லிங்கச் சக்கரம்




"அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விடத்து மேலே வளியுறகா கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே"


பொருள்:-


"அ"விட்டு வைத்தங்கு "அர'விட்டு மேல் வைத்து - கீழ்பகுதியில் "அ" வைத்து இடைப்பகுதியில் "அர" எனவும் அதற்கு மேலாக

"இ"வ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் - "இ"வைத்துப்பர்த்தால்
 சிவலிங்க சொரூபமாக காணமுடியும்.

"ம"வ்விட்டு மேலே வழிமுறைகள் கண்டபின் -   (மகரம் என்றால் தொண்டை) தொண்டை குழியை விட்டு உச்சி மேலே பிராணன் செல்வதை உணர்ந்தால்

"தொ"ம்மிட்டு நின்ற சுடர் கொழந் தாமே - தொம் என்றால் கழைக்கூத்து வகையில் ஒன்றான ஆனந்தக் கூத்தாடும் எப்பெருமான் ஜோதி வடிவமாக காணலாம்.


இங்கு 

அ       -  அறிவையும்

அர    -  ஆற்றலையும்

இ      -  இன்பத்தையும் குறிக்கிறது.






விளக்கம்


திருவருட் குறியாம் சிவலிங்கத்தின் சிறப்பு அருவம் உருவம் என்னும் இரண்டும் கலந்த நிலைஇந்த திருவடிவம் அடிப்பகுதியை எனவும் நடுப்பகுதி எனவும் முடிப்பதில் எனவும் எழுத்துருவில் சக்கரமாக அதாவது யந்திரமாக அமைத்துக்கொண்டு வாசியோகம் மூலம் தியானம் அதாவது தொண்டைக் குழியிலிருந்து மூச்சை மேல்நோக்கி கபாலத்தில் (தொம் தொம் என்றால் - "ஓம்") என்று முட்டினால் இறைவனின் ஆனந்தக் கூத்து காணமுடியும்.



வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்