ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணம் ஒரு பார்வை
முதல் ஆவரணம் சதுரவடிவ மூன்று கோடுகள்.
இதன் பெயர் த்ரைலோக்ய மோஹன ம்.
இரண்டாவது ஆவரணம் பதினாறு இதழ்கள்:-
இதன் பெயர் ஸர்வாசாபரி பரிபூரகம்.
மூன்றாவது ஆவரணம் எட்டு இதழ்கள்:-
இதன் பெயர் ஸர்வ ஸம்ஷோபணம்.
நான்காவது ஆபரணம் பதினாறு கோணம்:-
இதன் பெயர் சர்வ சௌபாக்ய தாயகம்.
ஐந்தாவது ஆவரணம் வெளி பத்து கோணம்:-
இதன் பெயர் சர்வார்த்த சாதகம்.
ஆறாவது ஆவரணம் உள் பத்து கோணம்:-
இதன் பெயர் ஸர்வ ரக்ஷா கரம்.
ஏழாவது ஆவரணம் எட்டு திக்கு கோணம்:-
இதன் பெயர் ஸர்வரோக ஹரம்.
எட்டாவது ஆவரணம் முக்கோணம்:-
இதன் பெயர் சர்வ சித்தி பிரதம்
ஒன்பதாவது ஆவரணம் பிந்து:-
இதன் பெயர் சர்வானந்தமயம்.
எண்ணிலடங்கா ரகசியங்கள் கொண்டதுதான் ஸ்ரீ சக்கரம். இந்த ஸ்ரீ சக்கரத்தை அம்பாளாக பாவித்து எவரொருவர் அவளை தியானம் அல்லது வழிபாடு செய்து வருகிறார்களோ எல்லா ரகசியங்களும் உணர்த்துவாள். நம் தேவை சங்கல்பம் எதுவோ அதை நிறைவேற்றித் தருவாள்.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என்று உச்சரித்துக் கொண்டே இருந்தால் சில சக்கரங்கள் நம் கண் முன்னால் காணமுடியும். அனைத்து சக்கரங்களில் தலைமை சக்கரமாக விளங்குவது "ஸ்ரீ சக்கரம்" இந்த சக்கரம் சர்வவல்லமை உள்ளதாகும். சிவ சக்தி அருள் இந்த சக்கரத்திற்கு உண்டு இந்த சக்கரத்தை வழிபாடு செய்பவர்கள் அனைத்து சுகங்களை அனுபவிப்பர்.
ஸ்ரீ சக்கரத்தை உலோகத்தில் எழுதுவதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் அதாவது வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் எழுதுவது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும் அவள் அருளாலே ஒரே நோக்கத்தோடு எவ்வித மாற்று சிந்தனை இல்லாமல் வரைந்தால் நிச்சயமாக கைகூடும்.
ஸ்ரீ சக்கரத்துடன் சர்க்கரை பொங்கல் அல்லது அவல் பாயசம் வைத்து அன்னை பராசக்தி வழிபட நன்மை வந்தடையும்.
காராம்பசு வெண்ணையை ஒரு தட்டில் வைத்து அதில் இந்த ஸ்ரீசக்கர தகடு வைத்து பூஜை செய்து பிரசாதமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு எல்லா சுகங்களும் கிடைக்கும்.
அதுபோல் புத்திர பாக்கியம் வேண்டுவோர் இந்த எண்ணெய்யை உட்கொண்டால் கண்டிப்பாக புத்திர பாக்கியம் கிடைக்கும்.
சலதியுல கத்திலற் சராசரங் களை யீன்றி
தாயா கினா லெனக்குத்
தாயல்லவோ? யான் உன் மைந்த னன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன்
முன்தானையால்து டைத்து
பொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளாநிலா
முறுவல் இன் மூன்று கிவ்யான்
குலவி விளையாடல் கொண்டருண் மொழிந்து அங்கை
கொட்டி வாவென்று அழைத்துக்
குஞ்சரமு கன்கந்தனுக்கு இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ?
அலைகடலிலே தோன்று மாறாத ஆயுதமே!
அமுத சீர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி !அபிராமியே!!
....9
கைப்போது கொண்டு ன்பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக்கிலேன்
கண்போதினாலும் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்
முபாபோதிலா ஒருபோதும் என்மனப்போதிலே
முன்னி முன் ஆலயத்தின்
முன் போது வார்த் மதுபின்போத நினைகிலேன்
மோசமே போய் உழன்றேன்
மை போதகத்திற்கு நிகரெனப்போதெரு
மைக் கடா மீதேறியே
மா கோர காலன் வரும்போது தமியேன்
மனங் கலங்கித்தி மங்கும்
அப்போது வந்துன் அருட் போது தந்தருள்
ஆதி கடவூரின் வாழ்வே
அமுத சீர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!
.....10
மிகையுத் துரத்தவெம் பிணியுந்துரத்த
வெகுளி யான துந்துரத்த
மிடியுந்துரத்தநரை திரையும் துரத்தமிகு
வேதனை களுந்து ரத்த
பகையுந் துரத்த வஞ்சனையுமந் துரத்த
பசி யென்பதுந் துரத்த
பாவமந் துரத்த பதிமோகம் துரத்த
பல காரியம் துரத்த
நகையும் துரத்த ஊழ் வினையும் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நான் வரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் தூரத்து வானோ
அகில உலகங்களுக்கு ஆதார தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுத ஹீரோ ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி!அபிராமியே!!
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்