சாம்பவி மண்டலச் சக்கரம்,



"சாம்பவி மண்டலச்சக்கரமஞ் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே".

                                                                                                                       
                                                                                                                         (திருமந்திரம்)


பொருள்:-









சாம்பவி மண்டலச் சக்கரம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் எட்டு இதழ் தாமரை வடிவம் கொண்டதாக அமைக்கப்படுவது மேலானதாகும். அதில் காணப்படும் நான்கு இதழ்களில் ஒலி, ஒளி, சக்தி, சிவம் என்னும் நான்கும் பொருந்தி நிற்கும். கண் போன்றது விந்து வாகும். இந்த உண்மையை கண்ட பெரும் பதம் நாம் அடைந்தால், நம்மை உலகம் அறியும். நாம் உலகறிந்தோராக இருப்போம்.



விளக்கம்:-


சாத்துவி,சாம்பன் என்றால் சிவபெருமானை குறிக்கும். சாம்பவி என்றால் பார்வதிதேவி குறிக்கும். சிவசக்தி நிலையையும் குறிக்கும். தாயுமானவர் அதாவது அம்மையப்பனாக விளங்கும் ஆற்றலே சாம்பவி. பீடம் சக்தியாகவும் பாணம் சிவமாகவும் இணைந்த நிலையை குறிப்பதே சாம்பவி சக்கரமாகும்.








"நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோல்டன் வீதியுங் தொடர்ந்துள் இரண்டட
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நாலைந் திஞவகை யாமே‌"


                                                                                                                                               (திருமந்திரம்)

பொருள்:-


எல்லோருக்கும் நன்மை தரும் இந்த சக்கரம், கோணல் இல்லாமல் இரண்டு பக்கமும் வீதிகள் அமைத்து எட்டு இதழ்கள் உள்ள பதினாறு பக்க வீதிகளும், நடுவிலும், நான்கு மூலைகளும், அவற்றினிடையே நான்கு இடம், பின் நடு இடம் ஒன்றும், அமைக்க வேண்டும். விந்து ஒன்று. சுற்றி இரண்டாம் விதி  எட்டு. மூன்றாம் விதி பதினாறு என்று அமைத்து, சாம்பவி மண்டலச் சக்கரம் அமைக்க வேண்டும்.


விளக்கம்:-


சாம்பவி சக்கரத்தை அமைக்க 8×8 கட்டங்கள் மேலும் கீழும் வரும்படியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.





மையப்பகுதியில் விந்து, நாதம், சக்தி, சிவம் என்னும் மையப்பகுதியில் வரும் நான்கு கட்டங்களில் எட்டு இதழ் தாமரையை வரைந்து கொள்ள வேண்டும்.






மொத்தமுள்ள 64 கட்டங்களில் வடக்கு  2 x 3 = 6 உள்ள நீள கட்டங்களை வீதியாக விடவண்டும். அதுபோல் தெற்கிலும் அதே சம அளவில் விதிகளாக விட வேண்டும். பின்னர் மீதியுள்ள கட்டங்களை சம பகுதிகளாக பிரித்து அதில் நான்கு சிவலிங்கங்களை நேராக இரண்டும் தலைகீழாக இரண்டும் வரும்படி வரைதல் வேண்டும் (பார்க்க வரைபடம்)







மற்றொரு முறை:-


சில அடியார்கள் சாம்பவி மண்டலச் சக்கரம் வேறு விதமாக சக்கரம் அமைக்க வேண்டும் என்று விளக்கம் தருகிறார்கள். அதையும் கீழே பார்க்கலாம்..... 







முதல் சிவலிங்க ஒளி வீதி தலை தெற்குப் பகுதியாக வடமேற்கு மூலையிலும்; இரண்டாம் சிவலிங்கம் வீதி தலை மேற்குப் பகுதியாக வட கிழக்கு மூலையிலும்; மூன்றாம் சிவலிங்க வீதி தலை வடக்குப் பகுதியாக தென்கிழக்கு மூலையிலும்; நான்காம் சிவலிங்க வீதி தலை கிழக்குப் பகுதியில் தென்மேற்குப் வீதியிலும் அமைக்க வேண்டும்.



இந்த இரண்டு முறையிலும் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துசெம்பு அல்லது வெள்ளி தகட்டில் வரைந்து முறைப்படி வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உலகம் முழுவதும் அறியப்படுகின்ற பெரிய கீர்த்தி கிட்டும்.


வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்