தனம் மற்றும் ஞானம் தரும் கேது பகவான்





"சர்வ வியாதி நாசகன்"  என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். கேது பகவான் செவ்வாயை பகவான் போல பலன் தரக்கூடியவர் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஐந்து தலை நாக வடிவில் தலையும் மனித உடல் உடையவர். ஞானத்தின் அடையாளமாக இவர் எப்போதும் யோகநிலையில் தான் இருப்பார். இவரை வணங்கினால் கொடும் வியாதியில் இருந்து தப்பலாம், கல்வி அறிவு கேள்வி ஞானத்தை தரக்கூடியவர்.




சிவன் பக்தி, வயிற்று வலி, சொறி, சிரங்கு, கட்டி, தோல் நோய்கள், வேத அறிவு, கழுகு, சேவல், மான் எலும்புருக்கி நோய், மருத்துவப் பணி பாட்டன் பாட்டி நாய் மாந்திரீகம் சூனியம் தத்துவம் பேசுதல் ஆன்மீக யாத்திரை வழியில் ஊழியம் கிறிஸ்துவம் வெளிநாட்டு வாசம் பாம்பு எலக்ட்ரிக்கல் கடை வேட்டையாடுதல் காயம் ஏற்படுதல் மோட்சம் முக்தி போன்றவற்றை தரக்கூடியவர் கேது பகவான்.




விநாயகர் கேது பகவான் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் விநாயகரை வணங்கி பூஜை செய்தாலும், கணபதி ஹோமம் செய்தாலும் கேதுவினால் ஏற்படும் தோஷம் விலகும்.







கேது பகவானுக்கு உரியவை



ராசி                                                                                ஆதிபத்தியம் இல்லை

திக்கு                                                                             வட மேற்கு

அதிதேவதை                                                             சித்ரகுப்தர்

பிரத்யதி தேவதை                                                   பிரம்மன்

தளம்                                                                             காளத்தி கீழப்பெரும்பள்ளம்

நிறம்                                                                            செம்மை

வாகனம்                                                                     கழுகு













கேதுவுக்கு பிரீத்தியானவை



தானியம்                                                                   கொள்ளு

மலர்                                                                           செவ்வல்லி

வஸ்திரம்                                                                  பலநிற ஆடை

ரத்தினம்                                                                   வைடூரியம்

நிவேதனம்                                                              கொள்ளுப் பொடி அன்னம்

சமித்து                                                                      தர்பை

உலோகம்                                                                துருகல்




கேது பகவான் யந்திரம்






கேது பகவான் ஜாதகத்தில் கெட்டு இருந்தாலும் அல்லது கேது திசை நடப்பவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது எந்திரத்தை வெள்ளித் தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து தாயத்தில் அடைத்து கையில் கட்டி கொள்ள கேதுவின் தோஷம் நீங்கும்.




கேதுவால் ஏற்படும் தோஷங்கள்


திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் செய்வார் செய்யாத தவறுக்கு பழி மற்றும் வழக்குகளை ஏற்படுத்துவார் லக்னத்திற்கு 12ம் இடத்தில் இருந்தால் மோட்சத்தை தருவார் அதுவே கடைசி பிறவி என்று சொல்லப்படுகிறது.



 அடுத்த பிறவி இருக்காது விபத்துக்கள் மனநிலை பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி ஸ்தானத்தைப் பொருத்து செயலின் கிரகங்கள் பொருத்து பலன்கள் அமையும் அது நல்ல நிலையில் இருந்து விட்டால் பாதிப்புகள் இருக்காது தெய்வீக சிந்தனை ஞானம் கிடைக்க வழி வகுப்பார்.



கேது பகவான் ஸ்லோகங்கள்



கேதுத் தேவே கீர்த்தித் திருவே 
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய் 
வாதம் வம்பு வழக்குகள் இன்றி 
கேது தேவே கேண்மையாய் ரட்சி



மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க்கமுதம்  ஈயும்
போது நீ நடுவிருக்க புகழும்சிரம் அற்றுப் பின்னர் 
ஓதுறும் அரச நாகத் துயர் ஐந்து பெற்ற 
கேதுவே போற்றி போற்றி!! கீர்த்தியாய் ரட்சிப்பாயே!!












கேது ஸ்துதி


பலாஸ புஷ்ப ஸங்காஸம்
    தாரக க்ரஹ மஸ்தகம் |
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
    தம் கேதும் ப்ரணமாம் யஹம் ||. 



சௌந்தரிய லஹரி


த்வதந்ய:பாணிப்யா மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா |
பயாத் த்ராதும் தாதும் பலமபிச வாஞ்ச்சா ஸமதிகம்
ஸரண்ய லோகாநாம் தவஹி சரணாவேவ நிபுணௌ ||


(தரித்திரம் வியாதிகள் பீடைகள் நிவர்த்தியாக தினமும் 11 முறை சொல்லி வரவும்)





வாழ்க வளமுடன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்