"சனி கொடுக்கும் செல்வத்தை சனியால் கூட அழிக்க முடியாது" -ஜோதிட பழமொழி
முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை எல்லாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க செய்பவர் சனி பகவான். அளவற்ற துன்பங்களை கொடுப்பவர் என்பதாலே சனி பகவான் மீது பயம் ஏற்படும்.
சனீஸ்வரர் என்று சொன்னாலே அனைவருக்கும் உள் உணர்வில் ஒரு பயம் ஏற்படும். அந்த உணர்வின் காரணமாக சனீஸ்வரர் மேல் சற்று கூடுதலான மரியாதையும் ஏற்படும். துன்பங்களை கொடுப்பதற்கு மட்டுமே சனியானவர் உள்ளார் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும், ஆனால் சனி பகவானும் நன்மையும் செய்வார். அதனால் தான் மேற்சொன்ன இரண்டு பழமொழிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சனீஸ்வர பகவான் ஒரு கண்டிப்பான ஆசிரியர் என்றும் கருணையற்ற நீதிபதி என்றும் சொல்லப்படுகிறது. தர்மம், நியாயம், நீதி ஆகியவற்றின் மறு உருவம்தான் சனீஸ்வர பகவான். நீதிமான் என்று அழைக்கப்படும் சனியானவர் துன்பங்களை கொடுப்பதில் வல்லவர்.
இந்த உலகில் சாதனையாளர்கள் பலரும் சனி பகவானின் அருளாசி பெற்றவர்கள். கடுமையான உழைப்பு விடாமுயற்சி இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் அடைய வேண்டிய லாபத்தை கண்டிப்பாக அடைந்து விடுவான். இது உலக நீதி அதனால்தான் அந்த இரண்டையும் ஒன்றாக்கி அதற்கு தகுதியானவர் சனிபகவான் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
உலக வாழ்வின் தத்துவங்களை புரிய வைக்கும் படியான நீதிமான் அல்லது ஆசிரியர் என்றே சொல்லலாம் நீதிப்படி கண்டிப்பதும் தண்டிப்பதும் வல்லவர். அவருடைய சோதனைகள், தாமதம், வேதனைகள், ஏமாற்றம், கஷ்டம், பழிவாங்குதல், குற்றம் கண்டுபிடித்தல், தந்திரம், நோய், சோம்பல், வெளிநாட்டுப் பயணம், மனக் கட்டுப்பாடு, தியாகம் என்ற வகையில் இருக்கும்
சனி பகவானின் 5 செயல்பாடுகள்
அர்த்தாஷ்டமச் சனி
ஜென்ம ராசிக்கு 4-ம் இடத்தில் சனிபகவான் வரும் போது ஏற்படுவது அர்த்தாஷ்டமச் சனி. துன்பத்தையும் துயரத்தையும் தரக்கூடிய நிலை. அர்த்தாஷ்டம சனி ஜென்ம ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பல சிரமங்கள் இருக்கும்.
கண்டச்சனி
ஜென்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் வரும் போது ஏற்படும் நிலையாகும். 7-ஆம் இடம் என்பது லக்கினத்திற்கு எதிர் ஸ்தானம் களத்திர ஸ்தானம் என்னும் இந்த இடத்தில் உள்ள போது சனி கடுமையான பாதிப்பை தருவார். மனைவி அல்லது கணவர்க்கு துன்பம், துயரம், நோய் பாதிப்புகள் அளிப்பதுடன் லக்கினத்தைப் பார்த்தால் ஜாதகரக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்துவார்.
அஷ்டமச்சனி
இந்த நிலையானது சனியின் மற்ற நிலைகளை விட கொடுமையாகவும் கடுமையையும் இருக்கும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் இரண்டரை வருடங்கள் கஷ்டங்களை கொட்டிக் கொடுத்து விடுவார். இந்த இரண்டரை வருடங்கள் சனியின் குணத்தை கண்டுவிடலாம்.
ஏழரை சனி
விரைய சனி, ஜென்ம சனி, பாதச்சனி மொத்தம் 7 1/2வருடங்கள். முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் மூன்றாவது மற்றும் நாங்காவது சுற்று மரண சனி என்றும் ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இவை அனைத்தும் பொது பலன்களே நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் எல்லா ராசிக்காரர்களும் கஷ்டம், அவமானம், வேதனைகள் அனுபவிப்பார்கள் என்று கண்டிப்பாக சொல்லிவடலாம். இதில் மாற்று கருத்தும் இல்லை.
ஒருவர் கஷ்டப்படுத்தி உலகை இச்சைகலிருந்து விலகச் செய்து ஆன்மீக வாழ்க்கை கொடுத்து அவரை தத்துவ ஞானியாக உருவாக்கி மக்களுக்கு நல்வழி காட்ட சொல்லித் தூண்டும் சனிபகவான்; சில பல கஷ்டங்கள் கொடுத்து அதன் காரணமாக இறைவனை நாடிச் செல்லும் தெய்வ பக்தியை தூண்டுவதும் சனிபகவான் தான்.
சனி பகவான் சோதிப்பது அடுத்த ஒரு நல்ல வாய்ப்பையும் வாழ்க்கையை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி தர இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு கஷ்டங்களையும் வேதனைகளின் தாங்கிக்கொண்டு செயல்படுங்கள்.
சனிதசை
19 வருடங்கள் சனி தசா காலத்தில் பாபியாக இருந்தால் கடுமையான கண்டங்கள், உடல்நிலை பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்வார். நல்ல பலனும் உண்டு.
சனிபகவான் வரலாறு
சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சனி பகவான். கால் ஊனமானதால் மெதுவாக நடந்து செல்லும் இயல்புடையவர். மெதுவாக நடப்பதால் இவருக்கு சனைச்சரன் என்ற பெயரும் மந்தன் என்ற பெயரும் உண்டு.
நீளாதேவி, நந்தா தேவி, ஜேஷ்டாதேவி மூவரும் மனைவிமார்கள் என்றும்; குளிகன் என்பவன் புத்திரன் என்றும் சொல்லப்படுகிறது. இவர் ஆயுள் காரகன் மற்றும் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் ஆகியவற்றிக்கு இவர் அநிபதி.
அவரவர் பலாபலன்கள் ஏள்றபடி கலகம் நோய் ஆகியவற்றை உண்டாக்குவதும், நல்ல இடத்தில் தங்கி வலுப்பெற்று இருந்தால் நல்ல பலன்கள் தருவார். இவர் 12 ராசிகளை ஒருமுறை சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகாலம் ஆகும். 30 ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டு கெட்டவனும் இல்லை என்ற பழமொழியும் உண்டு.
சனி பகவானுக்கு உரியவை
ராசி மகரம் கும்பம்
திக்கு மேற்கு
அதிதேவதை எமன்
பிரத்யதி தேவதை பிரஜாபதி
தலம் திருநள்ளாறு
நிறம் கருமை
வாகனம் காகம்
சனி பகவானுக்குப் ரீதியானவை
தானியம் எள்ளு
மலர் கருங்குவளை
வஸ்திரம் கருப்பு நிற ஆடை
ரத்தினம் நீலமணி
நிவேதனம் எள்ளுப் பொடி அன்னம்
சமித்து வன்னிச்சமித்து
உலோகம் இரும்பு
தீபம் எள்ளு முடித்துவிட்ட நல்ல எண்ணை தீபம்
சனி யந்திரம்
சனி பகவானுக்கு உரிய இயந்திரத்தை ஒரு செப்பு அல்லது வெள்ளி தகட்டில் எழுதி முறைப்படி பூஜை செய்து அதை ஒரு தாயத்தில் அடைத்து கையில் அல்லது இடுப்பில் கட்டிக் கொண்டால் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி திசை நடக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
சனி பகவான் ஸ்லோகங்கள்
"சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா"
(கடன் நீங்க தினமும் ஒவ்வொரு முறை சொல்லி வரவும்)
சனிபகவான் துதி
"முனிவர்கள் தேவரேழு மூர்த்திகள்
முதலானோர்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன்
மகிமையது அல்லால் உண்டோ?
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே
காகம் ஏறுஞ் சனிபகவானே உனைத் துதிப்பேன்
தாமியனேற்கு அருள் செய்வாயே" !
"கோரிய உலகத்தின் கண்
குலவிய உயிர்கட்கெல்லாம்
மீறிடைச் சுகமளித்து
மெய்தளர் பிணியை நீக்கிச்
சீரிய துன்பம் தீர்ந்து
சிறக்கத்தீர்க காயும் நல்கும்
காரியின் கமல பாதக்
கடி மலர் தலைக் கொள்வோமே"!
"கதிரின் சேயே சனைச்சரனே
கண்கள் அகன்று நெடு உடலுடையாய்
துதி சிவன் நேயா துவள் நடையாய்
துயரம் தீர்ப்பாய் சனைச்சரனே".
சனி பகவான் காயத்ரி
"காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்"
"சூர்ய புத்ரோ தீர்க தேஹோ
விசா லாக் சிவ ப்ரிய
மந்த சார் ப்ரஸந் நாத்மா
பீடாம் ஹரது மே சனி."
சனி ஸ்துதி
"நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்"!!
சௌந்தரிய லஹரி
"த்வயா ஹ்ருதாவா லாபம் வந்து ரபரித்ருப்தேந மநஸா
ஸரீரார்தம் ஜம்போ பரப்பி ஸங்கே ஹருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஜில் மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா மாநம்ரம் குடில் ஸஸி சூடால மகுடம்.'
(நோய், கடன், விபத்து நீங்க தினமும் 11 முறையும் சொல்லவும்)
சனி பகவானைச் சாந்தப்படுத்த பல வழிகள் உள்ளன.சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்னை தானம் செய்தல் தானம் நீல நிற வஸ்திர தானம் சனி பகவானுக்கு எள் சாத நைவேத்தியம் செய்தல் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தல் சுந்தரகாண்டம் பாராயணம்செய்வதால் சனி பகவான் சந்தோஷமடைந்து கடுமையை குறைத்துக் கொள்வார்.
ஆஞ்சநேயரை சனிக்கிழமைகள் வழிபட்டு வருவதாலும் நீலக்கல்லை மோதிரம் அணிந்து கொள்வதாலும்கருப்பு நிற வஸ்திரத்தையும் என்னை தானமும் கொடுப்பதாலும் சனி தோஷங்கள் நிவர்த்தியாகும்.
வாழ்க வளமுடன்.
0 கருத்துகள்