நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல்
சோதி மிகுதாதுமுக் காலமுந் தோன்றுமே."
(திருமந்திரம்)
பொருள்
ஆதியாகிய சிவ பரம்பொருளின் முந்தைய படைப்புத் தொழிலில் பெருகத் தண்ணருள் புரிந்தவள் திருமாலின் தங்கை நாராயணி. நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தை, அதாவது அந்த நேரிழையின் திருப்பெயராகிய "நமசிவய" என்னும் தமிழ் ஐந்தெழுத்து மந்திரத்தை முறையாக அமைக்கப்பட்ட எட்டு இதழ்கள் உடைய தாமரையில் சிவ சக்தியாகிய அவள் பெயரை அந்தத் தாமரை நடுவில் வைத்து, பல காலம் தொடர்ந்து இடைவிடாது ஜெபித்து உரு ஏற்றினால் உடம்பில் ஒளிமயமாக விளங்கும் நடந்த, நடக்கிற, நடக்கவுள்ள அதாவது திரி காலமென்று சொல்லக்கூடிய முக்காலமும் உணரும் வல்லமை அடையலாம்.
விளக்கம்
ஞானிகள் பராசக்தியை ஆனந்த வடிவினள் என்பார்கள். அவர்களே ஞானம் சுரபி என்றும் அழைப்பார்கள். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவளை இச்சைப்படியே நடக்கிறது என்பார்கள். எல்லாம் சக்தியின் ஆற்றல் சக்தி தனியே நின்று அனைத்தையும் ஏன் சிவத்தையும் ஆட்கொள்ளும் என்று திரிபுரசுந்தரியின் பெருமையை கூறுகிறார் திருமூலர். அவளை சக்கரமாக மறைந்து வழிபடுகின்றனர்.
யந்திரம்
செப்புத் தகட்டில் "ஓம்" என்னும் ஓங்காரத்தை வரைந்து நான்கு வாயிலா உடைய சதுரத்தை அமைத்து அவ்வாயில்களில் மகாலட்சுமியின் பீஜாட்சரம் "ஸ்ரீம்" என்ற எழுத்தை அமைத்து, அப்பு என்கின்ற நீர் மண்டலம் ஆகிய சுவாதிட்டானத்தில் உள்ள எட்டு இதழ் தாமர வரைந்து......
அங்கு நடுவில் "வம்"என்ற நீர் (அப்பு) மண்டலத்தின் பீஜத்தை எழுத வேண்டும். அங்கு மாகலட்சுமியுடன் திருமால் இணைந்து நிற்கும் நிலை காணப்படும் என்று இச்சக்கரம் அமைப்பை திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுகின்றார்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்