துன்பத்தை போக்கும் சூரிய பகவான்




"ததோ யுத்த பரிச்ராந்தம்" யுத்தம் யாரிடம் செய்ய வேண்டும்? மனதுடன் யுத்தம் செய்ய வேண்டுமா?  வறுமையுடன் யுத்தம் செய்ய வேண்டுமா?  நல்ல வேலை கிடைக்க யுத்தம் புரிய வேண்டுமா? ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு யுத்தம் புரிய வேண்டுமா? எதற்காக யுத்தம் செய்ய வேண்டும்?



ராமபிரானுக்கு யுத்தம் செய்ய காரணம் இருந்தது ராவணனுடன் யுத்தம் செய்து சீதாபிராட்டியை அழைத்து வர வேண்டும். ஆகையால் ராமபிரான் யுத்தம் செய்ய காலம் அவரை அழைத்துச் சென்றது.



"ததோ யுத்த பரிச்ராந்தம்" உலகிற்கு இன்பமூட்டும் ராமா! பெருந்தோள் படைத்தவனே! போரில் எதனால் நீ எதிரிகள் அனைவரையும் வெற்றி கொள்வாயோ, அந்த ரகசியத்தை கூறுகிறேன் கேள் என்று குறுமுனி என்று சொல்லக்கூடிய அகஸ்திய முனிவர் சொல்கிறார்.



புண்ணியம் வாய்ந்தது, எல்லாப் பகைவர்களையும் அழிப்பது, வெற்றியை அளிப்பது, அழிவற்றது, மங்களம் மிக்கது, மங்களத்துக் கெல்லாம் மங்களமாவது, பாவங்களை எல்லாம் போக்க வல்லது, கவலையையும் துன்பத்தையும் களைவது, ஆயுள் வளர்ப்பது, சிறப்புமிக்கது, கிரகங்களுடன் கூடி உதிப்பவரும் தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படும் ஒளியை தருபவரும் உலக நாதருமாகிய சூரியபகவானை பூஜைப்பாயாக என்று ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் மூலம் சூரியனை எவ்வாறு வணங்க வேண்டும் என்று மாமுனிவர் எடுத்துரைக்கிறார். மேலும்......



இவர் எல்லா தேவர்களின் வடிவமாகியவர், தேஜோமயமானவர் கிரகணங்களை புரிபவர். இவர் தேவர் கூட்டத்தையும், அசுரர் கூட்டத்தையும், உலகங்களையும் தன் கிரணங்களால் காப்பாற்றுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும், கந்தனும், பிரஜாபதியும், மகேந்திரனும், குபேரனும் காலமூர்த்தியும், எமனும், வருணனும் இவரே.



மேலும் பிதுர் தேவதைகளும், வசுக்களும், சாஸ்திரியர்களும், அஸ்வினி தேவர்களும், மருந்துக்களும், மனுவும், வாயுவும் அக்னியும், மக்களின் உயிரும், ருதுக்களைப் படைப்பவரும்,  ஒளியை தருபவரும் இவர்தான்.


பச்சை மற்றும் சப்த அதாவது ஏழு திரைகளையும் கொண்டவர், இருளை அழிப்பவர் உஷ்ணத்தால் எரிபவர் எல்லோராலும் துதிக்க பெற்றவரும், அக்னியை தம்மிடம் அடக்கி வைத்துக்கொண்டு இருப்பவரும், சாயங்காலத்தில் தணிந்தவரும், பிணியை நாசம் செய்பவரும் அதிதியின் புதல்ரும் இவரே.....


ஜெபத்தின் பயன் 


ராமா எந்த மக்களும் ஆபத்து காலங்களிலும் கஷ்டங்களிலும்  பயம் ஏற்பட்ட சமயங்களிலும் இதை (ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம்) ஓதுபவர்கள்   துன்பத்தில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்....


 ஒருமைப்பட்ட மனதுடன் தேவ தேவரும் உலகநாதர் மாகிய (சூரிய பகவான்) இவரை பூஜிப்பாயாக.....


பெருந்தோள் படைத்த ராமா இந்த க்ஷணத்தில் இந்த நொடியில் நீ ராவணனை (துன்பம்) வதைப்பாயாக என்று அகஸ்திய மாமுனிவர் உபதேசம் செய்கிறார்.


உபதேசம் பெற்ற ஸ்ரீராமர் மிகுந்த பிரியத்துடன் தன்னடக்கத்துடன் அவர் உபதேசம் செய்த மந்திரத்தை மனதில் தாரணை  (ஒருமுகபடுத்துதல்) செய்து கொண்டார்.......


அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரியபகவான் உவகை பூத்து, உள்ள களிப்புடன் ஸ்ரீ ராமரை நோக்கி ராவணவதத்தை  துரிதமாய் முடி என்ற வார்த்தையை கூறி அருள் புரிந்தார்....


ஆக, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் சொன்னால் வெற்றி நிச்சயம் என்று சொல்லப்படுகிறது.





உடம்பில் இருக்கும் பிரச்சினைகள், பணவரவு திடீரென குறைவது, திடீரென கடன் ஏற்படுவது, தீராத நோய் வந்து அவதிப்படுவது போன்ற பிரச்சனைகள் எல்லாம் சந்திக்க நேர்ந்தால் நடக்கும் திசையோ அல்லது கிரகதோஷம் ஏற்பட்டிருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளலாம். ஆக ஒரு கிரகத்தினால் பாதிக்கப்பட்டாலும் அல்லது இரண்டு மூன்று கிரகத்தினால் பாதிக்கப்பட்டாலும்  நவகிரக ஹோமம் செய்வது சிறப்பு.



சூரியபகவான்  ஆரோக்கியத்தை தருவதால் எல்லோருக்கும் கொண்டு ஹோமம் செய்வது சிறப்பு.


ஹோமம் செய்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாத வர்கள் சூரியனை வழிபடலாம்.



தினமும் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு நவகிரகங்களின் தொந்தரவு கணிசமாக குறையும் என்பது நம் முன்னோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை தான் சூரிய நமஸ்காரம் ஒரு வழிபாடாகவே இருந்துள்ளது.



"கருவமைப்பின் வழி வந்த வினைப் பதிவு சஞ்சிதமாம்
உருவெடுத்த பின் கொண்ட வினை பதிவு பிராரப்தம்
இது வகையும் கூடி எழும் புகை வினையே ஆகாம்யம்
ஒரு வினையும் வீண் போகா உள்ளடங்கிப் இன் விளைவாம்"

என்று சொல்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்களின் கூற்றுப்படி தோஷங்கள் மூன்று விதமாக பிரிக்கலாம் அவைகள்:-






சஞ்சித கர்மம்


நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களை வித்தின் தொடர்பாக பெற்றுக்கொண்டு பிறக்கிறோம். இந்தப் பதிவின் பலன் நமக்கும், நமக்கு பிறக்கும் குழந்தைகளும் அனுபவித்தே தீர வேண்டும் இந்த பதிவில் புண்ணியம் இருக்கும் பாவமும் இருக்கும். இது அனுபவித்தே தீர வேண்டும் யாரும் தப்ப முடியாது



பிராரப்த கர்மம்


புவியில் ஜெனித்த பிறகு நாம் வாழும் வாழ்க்கையில் செய்யும் நன்மை தீமைகளை பொறுத்து இவை ஆட்கொள்ளும். இதுவே பிராரப்தமாக செயல்படுகின்றது. இதற்கு பரிகாரம் உண்டு.



ஆகாமிய கர்மம்


மாயையில் மயங்கி உடல் செயல் மொழி அனைத்திலும் இச்சை உருவெடுத்து ஆற்றும் செயலே ஆகாமிய கர்மம் என்று சொல்லப்படுகிறது‌ இதற்கும் பரிகாரம் உண்டு.



நவ கிரகங்களால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் உண்டா என்று கேட்டால்? உண்டு.



நவ கிரகங்களுக்கு சாந்தி செய்துவிட்டு ஆரம்பிக்கும் எந்த ஒரு காரியமும் தடங்கல் இன்றி வெற்றிகரமாக முடியும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறார்கள். 



சூரியனுக்கு பிரீதியானவை

நிறம்.                                                                சிவப்பு 

மலர்கள்.                                                         செந்தாமரை

தானியங்கள்                                                கோதுமை

ஹோம சமித்துக்கள்                                 வெள்ளெருக்கு

உலோகம்                                                       செம்பு

நவரத்தினம்                                                  மாணிக்கம்

வஸ்திரம்                                                       சிவப்பு


சூரியனுக்கு உரியவை


அதிதேவதை                                               அக்னி

பிரத்யதி தேவதை                                     ருத்ரன்

வடிவம்                                                            வட்ட வடிவம்

தலம்                                                                சூரியனார் கோயில்

வாகனம்                                                        ஏழு குதிரை பூட்டிய தேர்



சூரியன் யந்திரம்







ஒருவர் ஜாதகத்தில் சூரியன் 7ல் இருந்தால் திருமணம் தோஷம் ஏற்படும்


லக்கினத்திற்கு ஐந்தில் சூரியன் இருந்தால் புத்திர பாக்கியத்தில் தோஷம் ஏற்படும்


இலக்கினத்திற்கு 12ல் சூரியன் இருந்தால் ஆண் வாரிசுகளுக்கு தோஷம் பஞ்சனை தோஷம்  ஏற்படும்.


சூரியன் லக்னத்திற்கு 6 8 12ல் மறைந்திருந்தாலும் அல்லது நீசம் பெற்று இருந்தாலும் மிகவும் துன்பகரமான வாழ்க்கை உண்டாகும். அதோடு கண், எலும்பு நோய்கள் உண்டாகும். 


இதற்கு சூரியனின் யந்திரத்தை செப்பு அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து தாயத்தில் அடைத்து கையில் அல்லது இடுப்பில்  கட்டி கொள்ள மிகவும் விசேஷமானது சூரியனால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். 


மேலும் ஜாதகத்தில் சூரியன் கெட்டு, சூரிய திசை நடப்பவர்கள் இந்த மாதிரி செப்புத் தகட்டில் எழுதி கட்டிக்கொண்டால் தோஷத்தில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.



சூரிய திசை சரியாக இருந்தால் அரசியலில் முன்னேற்றம் கிடைக்கும். செல்வம் கொழிக்கும். சரியில்லை என்றால் கண், வயிறு,எழம்பு போன்ற இடங்களில் கோளாறுகள் வரும்.  



தொழில் பிரச்சனை மற்றும்  பதவி நினைத்து பயப்பட வேண்டி இருக்கும். இப்படி பிரச்சனை இருக்கும் போது சூரியனுக்கு சாந்தி பரிகாரம் (ஹோமம்) செய்வது பிரச்சனைகளை தவிர்க்கலாம்.





ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி !


தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி
படைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
அடைக்கலம் கொடுப்பாய் போற்றி!!

தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தந்தாய் போற்றி !!

ஞாயிறே நலனே வாழ்க 
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி !!


                                                                                   கண்ணதாசன்


சூரிய காயத்ரி


அஸ்வ த்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்ய ப்ரசோதயாத் !!



சூரியன் ஸ்தோத்திரம்


"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி எங்கும் 
பூசுர உலகோர் போற்றும் சுகத்தை நல்கும் 
வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த 
தேசிகா எனை ரட்சிப்பாய் செங் கதிரவனே போற்றி."



"ஜபா கஸும ஸங்காசம் 
 காஸ்யபேயம் மகாத்யுதிம் 
தமோரிம் ஸர்வ பாபக்னம்                            
ப்ரனதோஸ்மி திவாகரம்."



"சீலமாய் வாழ சீரருள் புரியும் 
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி 
சூரியா போற்றி சந்திரா போற்றி 
வீரியா போற்றி வினைகள் களைவாய்"



ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் முடிந்தால் தினமும் சொல்லலாம்.



வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்