்தை செம்பு அல்லது வெள்ளி தகட்டில் எழதி கொள்ள வேண்டும். அதற்கு பழம் தேங்காய் அவல் கடலை சுண்டல் வைத்து தீபம் ஏற்றி மேலே சொன்ன மந்திரத்தை ஜெபித்து பயந்து போன குழந்தைகளுக்கு கட்டி விட சுபம் உண்டாகும்.
வியாபாரம் வெற்றி பெற
மந்திரம்
"ஓம் வால கணபதி வசிய கணபதி வல்லப கணபதி ஆதி கணபதி சக்தி கணபதி சங்கர கணபதி கணபதி ஆனந்த கணபதி யங் நங் மங் சிஙா வங் வாவாகணபதி வந்தெனக்கருளி சிவயநமவென சித்துகளாட என்னைக் பார்ப்போர் என் சொல் கேட்டு வசமாக வங் சிங் மங் சங் யங் சிவா நமசிவய சுவாஹா"
பூஜாவிதி
மேலே சொன்ன மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று 108 முறை சொல்லி ஒரு மண்டலம் சொல்லி வர மந்திரம் சித்தியாகும். பிறகு வியாபார ஸ்தலத்தில் ஒரு சொம்பில் சுத்தமான நீருடன் பன்னீரை கலந்து மா இலை கொண்டு தெளிக்கவும். தெளிக்கும் முன்பு 9 முறை மந்திரத்தை சொல்லி பிறகு தெளிக்க வேண்டும். வியாபாரம் சூடுபிடிக்கும்.
விபூதி வசியம்
வெள்ளை குண்டுமணி வேர் மற்றும் அதன் இலைகள் வெள்ளை பூல வேர் அதன் இலைகள் வெள்ளை ஏருக்கன் வேர் அதன் இலைகள் ஈஸ்வர மூலிவேர் அதன் இலைகள் சம அளவு எடுத்து காயவத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் அதோடு விபூதி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மந்திரம்
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐயும் கிலீம் சவ்வும் ஸ்வாஹா"
1008 உரு
நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் எண்ணிய காரியங்கள் எளிதாக நடக்கும்.
செல்வம் அல்லது பணம் நிலைத்து இருக்க தாந்திரிக ரகசியங்கள்
எந்த விஷயத்துக்காக பணத்தை செலவு செய்ய நேர்ந்தால் செலவு செய்யும் பணத்தை கையில் வைத்து இதயத்துக்கு நேராகப் பிடித்து பிறர் அறியாதவாறு ஓம் ரீங் நம ஆயிரம் ( லட்சம் என்று கூட சொல்லலாம்) மடங்காக திரும்பி வா வசி வசி என்று மூன்று முறை சொல்லி செலவு செய்யவேண்டும்.
ஏலக்காய் கிராம்பு பட்டை மூன்றையும் பொடி செய்து அதனுடன் பச்சை கற்பூரம் கலந்து ஒரு துணியில் மடித்து மணி பர்சில் அல்லது சட்டைப் பையிலோ எப்பொழுதும் வைத்து இருந்தால் பணம் பெருகி வரும்.
முக்கியமான காரியங்கள் பணம் சம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை ஓம் ரீங் வசி வசி ஓம் சக்தி அருள்வாய் போற்றி போற்றி என ஒன்பது முறை உச்சரித்து உடன் எடுத்துச் சென்றால் போகிற காரியம் வெற்றி அடையும்.
பணம் வைக்கும் பெட்டியில் பச்சை கற்பூரம் ஏலக்காய் பட்டை கிராம்பு இவர்களை ஒரு வெள்ளைத்துணியில் மூட்டை கட்டுவது போல் கட்டி பெட்டியில் வைத்தால் செல்வம் பெருகும்.
கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வீட்டில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் விலகி ஓடும் பண தடைகள் இருந்தால் விலகிவிடும்.
வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.
ஊறுகாய் ஊறும் காய் என்று சொல்வார்கள் ஆதலால் எல்லாவிதமான ஊர்களையும் வீட்டில் வைத்திருந்தால் குபேரன் சம்பத்து கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மொச்சை சுண்டல் மற்றும் அதிரசம் மகாலட்சுமிக்கு நெய்வேத்தியம் செய்து பூஜை செய்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டால் பணப்பிரச்சனை தீரும் பணப் புழக்கம் ஏற்படும்.
ரூபாய் தாளை எப்பொழுதும் சுருளாக சுருட்டி பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் பணம் பெருகும்.
பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்