சகல சாஸ்திர ஞானம் தரும் புத பகவான்






"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" - பழமொழி.
அதற்கு ஏற்றார் போல் இவர் நன்மைகளைத் தருகிறவர்



"விதியை மதியால் வெல்லலாம்" - பழமொழி.

விதியை வெல்ல வேண்டுமானால் புத பகவானை பிரார்த்தனை செய்து வர வேண்டும்.


ஆக புத பகவான் சுப கிரகங்களுடன் சேர்ந்தால் சுப பலன்களையும் அசுப கிரகங்களுடன் சேர்த்தால் அசுப பலன்களும் கொடுப்பார்.



சகல கலைகளில் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர். கிரகங்களிலேயே சுப கிரகம் தன்னை வழிபடுவோருக்கு மிகுதியாக அறிவை கொடுப்பவர். ஞானகாரகர். இவர் வாக்கு சாதுரியம் அளிப்பவர். தீய கிரகங்கள் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உடையவர். முக்குணங்களில் சாந்த குணம் படைத்தவர்.



புதன் வரலாறு





தாரைக்கும் சந்திரனுக்கு பிறந்தவர் புதன் பகவான் தனது பிறப்பின் ரகசியத்தை தெரிந்தபிறகு (பார்க்க சந்திர பகவான் பதிவு) தன் தந்தை சந்திரன் மீது வெறுப்பு ஏற்பட்டு மேரு மலைச் சாரலை அடைந்து அங்கு குடில் அமைத்து தன்னந்தனியாக குருவின்றி கலைகளைப் பயின்று வந்தார்.



அவர் இருந்த பகுதியில் குளம் ஒன்று இருந்தது. சிவனும், பார்வதியும் நீராடும் இடமாக இருந்தது. அந்தரங்கமாக இருந்த காரணத்தினால் அங்கு யார் வந்தாலும் பெண்ணாகி விட வேண்டும் என்று பார்வதி சாபம் இட்டு இருந்தார்.



இதை அறியாத அப்பகுதி அரசாட்சி செய்த மன்னன் இளன் அந்தப் பகுதிக்கு வந்து தன் குதிரையை நீராடிவிட்டு தானும் நீராடி எழுந்தான் இளன் பெண்ணாகி விட்டான். குதிரையும் பெண் குதிரை ஆகிவிட்டது. அதிர்ச்சி அடைந்த இளன். அங்கு மலைச் சாரலில் தவம் புரிந்துகொண்டிருந்த புதனை அணுகி விளக்கம் கேட்டான், அதற்கு இது பார்வதி தேவியின் சாபத்தால் ஏற்பட்டது இதற்கு நிவர்த்தி இல்லை என்று கூறிவிட்டார்.





இளன் இனி ஆண் ஆக முடியாது என்பதை உணர்ந்து பிறகு பெண்மைக்குரிய கிளர்ச்சிகள் மேலோங்கின. புதனின் அழகில் மயங்கி புதனுடன் சேர்ந்து வாழ முற்பட்டான்.



இளன் தான் பெண்ணான விஷயத்தை வசிஷ்டரிடம் கூறிய போது அவர் கூறிய ஆலோசனைப்படி ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஈஸ்வரனும் மனமிரங்கி பார்வதியின் சாபத்தை நீக்க முடியாத வராகி ஓராண்டு ஆண் ஓராண்டு பெண் என்ற நிலையை அடைந்து இறுதிவரை வாழ வரம் அளித்தார்.




சாப விமோசனம் பெற்ற இளன் ஆணாக இருக்கும்போது தன் மனைவியுடன் கூடி வாழ்ந்தான். பெண்ணாக இருக்கும் போது புதனுடன் கூடி வாழ்ந்தாலன். இப்படி புதன் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அமைந்தன. புதன் கலைகளையும் அனைத்தும் பயின்று ஈசன் அருளைப் பெற்றார். இதனால் "வாணிஜ்ய நிபுணாய"‌‌‌ என்றும் அழைக்கப்பட்டார்.




வசிஷ்டரின் ஆலோசனைப்படி திருவெண்காடு சென்று அங்குள்ள சந்திர புஷ்கரணியில் மூழ்கி ஸ்வேதாரண்யேஸ்வரர்யும் அன்னை பெரியநாயகி நோக்கி தவம் புரிந்தார்.  இதனால் புதனுக்கு பிறப்பில் ஏற்பட்ட தோஷம் நீங்கியது.  கிரக பதவியும் கிடைத்தது.






புதனுக்கு உரியவை


ராசி                                                                         மிதுனம் கன்னி

திக்கு                                                                     வடகிழக்கு

அதிதேவதை                                                      விஷ்ணு

பிரத்யதி தேவதை                                            நாராயணன்

தலம்                                                                      மதுரை / திருவெண்காடு

நிறம்                                                                     வெளிர் பச்சை 

வாகனம்                                                              குதிரை

வடிவம்                                                                அம்புக்குறி 



புதனுக்கு பிரீதியானவை


தானியம்                                                           பச்சைபயிறு

மலர்                                                                   வெண் காந்தள்

வஸ்திரம்                                                          பச்சை நிற ஆடை

ரத்தினம்                                                           மரகதம்

நைவேத்தியங்கள்                                       பாசிப் பருப்பு பொடி பால் அன்னம்

சமித்து                                                              நாயுருவி

உலோகம்                                                        பித்தளை



புதன் யந்திரம்






ஒரு ஜாதகத்தில் புதன் பகவான் நீசம் பெற்றிருந்தால் அறிவு அல்லது படிப்பு இருக்காது. மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும். அப்படிப் பட்டவர்கள் மேலே சொன்ன யந்திரத்தை செப்பு அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து அதை வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டிக்கொள்ள அறிவு புத்தி கூர்மை படிப்பில் தேர்ச்சி ஏற்படும். புதன் திசை நடப்பவர்கள் இப்படி கட்டிக் கொண்டால் மிகவும் அனுகூலமான பலன்களை அடையலாம்.


புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள்.


புதன் வித்யாகாரகன், ஜாதகத்தில் புதன் நீச்சம் அடைந்து இருந்தாலும் அல்லது அஸ்தமனம் மறைவு ஸ்தானம் என்ற வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் தோஷம் ஏற்படும். இதனால் கல்வி முன்னேற்றத்தில் பெரிய தடை ஏற்பட்டு விடும் பேச்சு திறன் சரியாக இருக்காது



மூளை நரம்பு தொடர்பான வியாதிகள் ஏற்படும் குறைபாடுகள் தோன்றும் தாய்மாமன் வகையில் தோஷம் ஏற்படும் ஆக இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்க ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.







புதன் திசையால் கஷ்டங்கள் ஏற்பட்டால் புதன்கிழமை விஷ்ணு சன்னதி முன்பு ஐந்து நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது உத்தமம். அந்த நாட்களில் பச்சைபயிர் தானம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.



புதன் காயத்ரி


கஜ த்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி 
தன்னோ புத பிரசோதயாத்



மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள் 
சுதன்பசு பாரி பாக்கியங்கள் சுகம் பல கொடுக்க வல்லான் 
புதன் கவி புலவன் சீர்சால் பூங்கழல் 
போற்றி போற்றி!!



இதமுற வாழ இன்னல்கள் நீக்கும் 
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தருள்வாய் பண்ணொளியானே  உதவியே அருளும் உத்தமா போற்றி




புதபகவான் ஸ்துதி


ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
 ரூபேணாபாரதிமம் புதம் |
சௌமியம் ஸௌம்யா குணோபேதம் 
தம் புதம் ப்ரணமாம்யஹம் ||



சௌந்தர்யலஹரி


ஸவித்ரீபிர் வாசாம் ஸஸிமணி ஸிலாபங்க ருசிபி:
வஸிந்யாத்யாபிஸ் த்வாம் ஸஹ ஜநநி ஸந்சிந்தயதி ய:|
ஸகர்த்தா காவ்யா நாம் பந்தி மஹதாம் பங்கி ஸீபகை:
வசோபிர் வாக்தேவி வதத கமலாமோத மதுரை:

(இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை மனதுக்குள் சொல்லி புத பகவானை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் சகல சாஸ்திர ஞானம் கிடைக்கும்)


வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்