கீழே கொடுக்கப்பட்டுள்ள துர்க்கை யந்திரத்தை ஒரு செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து தாயத்தில் அடைத்து வலது கையில் கட்டிக் கொண்டாலும் அல்லது பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து கொண்டாலோ பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் வறுமை ஒழியும்.
யந்திர சுத்தி செய்யும் முறை
எழுதிய யந்திரத்தை முதலில் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு திருமஞ்சனம் கொண்டு கழுவித் தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.
பிறகு பன்னீர், பால், இளநீர், பஞ்சாமிருதம் போன்றவற்றில் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பறகு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி கொண்டு பொட்டு வைக்க வேண்டும்.
மந்திரம்
ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமாரி தீமஹி
தன்னோ துர்கி; ப்ரசோதயாத்
(ஒன்பது முறை சொல்லவும்)
நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே
நமஸ்தே ஜகத் வ்யாபிகே விஸ்வரூப
நமஸ்தே ஜகத் வந்த்ய பாதாரவிந்தே
நமஸ்தே ஜகத்தாரணி த்ராஹி துர்கே!!
நமஸ்தே ஜகச்சிந்த்யமானஸ் வரூபை
நமஸ்தே மஹாயோகினி ஜ்ஞானரூபே
நமஸ்தே சதானந்த நந்தஸ்வரூபே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்கே!!
(விசுவஸார தந்திரம்- 9 முறை ஜெபிக்கவும்)
மூல மந்திரம்
"ஓம் ஹரீம் தும் துர்கா தேவீம் சரண்
மஹம்ப் ரபத்யே ஹ்ரீம் தும் ஹீமாபட் ஸ்வாஹா"
உரு - ஒரு லட்சம்
பூஜா விதி
ஒரு தட்டில் மலர்களை தூவி இந்த துர்க்கா யந்திரத்தை அதில் வைத்து தட்டை சுற்றி 5 அல்லது 9 மண் அகல் விளக்கு ஏற்ற வேண்டும். மல்லிகைப்பூ மற்றும் அரளிப்பூ விசேஷம்.
நிவேதனம்
வெண் பொங்கல் சுண்டல் அவல் பாயாசம் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு எலுமிச்சம்பழம் இரண்டு. பூஜை முடியும் வரை ஊதுபத்தி அல்லது சாம்பிராணி புகை இருப்பது அவசியம்.
இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் கடைசி நாள் பூஜையின் போது 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் வேண்டும். அதன் பின்பு யந்திரத்தை தாயத்தில் அடைத்து கையில் கட்டிக் கொள்ள வேண்டும் அல்லது பிரேம் செய்து பூஜை அறையில் வைத்து கொள்ளலாம்.
பலன்
பொருளாதாரம் மேன்மை அடையும்.
வறுமை நீங்கும். சகல சௌபாக்கியம் ஏற்படும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்