முன்னேற்றம் தரும் சந்திர பகவான்



"பித்தா பிறைசூடி"என்று எம்பெருமானை வர்ணிக்கிறார் சுந்தரர். நவ கிரகங்களில் மிகவும் அழகானவர் சந்திரன். புராணங்களில் சந்திரன் பிறப்பைப் பற்றி மூன்று விதமான கருத்துக்கள் இருக்கிறது.



சந்திரன் திருமாலின் மார்பிலே தோன்றியவன் என்பதை "சந்திரமா மனஸோ" என்ற புருஷ சூக்தம் கூறுகிறது.



மற்றொரு  வரலாற்றில் திருமாலின் மார்பில் இருந்து பிரம்மா தோன்றினார். பிரம்மாவின் மகன் அத்திரி. அத்திரியின் மகன் சந்திரன்.

 
"ஆத்ரேய கோத்ராத் பஜார் நம்"என்று சந்திரனைப் பற்றி அஷ்டோத்திரம் கூறுகிறது.


சந்திரன் மகாலட்சுமி சகோதரர் என்று நவகிரக ஸ்தோத்தில் சந்திரனை  குறித்து க்ஷிரோத்தார்ணவ சம்பவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது மகாலட்சுமிக்கு முன் தோன்றியவன் சந்திரன்‌.


நவகிரக ஸ்தோத்திர சங்கீதம் சங்கிரகம் என்ற நூலில் சந்திரனுக்கு 28 பெயர்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது இவர் தேவியின் அம்சம்.









இப்படி சந்திரனைப் பற்றி பலவிதமான புராணங்கள் கூறினாலும் அவை ஒவ்வொரு மன்வந்திரத்தில் தோன்றிய சந்திரனை பற்றியவை என்று சில விஷ்ணு புராண உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.


மன்வந்திரம் என்பது 71 சதுர் யுகங்கள் என்றும் சதுர்யுகங்கள் என்பது கிருதயுரகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று சொல்லப்படுகிறது.


தேவகுருவான பிரகஸ்பதிக்கு சந்திரன் சிஷ்யனாக இருந்தான்.
பிரகஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்கி அவரோடு போய் சேர்ந்து விட்டாள்.


சந்திரனும் தாரையின் அழகில் மயங்கி விட்டாரன் ‌‌‌‌‌‌‌.
பிரகஸ்பதி அழைத்தும் வர மறுத்து விட்டாள் தாரை. பிரகஸ்பதிக்கு கோபம் வந்துவிட்டது போர் தொடங்கினார்.


தேவகுருவான பிரகஸ்பதிக்கு அசுர குருவான சுக்ராச்சாரியார் எதிரி. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் அவர் சந்திரனுக்கு பக்கபலமாக வந்து நின்றார் அசுரகுல ஒட்டுமொத்தமாக சந்திரன் பக்கம் இருந்து போர் புரியத் தொடங்கினார்கள்.


 அதுபோல் தேவகுருவான பிரகஸ்பதிக்கு இந்திரன் தலைமையில் தேவர்கள் அணிவகுத்து போரிடத் துவஙகினார்கள் பெரிய யுத்தம் நடந்தது. இந்த யுத்தம் தாரைக்காக நடந்ததால் தாரகா என்று பெயர் பெற்றது.


இரு பக்கங்களிலும் பலமான ஆயுதங்களை ஏந்தி நடந்ததால் உலகம் அழிந்து விடுமோ என்று கவலைப்பட்டார் பிரம்மதேவர். அவர் தலையிட்டு தாரையை சந்திரனிடம் இருந்து மீட்டு பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். தாரைக்கு சிறந்த ஒளிமயமான குழந்தை பிறந்தது. பிரகஸ்பதியும் சந்திரனும் உரிமை கொண்டாடினார்கள். அச்சமயத்தில் தாரை மௌனம் சாதித்தாள். அவரின் மௌனத்தை கண்டு ஒளிமயமான பாலகனே வெகுண்டான் தாயான தாரை கடிந்து கொண்டான்.
 
அந்தக் குழந்தையின் புத்தி சாதுர்யத்தையும் மெச்சிய பிரம்மன் அதற்கு புதன் என்று பெயரிட்டார் அவனை ஒரு கிரகமாகவும் நியமித்தார்.


(ஜோதிடத்தில் புதனுக்கு சந்திரன் பகை கிரகம் ; ஆனால் சந்திரனுக்கு புதன் நட்பு கிரகம் என்று சொல்லப்படுகிறது. காரணம் தாய் தன் மகனிடம் அன்பு பொழிபவள் மகன் எவ்வழியில் பிறந்திருந்தாலும் தாயின் அன்பு மாறாது. தன் பிறப்பு பற்றி கசப்பான அனுபவம் ஏற்பட்ட காரணத்தினால் புதனுக்கு சந்திர பகவான் மீது வெறுப்பு ஆதலால் பகை)



 தேய்பிறை /வளர்பிறை.









ராஜசூய யாகம் நடத்தி சந்திரன் பெயரும் புகழும் அடைந்ததைக் கண்டு மகிழ்ந்த தட்சன், தன் இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கும் மணமுடித்துக் கொடுத்தார். இவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டினார் சந்திரன். இதனால் இவருக்கு நவகிரக ஸ்தோத்திரத்தில் ரோகினி நாயகன் என்ற பெயரும் உண்டு (ஜோதிடத்தில் சந்திர பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறார்).



சந்திரன் ரோகிணி இடம் மட்டும் அதிக காதலுடன் பழகுவதை கண்ட மற்ற பெண்கள் ஏக்கமும் பொறாமையும் கொண்டார்கள் அவர்கள் மன்றாடி பார்த்தும் சந்திரன் கேட்பதாக இல்லை எனவே அவர்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். அவரும் சந்திரனுக்கு அறிவுரை சொல்லிப் பார்த்தார் பலனில்லை. இதனால் தட்சனுக்கு கோபம் வந்தது சந்திரனுடைய அழகு அவருடைய 14 அமுதக் அலைகள் இருப்பதை உணர்ந்த தட்சன் அவைகள் படிப்படியாக குறையட்டும்  என்று சாபம் அளித்தார்.



 அழகு குறைந்து கொண்டே வருவதை கண்ட சந்திரபகவான் பிரம்மதேவரிடம் முறையிட்ட அவர் தன்னால் இயலாது என்று கூறி விட்டார், ஆனால் ஒரு யோசனையை தெரிவித்தார் பூலோகத்தில் வியாச பட்டணத்தில் அருகில் உள்ள ஜோதி லிங்கத்தை வழிபட சொன்னார். சந்திரனும் சிவனார் மனம் குளிர கடுமையான தவம் செய்ததால் சிவன் அருளைப் பெற உதவி செய்தார்.



பூமியைப் பிளந்து காட்ட உள்ள ஜோதிலிங்கம் தேனால் அபிஷேகம் செய்யப்பட்டு காட்சியளித்தது. அதன்மேல் பிரம்மா சிலையாக சோமநாத லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் சிவனும், மனமிறங்கி காட்சி கொடுத்து ஒரே ஒரு கலையுடன் இருந்த சந்திரனை தன் தலையில் அணிந்து கொண்டு சந்திரசேகரன் என்று பெயர் பெற்றார். 



அந்தக் கலை குறையாமல் காத்ததுடன் தோய்ந்து போன மற்ற கலைகள் நாள்தோறும் ஒரு கலையாக 14 நாட்கள் வளர வகை செய்தார். இக்கலைகள் வளர்வதை சுக்கில பட்சம் அதாவது வளர்பிறை என்றும் கலைகள் தேய்வதை கிருஷ்ணபட்சம் அதாவது தேய்பிறை என்றும் வழங்கலாயிற்று.



சந்திரனுக்கு உரியவை


ராசி                                                                           கடக ராசிக்கு அதிபதி

திக்கு                                                                       தென்கிழக்கு

அதிதேவதை                                                         நீர் பராசக்தி

பிரத்யதி தேவதை                                              கௌரி

தலம்                                                                        திங்களூர்/ திருப்பதி

நிறம்                                                                       வெண்மை

வாகனம்                                                               வெள்ளை குதிரை



சந்திரனுக்குப் பிரீதியானவை


தானியம்                                                              நெல் பச்சரிசி

மலர்                                                                      வெள்ளை அரளி வெள்ள அல்லி

வஸ்திரம்                                                            வெள்ளை ஆடை

ரத்தினம்                                                             முத்து

நிவேதனம்                                                        தயிரன்னம்

சமித்து                                                                முருக்கஞ் சமித்து

உலோகம்                                                           ஈயம்

வடிவம்                                                               சதுரம்



சந்திரன் யந்திரம்







ஒரு ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அதாவது கெட்டு இருந்தால் அவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்திரத்தை முறைப்படி பூஜை செய்து தாயத்தில் அடைத்து கட்டிக்கொள்ள வேண்டும் அப்படி செய்தால் சந்திரனால் பாதிப்பு குறையும்.


சரியில்லாத சந்திர திசை நடந்தால் தாயத்தை கையில் கட்டிக் கொண்டால் பாதிப்பில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம்.



சந்திரனால் ஏற்படும் தோஷங்கள்


சந்திரன் உடல் மனம் புத்தி தாயாருக்கு காரக கிரகம். எனவே சந்திரன் ஜாதகத்தில் நீச்சம் அடைந்தாலும் 6 8 12-ல் நின்று பலம் இழந்தாலும் உடல் நோய் மனசஞ்சலம் காரியங்களில் தடை தாயாருக்கு பீடை ஆகியவை ஏற்படும்.


நீர் சம்பந்தமான சளி இருமல் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். சந்திரனும் சனியும் சேர்க்கை பெற்றால் கண்டிப்பாக நோய் பாதிப்பை தரும்.


சந்திரன் செவ்வாய் சேர்க்கை சந்திரமங்கள யோகம் ஆக இருந்தாலும் விபத்து ஏற்படும் அல்லது ரத்த தோஷத்தை உண்டாக்கும்.


சந்திர பகவானே தினந்தோறும் வணங்குபவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. கன்னிப்பெண்கள் பிறையை தொழுது அன்பு செலுத்தக்கடிய நல்ல கணவன் கிடைக்க அருளுமாறு வேண்டிக் கொள்வது சங்க கால வழக்கம். மூன்றாம் பிறை பார்த்தல் அதிர்ஷ்டம் என்றும், நான்காம் பிறை பார்த்தால் துன்பம் வரும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.







சந்திர காயத்ரி


"பத்ம த்வஜாய வித்மஹே 
ஹேம ரூபாய தீமஹி 
தன்னோ ஸோம: ப்ரசோதயாத்"



"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் 
திங்களே போற்றி திருவருள் புரிவாய் 
சந்திரா போற்றி சற்குணா போற்றி 
சங்கடம் தீர்ப்பாய் சதுராய் போற்றி"



"அலைகடல் அமுதம் தன்னில் அன்று வந்து உதித்து மிக்க
கலைவளர் திங்கள் ஆகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய் மேரு 
மலைவலமாக வந்த மதியமே போற்றி ! போற்றி !"



சந்திர ஸ்துதி


"ததிஸங்க துஷாராபம் 
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸஸிநம் ஸோமம் 
ஸம்போர் மகுட பூஷணம்"



சௌந்தரிய லஹரி


"ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
நசேதேவம் தேவோ நகலு குஸல: ஸ்பந்திதுமபி !
அதஸ்தாவா மாராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வாகத மக்ருத புண்ய: ப்ரபவதி"



மேலே சொல்லியுள்ள ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் முன்னேற்றமும் கிடைக்கும். செய்கின்ற காரியங்களில் படங்கள் ஏதாவது இருந்தாலும் விலகும். சந்திர பகவானே தினமும் வணங்கினார் ஆயுள் பலம் கிடைக்கும்.


பௌர்ணமி பூஜை செய்வது தோஷத்தை குறைக்கும் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும்.



வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்