நவாக்கரி என்கின்ற அமுதேஸ்வரி சக்கரம்( வித்தை, மகிழ்ச்சி, புகழ் கிடைக்க)




மந்திரம்

"தானே எழுந்தஅச் சக்கரமஞ் சொல்லிடின்
மானே மதிவரை பாத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில் 
தானே கலந்தவரை எண்பத் தொன்றுமே."

                                                                                                           திருமந்திரம்



பொருள்:-

தனித்தன்மை வாய்ந்த இந்தச் சக்கரத்தின் பெருமைகளைச் சொல்ல வேண்டு என்றால், மதிக்கத்தக்க விதமாக குறுக்கும் நெடுக்குமாக 10 கோடுகளை வரைந்த பிறகு, வரையப்பட்ட கோடுகளுக்கு இடையே பக்கத்து அறையில் அதாவது 9 வரிசை 9 கட்டங்களாக அமைக்க வேண்டும். இப்பொழுது சக்கரத்தில் அமைந்த கட்டங்கள் எண்பத்து ஒன்றாக (9 x 9 = 81 )ஆக இருக்கும். இங்கு ரேகை என்பது கோடுகளை குறிக்கும் அறை என்பது கட்டத்தை குறிக்கும்.



விளக்கம்


சக்கரம் அமைக்கும் முறையை பற்றி திருமூலர்  எடுத்துரைக்கிறார். கீழே கொடுக்கப்பட்டுள்ள சக்கரத்தை பார்க்க......








மந்திரம்


"ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வெற்றிகொள்ள மேனி மநிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடுமஞ் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே".



பொருள்:-


முந்திய சொன்ன மந்திரத்திரபடி சக்கரம் அமைத்து, மனம் ஒன்றி உள்ளத்தின் உணர்வுகளை ஒடுக்கி மந்திரத்தை தியானிக்கின்ற போது, சக்கரத்தின் வெளிப்பக்கம் வட்டமாக பொன் நிறத்தில் இருக்க வேண்டும். கட்டங்களின் கோடுகள் சிவப்பு நிறமுடையதாகவும் கருணை வடிவான அன்னையின் குறிக்கும் அட்சர எழுத்துக்கள் பச்சை நிறம் உடையதாகவும் இருக்க வேண்டும்.



விளக்கம்


அன்னையின் அட்சர எழுத்துக்களை 81 கட்டத்தில் அதாவது அறையில்   அந்த எழுத்துக்கள் எழுத வேண்டும். அந்த எழுத்துக்கள் பச்சை நிறம் உடையதாக இருக்க வேண்டும். எழத்துக்களைப் பிரிக்கும் அறைகள் (கோடுகள்) சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.



அச்சரங்கள் எழுத்துக்கள்


"சிவ"  "சிவ "என்று சொன்னால் தீவினைகள் ஒழியும்.

சி என்றால் சிவனைக் குறிக்கும் 

என்றால் சக்தியை குறிக்கும் 

சிவ என்றால் சிவசக்தி அம்மையப்பனை குறிக்கும்.






இங்கு அன்னைக்கு உண்டான எழுத்துக்களும் போது அவைகள் பின்வருமாறு

க்ரீம் 

கிலீம்

சிரீம்

இரீம்

சௌ


ஹௌ

கௌ



இந்த ஒன்பது எழுத்துக்களை ஒவ்வொரு அறையிலும் மாறிமாறி அமைக்கவேண்டும். இந்த சக்கரத்தின் முதல் எழுத்தாக "கிலீம்" என்பதாக துவங்கி "சௌ" என்று முடிவுறும் மாறு அமைத்துக்கொள்ள வேண்டும். எழுத்துக்கள் (பீஜா அச்சரங்கள் -  ருத்திராட்சம் என்ற எனது பதிவில் காண்க) ஒன்பதும் ஒவ்வொரு பொருளைக் அதாவது சக்தியை குறிப்பதாக இருக்கும்.



பூஜா விதி முறைகள் பற்றி திருமூலர் கூறுகிறார்


"ஆகின்ற சந்தனமங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழகுநெய்
ஆகின்ற கற்பூர மாகோ சனநீருஞ்
சேர்கின்றஓன்பதுஞ் சேரநீ வைத்திட்டே"


பொருள்


குளிர்ச்சியைத் தருகின்ற சந்தனம் குங்குமம் கஸ்தூரி கோரோசனை ஜவ்வாது புனுகு பச்சைக்கற்பூரம் சாந்து ஆகிய ஒன்பது வாசனைப் பொருட்களையும் சக்கரத்திற்கு பூசி வழிபாடு செய்வாயாக என்கிறார்


விளக்கம்


இந்த ஒன்பது வாசனை திரவியங்கள் பூசும் முன்பு பன்னீர் கொண்டு சக்கரத்தை தூய்மை செய்தல் வேண்டும். அனைத்துவித யந்திர பூஜைக்கும் இது பொருந்தும்.



நிவேதனம்

இந்த நவாக்கரி சக்கரத்தை மா அல்லது வில்ல மர பலகையில் அல்லது வெள்ளி தங்கம்செம்புத் தகட்டில் வரைந்து கொண்டு மேலே சொன்ன வாசனை திரவியங்களை பூசிக் கொள்ளுதல் வேண்டும்.

ஓமத்தீ  வளர்த்து நெய்விட்டு செய்த உணவை நிவேதனமாகப் படைத்து ஆத்ம பூஜை செய்யவேண்டும் என்கிறார் திருமூலர்.



பலன்கள்

"பண்ணிய பொன்னைப் பரப்பற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எழுதிடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற்சேர்க்கலு மாமே"



பொருள்



இந்த நவாக்கரி சக்கரத்தில் ஆவாஹனம் பண்ணி பொன் போன்ற அன்னை பராசக்தியை பரபரப்பு அடையாமல் தியானித்து வழிபாடு  தொடங்கிய உடனேயே உனக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிட்டும் புகழ் உண்டாகும் வேள்விக்கும் வித்தைக்கும் தலைவனான பிரம்மனை போல் நீ விளங்கலாம் விரைவில் சிவபெருமான் அருள் கிடைக்கும் என்று சொல்கிறார்.



விளக்கம்


அன்னையை வழிபட மன அமைதி சந்தோஷம் பொன் வெள்ளி மாணிக்கக் கற்கள் எல்லாம் தாமே வந்து சேரும். பராசக்தியின் அருளும் ஞானமும் வரும் தேவர்கள் வாழ்த்து சித்திக்கும். அறியாமையால் ஈடுபட்டும் தலையான தீ வினைகளை நீக்கி வரங்கள் கிடைக்கும். யோகத்தின் முடிவில் பெறப்படும் ஒளிக்காட்சி (சிவபெருமான்) ஏற்படும்.



வாழ்க வளமுடன்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்